- Home
- உடல்நலம்
- Pumpkin Seeds in Winter : பூசணி விதைகளை சாதாரணமா நினைக்காதீங்க! ஒரு ஸ்பூன்ல எக்கச்சக்க மருத்துவ மகிமைகள்
Pumpkin Seeds in Winter : பூசணி விதைகளை சாதாரணமா நினைக்காதீங்க! ஒரு ஸ்பூன்ல எக்கச்சக்க மருத்துவ மகிமைகள்
குளிர்காலத்தில் பூசணி விதைகள் சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் குறித்து இந்த பதிவில் தெரிந்துகொள்ளுங்கள்.

Pumpkin Seeds in Winter
குளிர்காலத்தில் உடலுக்கு அதிக ஆற்றலும், நோய் எதிர்ப்பு சக்தியும் தேவை. இந்த நேரத்தில் சரியான உணவு எடுக்காவிட்டால் சளி, இருமல், சோர்வு போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இந்நிலையில், பூசணி விதைகள் ஒரு சிறந்த சூப்பர்ஃபுட் ஆகும். எனவே, குளிர்காலத்தில் பூசணி விதைகள் சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் குறித்து இந்த பதிவில் தெரிந்துகொள்ளுங்கள்.
நோய் எதிர்ப்பு சக்தி
குளிர்காலத்தில் பூசணி விதைகளை சாப்பிடுவது நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தும். இதில் ஜிங்க், இரும்பு, ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. ஜிங்க், நோயெதிர்ப்பு செல்களை சுறுசுறுப்பாக வைக்கிறது. இது சளி, இருமல் போன்ற பிரச்சனைகளில் இருந்து ஓரளவிற்குப் பாதுகாப்பளிக்கும்.
உடலுக்குத் தேவையான ஆற்றல்
பூசணி விதைகள் உடலுக்குத் தேவையான ஆற்றலை வழங்குகின்றன. இதில் உள்ள புரோட்டீன் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் உடனடி ஆற்றலைத் தரும். சோர்வாக உணர்பவர்களுக்கும், நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க விரும்புபவர்களுக்கும் இது ஒரு நல்ல சிற்றுண்டியாகும்.
சரும ஆரோக்கியத்திற்கு
பூசணி விதைகளில் உள்ள வைட்டமின் E மற்றும் ஒமேகா கொழுப்பு அமிலங்கள் சருமத்திற்கு ஈரப்பதத்தை அளிக்க உதவுகின்றன. இது சரும வறட்சியைத் தடுத்து, பளபளப்பாக வைத்திருக்க உதவும். மேலும் முடி ஆரோக்கியத்திற்கும் நல்லது.
சிறந்த செரிமானம்
குளிர்காலத்தில் நீர் குறைவாகக் குடிப்பதால் சிலருக்கு செரிமான பிரச்சனைகள் ஏற்படும். பூசணி விதைகளில் உள்ள நார்ச்சத்து செரிமானத்தை மேம்படுத்தி, குடல் இயக்கத்தைச் சீராக வைத்திருக்கும். இது வயிற்றின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க உதவுகிறது.
இதய ஆரோக்கியம்
பூசணி விதைகள் இதய ஆரோக்கியத்திற்கும் நல்லது. இதில் உள்ள மெக்னீசியம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகின்றன. இதில் உள்ள டிரிப்டோபான் நல்ல உறக்கத்திற்கும் உதவுகிறது. இருப்பினும், பூசணி விதைகளை அதிகமாக சாப்பிடக்கூடாது.

