- Home
- உடல்நலம்
- Sweet Potatoes in Winter : குளிர்காலத்தில் 'சர்க்கரைவள்ளிக்கிழங்கு' சாப்பிட்டால் முக்கியமான நன்மை இருக்கு! தவற விடாதீங்க
Sweet Potatoes in Winter : குளிர்காலத்தில் 'சர்க்கரைவள்ளிக்கிழங்கு' சாப்பிட்டால் முக்கியமான நன்மை இருக்கு! தவற விடாதீங்க
குளிர்காலத்தில் சர்க்கரைவள்ளிக் கிழங்கை சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியத்திற்கு கிடைக்கும் நன்மைகள் குறித்து இந்த பதிவில் காணலாம்.

Sweet Potatoes in Winter
சர்க்கரைவள்ளி கிழங்கு குளிர்காலத்தில் கண்டிப்பாக சாப்பிட வேண்டிய ஒரு முக்கியமான உணவுப்பொருள். இதில் இயற்கையாகவே இனிப்பு உள்ளதால் சாப்பிடுவதற்கு ருசியாக இருக்கும். ஏராளமான ஊட்டச்சத்துக்களும் இதில் நிறைந்துள்ளன. குளிர்காலத்தில் இதை சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியத்திற்கு கிடைக்கும் நன்மைகள் குறித்து இப்போது இந்த பதிவில் பார்க்கலாம்.
சர்க்கரைவள்ளி கிழங்கில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் :
சர்க்கரைவள்ளி கிழங்கில் வைட்டமின் சி, வைட்டமின் ஏ, வைட்டமின் பி6, பொட்டாசியம், மாங்கனீஸ், நார்ச்சத்து, கார்போஹைட்ரேட்டுகள், ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் போன்ற ஏராளமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன.
குளிர்காலத்தில் சர்க்கரை வள்ளி கிழங்கு சாப்பிடுவது நன்மைகள் :
செரிமான மண்டலம் ஆரோக்கியமாக இருக்கும் :
குளிர்காலத்தில் சர்க்கரைவள்ளி கிழங்கு சாப்பிட்டு வந்தால் செரிமான மண்டலம் ஆரோக்கியமாக இருக்கும். ஏனெனில் இதில் நார்ச்சத்து ஏராளமாக உள்ளது. இது செரிமானத்தை மேம்படுத்தி வாயு, அஜீரணம், மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் அளிக்கும்.
எடை இழப்புக்கு உதவும் :
குளிர்காலத்தில் எடையை குறைக்க முயற்சிப்பவர்கள் தங்களது உணவில் சர்க்கரை வள்ளி கிழங்கு சேர்ப்பது நல்லது. ஏனெனில் இதில் நார்ச்சத்து நிறைந்திருப்பதால் அது வயிற்றை நீண்ட நேரம் நிறைவாக வைத்திருக்கும் இதனால் பசி அதிகரிப்பது தடுக்கப்படுவதோடு, அதிகமாக சாப்பிடுவதில் இருந்து தப்பிக்கலாம். இதனால் உடல் பருமன் அதிகரிப்பதை சுலபமாக தடுக்கலாம்.
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் :
சக்கரை வள்ளி கிழங்கில் வைட்டமின் சி ஏராளமாக உள்ளது. இது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். குளிர்காலத்தில் இதை சாப்பிடுவதன் மூலம் பருவ கால நோய் தொற்றுகளில் இருந்து பாதுகாக்கப்படுவோம்.
உடலை சூடாக வைக்கும் :
குளிர்காலத்தில் சர்க்கரைவள்ளி கிழங்கு சாப்பிட்டு வந்தால் உடலை சூடாக வைத்திருக்க உதவும். மேலும் இது கார்போஹைட்ரேட்டுகளின் சிறந்த மூலம் என்பதால் நீண்டகால ஆற்றலை வழங்குவது மட்டுமல்லாமல், முழுமையாக மற்றும் திருப்தியாக உணர வைக்கும்.
இதய ஆரோக்கியத்திற்கு நல்லது :
சர்க்கரைவள்ளிக் கிழங்கில் பொட்டாசியம் நிறைந்துள்ளது. இது இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி இதய நோய் அபாயத்தை குறைத்து, இதயத்தை ஆரோக்கியமாக வைக்கும்.
ஆரோக்கியமான சருமத்திற்கு..
குளிர்காலத்தில் வறண்ட குளிர் காற்று காரணமாக சருமம் மோசமாக பாதிப்படையும். இதை தவிர்க்க சர்க்கரைவள்ளி கிழங்கு சாப்பிடுங்கள். ஏனெனில் சர்க்கரைவள்ளி கிழங்கில் இருக்கும் வைட்டமின் ஏ சூரிய ஒளி மற்றும் மோசமான வானிலையிலிருந்து உங்களது சருமத்தை பாதுகாக்கும். மேலும் சருமத்தை பிரகாசமாகவும், ஈரப்பதமாகவும் வைக்கும்.

