வெந்நீர் vs குளிர்ந்த நீர்; வெறும் வயிற்றில் காலை குடிக்க எது சிறந்தது?
வெந்நீர் அல்லது குளிர்ந்த நீர் இவை இரண்டில் எது காலையில் வெறும் வயிற்றில் குடிக்க சிறந்தது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

Hot Water vs Cold Water in the Morning
பொதுவாக காலையில் எழுந்தவுடன் ஒரு கிளாஸ் தண்ணீர் குடிக்கும் பழக்கம் நம்மில் பலருக்கும் உண்டு. அப்படி குடிப்பது பல நன்மைகளைத் தரும். ஆனால் காலையில் குளிர்ந்து நீர் குடிப்பது நல்லதா? அல்லது வெதுவெதுப்பான நீர் குடிப்பது நல்லதா? என்று பலருக்கும் சந்தேகம் உண்டு. ஏனெனில் குளிர்ந்து நீர் குடித்தால் உடல் எடையை குறைக்க உதவுவதாக சில ஆய்வுகள் சொல்லுகின்றன. அதேசமயம் வெதுவெதுப்பான நீர் காலையில் தாகத்தை தணிப்பதுடன் மட்டுமல்லாமல் உடல் எடையையும் பராமரிக்க உதவுவதால ஆயுர்வேதம் கூறுகிறது. சரி, இப்போது இந்த பதிவில் குளிர்ந்த நீர் அல்லது வெதுவெதுப்பான நீர் இவை இரண்டில் எது குடிப்பது சிறந்தது என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
வெதுவெதுப்பான நீரை குடிப்பதன் நன்மைகள் :
1. செரிமானத்திற்கு நல்லது - காலையில் வெறும் வயிற்றில் சூடான நீரை குடித்தால் உடலில் செரிமான நொதிகளை ஊக்குவித்து செரிமானத்தை துரிதப்படுத்தும். மேலும் ரத்த ஓட்டத்தை மேம்படுத்தி செரிமான உறுப்புகள் சிறந்த முறையில் செயல்பட உதவும். இதன் விளைவாக மலச்சிக்கல், வயிற்று உப்புசம் போன்ற பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புகள் குறையும்.
2. உடலை நச்சு நீக்கும் - வெறும் வயிற்றில் சூடான நீரை குளிப்பது மூலம் உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேற்றப்படும் என்று ஆய்வு மூலமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. உடலில் போதுமான அளவு தண்ணீர் இருந்தால் நச்சுக்களானது வியர்வை மற்றும் சிறுநீர் வழியாக வெளியேறும்.
3. இரத்த ஓட்டம் மேம்படும் - காலையில் வெறும் வயிற்றில் வெதுவெதுபான நீரை குடித்தால் இரத்த நாளங்கள் விரிவடைந்து இரத்த ஓட்டம் மேம்படும். அதுமட்டுமில்லாமல் செல்கள் மற்றும் திசுகளுக்கு தேவையான ஆக்ஸிஜனும் கிடைக்கும்.
4. வலி நிவாரணம் - வெதுவெதுப்பான நீரானது தசைகளை தளர்த்தி வலியை போக்க பெரிதும் உதவுகிறது.
குளிர்ந்த நீர் குடிப்பதன் நன்மைகள் :
1. எடையை குறைக்க உதவும் - வெறும் வயிற்றில் குளிர்ந்த நீர் குடித்தால் உடல் எடை குறைவதாக 2003 ஆம் ஆண்டு நடத்திய ஆய்வில் கண்டறிந்துள்ளன. அதாவது குளிர்ந்த நீரானது வெப்பநிலை கலோரி இருப்பதை அதிகரித்து மெட்டபாலிசத்தை மேம்படுத்தும். இதனால் உடல் எடையானது குறையும்.
2. புத்துணர்ச்சி தரும் - கோடைகாலத்தில் குளிர்ந்து நீர் குடிப்பது ரொம்பவே நல்லது. இது உடல் சோர்வை போக்கி உங்களை புத்துணர்ச்சியாக்கும். எனவே காலையில் எழுந்ததில் வெறும் வயிற்றில் ஒரு கிளாஸ் குளிர்ந்த நீர் குடித்தால் நாள் முழுவதும் ஆற்றலுடன் இருப்பீர்கள்.
3. நீர்ச்சத்து - சூடான நீரை காட்டிலும் குளிர்ந்த நீரானது மிகவும் வேகமாக நம்முடைய உடலால் உறிஞ்சப்படுகிறது. குளிர்ந்த நீரானது உடலின் உறிஞ்சும் விகிதத்தை அதிகரிப்பதாக சில ஆய்வுகள் கண்டறிந்துள்ளன. உடற்பயிற்சி செய்த பிறகு நீரேற்றமாக இருப்பதற்கு குளிர்ந்த நீர் சிறந்த தேர்வு.
எது பெஸ்ட்?
உங்களது உடலின் தேவைகளை பொறுத்து நீங்கள் வெதுவெதுப்பான நீர் அல்லது குளிர்ந்த நீரை குடிக்கலாம். உங்களுக்கு செரிமான பிரச்சனைகள் அல்லது உடல்நிலை குறைவு ஏதேனும் இருந்தால் வெதுவெதுப்பான நீர் குடிக்கலாம். ஒருவேளை நீங்கள் புத்துணர்ச்சியாக உணர விரும்பினால் குளிர்ந்த நீர் குடியுங்கள்.