MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • குழந்தைக்கு பிறப்பு குறைபாடு வராமல் இருக்க... கர்ப்பிணிகள் இந்த 5 விஷயங்களை மட்டும் செய்தால் போதும்!

குழந்தைக்கு பிறப்பு குறைபாடு வராமல் இருக்க... கர்ப்பிணிகள் இந்த 5 விஷயங்களை மட்டும் செய்தால் போதும்!

Birth defects: குழந்தை உடல் வளர்ச்சியில் ஏற்படும் குறைபாடுகளை பிறப்பு குறைபாடுகள் என்கிறார்கள். இதில் பல வகைகள் உள்ளன. 

2 Min read
Author : maria pani
Published : May 26 2023, 06:19 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

பிறவியிலேயே குழந்தைகள் குறையுடன் பிறப்பதை தடுக்க முடியாது என்றாலும், ஆரோக்கியமான வாழ்க்கை முறையின் மூலம் அதை குறைக்க முடியும் என சொல்லப்படுகிறது. மரபணு மாற்றங்கள், இதய பிரச்சனைகள், அன்ன பிளவு ஆகியவை பிறப்பு குறைபாடுகளில் சில நோய்களாகும். 

பிறப்பு குறைபாடுகளை தவிர்க்க ஃபோலிக் அமிலம் கர்ப்பிணிகளுக்கு உதவுகிறது. இது அத்தியாவசியமான பி வைட்டமினாகும். ஒருவேளை கர்ப்பிணிக்கு ஃபோலிக் அமில குறைபாடு இருந்தால், நரம்பு குழாய் குறைபாடுகளை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது. ஃபோலிக் அமில குறைபாட்டை தவிர்க்கும் வழிகளை இங்கு காணலாம். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25

ஃபோலிக் அமிலத்தின் தேவை: 

கர்ப்பத்தை எதிர்நோக்கி இருக்கும் பெண்கள் உடலில் ஃபோலேட் தேவையான அளவு இருந்தால் தான், பிறப்பு குறைபாட்டை 70% தடுக்க முடியும் என சொல்லப்படுகிறது. சாதாரணமாக ஃபோலிக் அமிலம் ஒருநாளுக்கு 400மைக்ரோ கிராம் பரிந்துரைக்கப்படுகிறது. இதுவே கருத்தரித்துள்ள பெண்களுக்கு 800மைக்ரோகிராம் தேவை. 

என்ன சாப்பிடலாம்? 

நாள்தோறும் 400 மைக்ரோகிராம் ஃபோலிக் அமிலம் பெற பச்சை காய்கறிகள், பீன்ஸ், பட்டாணி உண்ணலாம். மேலும் மருத்துவர் பரிந்துரையின் படி சத்துள்ள ஆகாரங்களை எடுத்துக் கொள்ள வேண்டும். 

35

அயோடின் குறைபாடு 

கர்ப்ப காலத்தில் அயோடின் குறைபாடு ஏற்படக் கூடாது. கர்ப்பிணிகளுக்கு அயோடின் தேவை அதிகமாக இருக்கும். அயோடின் குறைபாடு ஏற்படுவது நரம்பு பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். அது மட்டுமின்றி கரு இறப்பு, கிரெட்டினிசம் போன்ற ஆபத்தான பிரச்சினைகளுக்கு வாய்ப்பாக அமையும். இவை பிறவி குறைபாடு ஆகும். இப்படி நிலை வந்தால் பிறக்கும் குழந்தைக்கு மனம், உடல் வளர்ச்சி பாதிக்கப்படும். அதனால் கருத்தரிக்கும் முன்பும், கர்ப்ப காலத்திலும் கர்ப்பிணிகளுக்கு பொட்டாசியம் அயோடைடு நாள்தோறும் 150 மைக்ரோகிராம் எடுத்துக் கொள்ள மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள். 

இதையும் படிங்க: தினமும் உள்ளங்கையில் இப்படி 2 நிமிடங்கள் செய்தால் போதும்!! தீராத ஒற்றை தலைவலி கூட குறையும்..

45

கருவுறும் முன்பு ஆரோக்கியத்தில் கவனம்!! 

கருத்தரிக்க திட்டமிடும் முன்பாக உடல் எடையை கட்டுக்குள் வைக்க வேண்டும். அதிகபட்சம் 30 அல்லது அதற்கு மேற்பட்ட பிஎம்ஐ அளவுகள் கர்ப்ப காலத்தில் சிக்கல்களை ஏற்படுத்தலாம். ஊட்டச்சத்து அதிகம் உள்ள உணவுகளை சாப்பிட வேண்டும். நாள்தோறும் உடற்பயிற்சி செய்வதை பழக்கமாக வேண்டும். உடல் மட்டுமின்றி மனதையும் ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டும். என்னென்ன வைட்டமின்களை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும், என்ன உணவுகளை உண்ண வேண்டும் என்பது குறித்து மருத்துவரிடம் கலந்தாலும் செய்யுங்கள். குறிப்பாக நீரிழிவு, இரத்த அழுத்தம், தைராய்டு ஆகிய கர்ப்பகால குறைபாடுகளை தவிர்க்க மருத்துவர் உதவியை நாடுங்கள்.  

55

​கருவுறுதலை எதிர்பார்க்கும் பெண் தவிர்க்க வேண்டியவை:  

கருத்தரிக்க ஆவலாக இருக்கும் பெண்கள் புகையிலை, மது போன்ற தீங்கு செய்யும் பழக்கங்களை தவிர்க்க வேண்டும். கர்ப்ப காலத்தில் ஆல்கஹால் எடுத்துக் கொள்வது பிறப்பு குறைபாடுகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. 

உடல் உழைப்பை பழக்கப்படுத்தாமல் ஒரே இடத்தில் அமர்வது போதுமான உடற்பயிற்சி இல்லாதது மோசமான உணவு முறை தூக்கத்தை தவிர்ப்பது ஆகிய பழக்கங்கள் கருத்தரிதழில் பிரச்சனை ஏற்படுத்தலாம் 

மேலே சொன்ன விஷயங்களை தவிர்ப்பதன் மூலம் கருவுறுதலும், பிரசவமும் சுமுகமாக இருக்கும். 

இதையும் படிங்க: விரைவில் கருத்தரிக்க எத்தனை முறை உடலுறவு - என்னென்ன விஷயங்களில் கவனம்!

About the Author

MP
maria pani
Latest Videos
Recommended Stories
Recommended image1
Thyroid Health: தைராய்டு ஆரோக்கியத்திற்கு இந்த 8 ஊட்டச்சத்துக்கள் ரொம்ப முக்கியம்!
Recommended image2
Toilet: கழிவறையில் 10 நிமிடங்களுக்கு மேல் அமர்ந்தால் என்ன ஆகும்? அதிர்ச்சி தகவல்!
Recommended image3
சோடா புட்டி கண்ணாடிக்கு 'டாடா'! கண் பார்வை கூர்மையாக 5 புதுமையான வழிகள்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved