MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • Toothbrush: டூத் பிரஷ்ஷை எப்போது மாற்றணும்? மற்றவர்களுடன் Share பண்ணலாமா?

Toothbrush: டூத் பிரஷ்ஷை எப்போது மாற்றணும்? மற்றவர்களுடன் Share பண்ணலாமா?

Toothbrush: டூத் பிரஷ்ஷை எத்தனை மாதத்திற்கு ஒருமுறை மாற்ற வேண்டும்? பிரஷ்ஷை எப்படி பராமரிக்க வேண்டும்? டூத் பிரஷ்ஷை மற்றவர்களுடன் Share பண்ணலாமா? என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

2 Min read
Author : Vishnupriya
Published : Sep 04 2026, 05:53 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
டூத் பிரஷ் பராமரிப்பு
Image Credit : pinterest

டூத் பிரஷ் பராமரிப்பு

காலை, இரவு என தினமும் பல் துலக்குவதை வழக்கமாக வைத்திருப்பது வாய் மற்றும் பற்களின் ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியம். ஆனால், பல் துலக்கும் பிரஷ்ஷை சரியான நேரத்தில் மாற்றுகிறோமா? என்பதையும் கவனிக்க வேண்டும். நீண்ட நாட்கள் ஒரே டூத் பிரஷ்ஷை பயன்படுத்தினால் என்ன ஆகும்? எத்தனை நாட்களுக்கு ஒரு முறை பிரஷை மாற்ற வேண்டும்? என்பது குறித்து பல் மருத்துவர்கள் கூறுவதை தெரிந்துக்கொள்வோம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
டூத் பிரஷ்ஷை எப்போது மாற்றணும்?
Image Credit : pinterest

டூத் பிரஷ்ஷை எப்போது மாற்றணும்?

அமெரிக்க பல் மருத்துவ சங்கம் (ADA) பரிந்துரைப்படி, டூத் பிரஷ்ஷை சுமார் 3 முதல் 4 மாதங்களுக்கு ஒருமுறை மாற்ற வேண்டும். அதற்கு முன்பாகவே பிரஷ்ஷின் முட்கள் எல்லா பக்கங்களிலும் சிதறி அல்லது வளைந்து காணப்பட்டால், பிரஷ்ஷை மாற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று அர்த்தம்.

Related Articles

Related image1
Teeth Whitening : மஞ்சள் கறை பற்கள் முத்துப்போல வெண்மையாக மாறனுமா? இதை பண்ணா போதும்
Related image2
பற்கள் பலவீனமா இருக்கா? ஸ்ட்ராங்கா ஆக்க 'இந்த' உணவுகளை அடிக்கடி சாப்பிடுங்க..!
36
பிரஷ்ஷை எப்படி பராமரிக்க வேண்டும்?
Image Credit : pinterest

பிரஷ்ஷை எப்படி பராமரிக்க வேண்டும்?

ஒவ்வொரு முறை பல் துலக்கிய பிறகும் பிரஷ்ஷை சுத்தமான தண்ணீரில் நன்றாகக் கழுவி, நிமிர்ந்த நிலையில் திறந்த வெளியில் காய வைக்க வேண்டும். ஈரமாக இருக்கும் பிரஷ்ஷை உடனடியாக மூடிய கண்டெய்னர் அல்லது கவரில் வைப்பது நுண்ணுயிர்கள் வளர்வதற்கு சாதகமாக இருக்கும். மேலும், பிரஷ்ஷை மற்றவர்களின் பிரஷ்ஷுடன் உரசாதவாறு தனித்தனியாக வைப்பதும் அவசியம்.

46
டூத் பிரஷ்ஷை மற்றவர்களுடன் Share பண்ணலாமா?
Image Credit : pinterest

டூத் பிரஷ்ஷை மற்றவர்களுடன் Share பண்ணலாமா?

டூத் பிரஷ்ஷை மற்றவர்களுடன் பகிர்ந்து பயன்படுத்துவது சுகாதாரமான பழக்கம் அல்ல. ஒருவரின் வாயில் இருக்கும் பாக்டீரியா உள்ளிட்ட நுண்ணுயிர்கள் பிரஷ்ஷின் முட்களில் ஒட்டிக்கொள்ளலாம். அதே பிரஷ்ஷை மற்றொருவர் பயன்படுத்தும்போது, அந்த நுண்ணுயிர்கள் அவர்களின் வாய்க்குள் செல்ல வாய்ப்புள்ளது.

மேலும், பல் துலக்கும்போது ஈறுகளில் சிறிய காயங்கள் அல்லது ரத்தக்கசிவு ஏற்பட்டால், உமிழ்நீர் மூலம் தொற்று பரவும் அபாயம் அதிகரிக்கலாம். எனவே, குடும்ப உறுப்பினர்களாக இருந்தாலும் ஒவ்வொருவரும் தனித்தனியாக டூத் பிரஷ்ஷைப் பயன்படுத்துவதே பாதுகாப்பானதாகும்.

56
பிரஷ் வாங்கும்போது இதையும் கவனியுங்கள்!
Image Credit : pinterest

பிரஷ் வாங்கும்போது இதையும் கவனியுங்கள்!

டூத் பிரஷ் வாங்கும்போது, மென்மையான முட்கள் (Soft bristles) இருப்பதுடன், சிறிய தலைப்பகுதி கொண்ட பிரஷ்ஷை தேர்வு செய்யுங்கள். முட்களின் முனைகள் கூர்மையாக இல்லாமல், வட்டமாகவும், மென்மையாகவும் இருப்பது ஈறுகளுக்கு பாதிப்பு ஏற்படாமல் பல் துலக்க உதவும்

66
ஒரு நாளைக்கு எத்தனை முறை பல் துலக்க வேண்டும்?
Image Credit : pinterest

ஒரு நாளைக்கு எத்தனை முறை பல் துலக்க வேண்டும்?

அமெரிக்கன் டென்டல் அசோசியேஷன் (ADA) பரிந்துரைப்படி, தினமும் காலை, இரவு தூங்குவதற்கு முன்பு என இரண்டு முறை, தலா 2 நிமிடங்கள், fluoride toothpaste கொண்டு பல் துலக்குவது பற்கள் மற்றும் ஈறுகளின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க உதவும் என பரிந்துரைக்கிறது.

பல் துலக்கும்போது அதிக அழுத்தம் கொடுக்காமல் மெதுவாக துலக்க வேண்டும். மேலும், முன்பக்க பற்களை மட்டும் தேய்க்காமல், பற்களின் முன், பின், மேல் பகுதிகள் மற்றும் ஈறுகளின் ஓரங்களையும் மெதுவாக சுத்தம் செய்வது நல்லது.

About the Author

V
Vishnupriya
ஆரோக்கிய குறிப்புகள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
நகங்கள் அடிக்கடி உடையுதா? இதோ உங்களுக்கான சூப்பர் ஃபுட்ஸ்!
Recommended image2
Baby Food : 6 மாதம் முதல் 1 வயது வரை குழந்தைகள் என்னென்ன சாப்பிடலாம்? சாப்பிடக்கூடாது?
Recommended image3
இரவு 8 மணிக்கு முன் டின்னர்! உடலுக்கு கிடைக்கும் சூப்பர் நன்மைகள்!
Related Stories
Recommended image1
Teeth Whitening : மஞ்சள் கறை பற்கள் முத்துப்போல வெண்மையாக மாறனுமா? இதை பண்ணா போதும்
Recommended image2
பற்கள் பலவீனமா இருக்கா? ஸ்ட்ராங்கா ஆக்க 'இந்த' உணவுகளை அடிக்கடி சாப்பிடுங்க..!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved