குட்டீஸ்களுக்கு ஹெல்தியான காலை உணவு.. லிஸ்ட் இதோ!
Healthy Breakfast For Kids : ஒவ்வொரு பெற்றோரும் குழந்தைகளின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு அவர்களுக்கு கொடுக்க வேண்டிய சில ஹெல்தியான காலை உணவுகளின் பட்டியல் இங்கே.

குட்டீஸ்களுக்கு ஹெல்தியான காலை உணவு.. லிஸ்ட் இதோ!
மாறிவரும் பருவநிலை மற்றும் தவறான உணவு பழக்க வழக்கங்களில் குழந்தைகள் எளிதில் தொற்று நோய்களுக்கு ஆளாகிறார்கள். பெரும்பாலும் குழந்தைகள் ஆரோக்கியமான உணவுகள் எதுவும் சாப்பிட தயங்குகிறார்கள். அதற்கு பதிலாக பீட்சா, பர்கர் போன்ற ஜங்க் ஃபுட் உணவுகளை தான் ரொம்பவே விரும்பி சாப்பிடுகிறார்கள். ஆனால் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான கொடுப்பது ஒவ்வொரு பெற்றோரின் கடமையாகும். இதனால்தான் அவர்களுக்கு ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை கொடுப்பது மிகவும் அவசியம் என்கின்றார்கள் நிபுணர்கள்.
அதிலும் குறிப்பாக மதியம் மற்றும் இரவு வேலையை விட காலை வேளையில் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவுகளை கண்டிப்பாக கொடுக்க வேண்டும். இத்தகைய சூழ்நிலையில் ஆரோக்கியம் தரக்கூடிய காலை உணவுகள் என்னென்ன கொடுக்கலாம் என்பதை பற்றி இங்கு பார்க்கலாம்.
இதையும் படிங்க: குளிர்காலத்துல குழந்தைகளுக்கு எந்த உணவுகளை கொடுக்க கூடாது தெரியுமா?
குழந்தைகளுக்கான ஆரோக்கியமான காலை உணவுகள்
முட்டை:
முட்டையில் கால்சியம், புரதம், வைட்டமின் டி, வைட்டமின் ஏ, வைட்டமின் சி போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இது குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டிய ஆரோக்கியமான காலை உணவுகளில் ஒன்றாகும். தினமும் காலை குழந்தைகளுக்கு ஒரு அவித்த முட்டை கொடுப்பதன் மூலம் சிறு வயதில் இருந்தே அவர்களது எலும்பு நல்ல வளர்ச்சி பெறும்.
அவல் உப்புமா:
பொதுவாக குழந்தைகள் உப்புமாவை விரும்பி சாப்பிட மாட்டார்கள். மேலும் நீங்கள் அவர்களுக்கு ஆரோக்கியமான முறையில் உப்புமா கொடுக்க விரும்பினால், ரவைக்கு பதிலாக அவளில் உப்புமா செய்து கொடுங்கள். அவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள். ஏனெனில் இது குழந்தைகளுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை அவர்களுக்கு வழங்கும்.
கீரை:
குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டிய காலையில் உணவில் கண்டிப்பாக ஏதாவது ஒரு கீரை இருக்க வேண்டும். கீரையில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இது குழந்தைகளின் மூளை வளர்ச்சி மற்றும் ஆரோக்கியத்திற்கு பேருதவியாக இருக்கும். ஒருவேளை உங்கள் குழந்தைக்கு கீரை சாப்பிட பிடிக்கவில்லை என்றால், கீரை தோசை, கீரை இட்லி, கீரை வடை என அவர்கள் விரும்பும் ரெசிபி செய்து கொடுங்கள். நிச்சயமாக உங்கள் குழந்தை விரும்பி சாப்பிடுவார்கள்.
ஓட்ஸ் இட்லி:
குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு ஓட்ஸ் மிகவும் நன்மை பயக்கும். இதில் இருக்கும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் குழந்தைகளின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு பெரிதும் உதவியாக இருக்கும். எனவே, உங்களது குழந்தையின் ஆரோக்கியமான காலை உணவில் ஓட்ஸில் இட்லி, தோசை போன்ற ஏதாவது ரெசிபி செய்து கொடுங்கள்.
இதையும் படிங்க: உங்க குழந்தைக்கு இந்த 5 உணவுகளை தினமும் சாப்பிட கொடுங்க.. இனி மடமடனு சூப்பரா வெயிட் போடும்!
ஸ்மூத்தி:
குழந்தைகளின் ஆரோக்கியமான மற்றும் விரைவான காலை உணவில் ஸ்மூத்தி ஒரு சிறந்த வழியாகும். மேலும் குழந்தைகள் இதை மகிழ்ச்சியுடன் சாப்பிடுவார்கள். எனவே, பல்வேறு வகையான பழங்கள் வைத்து செய்து கொடுங்கள்.
பழ சாலட்:
குழந்தைகளின் ஆரோக்கியமான மற்றும் புதிய காலை உணவுக்கு ஃப்ரூட் சாலட் பெஸ்ட் வழியாகும். இதில் ஆப்பிள், வாழைப்பழம், திராட்சை, ஸ்ட்ராபெரி போன்ற பல்வேறு வகையான பழங்களை நீங்கள் சேர்த்து அவர்களுக்கு கொடுக்கலாம். விரும்பினால் அதனுடன் தயிர் அல்லது தேன் சேர்க்கலாம் அது சுவையை இரட்டிப்பாகும்.