Tamil

கொத்தமல்லி இலையின் 7 அற்புதமான ஆரோக்கிய நன்மைகள்!

கொத்தமல்லி இலையில இவ்வளவு மருத்துவ குணங்கள் இருக்குனு தெரியுமா? இதோ அதுபத்தின 7 ஆச்சரியமூட்டும் தகவல்கள்.

Tamil

வைட்டமின் ஏ, சி, கே நிறைந்தது

கொத்தமல்லி இலையில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், வைட்டமின் ஏ, சி, கே மற்றும் பல அத்தியாவசிய தாதுக்கள் நிறைந்துள்ளன. இது ஒரு ஊட்டச்சத்து புதையல்.
Image credits: Getty
Tamil

ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும்

கொத்தமல்லி இலைகள் இயற்கையாகவே ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்க உதவுகின்றன. சர்க்கரை நோயாளிகளுக்கு இது ஒரு நல்ல செய்தி.
Image credits: Getty
Tamil

கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்தும்

கொத்தமல்லி இலைகள் கல்லீரலின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. மேலும், சிறுநீரகங்கள் வழியாக உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்றவும் உதவுகிறது.
Image credits: Getty
Tamil

எலும்புகளைப் பாதுகாக்கும்

கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் கொத்தமல்லியில் உள்ளன. இது எலும்புகளின் அடர்த்தியை அதிகரித்து, ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற பிரச்சனைகளில் இருந்து பாதுகாக்கிறது.
Image credits: Getty
Tamil

செரிமான பிரச்சனைகளை சரிசெய்யும்

கொத்தமல்லி இலையில் உள்ள அந்தோசயனின்கள், வயிற்றுப் புண்கள் மற்றும் அஜீரணக் கோளாறுகளை சரிசெய்ய உதவுகின்றன.
Image credits: Getty
Tamil

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்

டெர்பினின், குவெர்செடின், டோக்கோஃபெரோல்கள் போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் கொத்தமல்லியில் நிறைந்துள்ளன. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.
Image credits: Getty
Tamil

உடல் எடையைக் குறைக்க உதவும்

கொத்தமல்லி இலைகள் பசியைக் கட்டுப்படுத்தி, உடல் எடையைக் குறைக்கவும் உதவுகின்றன. டயட்டில் இருப்பவர்கள் இதைச் சேர்த்துக்கொள்ளலாம்.
Image credits: Instagram

வெறும் வயிற்றில் சீரகத் தண்ணீர் குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?

அளவுக்கு மிஞ்சினால் பீட்ரூட்டும் ஆபத்துதான்; உஷாரா இருங்க...!

Gut Health: குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் 5 பழங்கள்!

Egg Benefits: தினமும் ஒரு முட்டை சாப்பிடுங்க... ஏன்னு காரணம் தெரியுமா?