சர்க்கரை வள்ளிக்கிழங்கில் நார்ச்சத்து, வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. அவற்றில் பீட்டா கரோட்டின் என்ற ஆன்டிஆக்ஸிடன்ட்டும் உள்ளது.
சர்க்கரை வள்ளிக்கிழங்கில் உள்ள நார்ச்சத்து, குடல் இயக்கத்தை சீராக்கி, மலச்சிக்கலைத் தடுத்து, ஆரோக்கியமான செரிமான அமைப்புக்கு உதவுகிறது.
சர்க்கரை வள்ளிக்கிழங்கில் உள்ள பொட்டாசியம், இரத்த அழுத்த அளவைக் கட்டுப்படுத்தவும், உயர் இரத்த அழுத்த அபாயத்தைக் குறைக்கவும் உதவுகிறது.
சர்க்கரை வள்ளிக்கிழங்கில் கலோரிகள் குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும் உள்ளது. இது உடல் எடையைக் குறைக்கவும் உதவும்.
சர்க்கரை வள்ளிக்கிழங்கு குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளது. இது இரத்த சர்க்கரை அளவை சீராக வைத்திருக்க உதவுகிறது.
சர்க்கரை வள்ளிக்கிழங்கில் உள்ள நார்ச்சத்து, பொட்டாசியம் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் கொலஸ்ட்ரால் அளவைக் குறைத்து இதய நோய் அபாயத்தைத் தடுக்க உதவும்.
சர்க்கரை வள்ளிக்கிழங்கில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு சேர்மங்கள் மூளை செல்களை சேதத்திலிருந்து பாதுகாக்கின்றன.
சர்க்கரை வள்ளிக்கிழங்கில் உள்ள அதிக அளவு வைட்டமின் ஏ மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் வயதான அறிகுறிகளைக் குறைக்க உதவும்.
சர்க்கரை வள்ளிக்கிழங்கில் பீட்டா கரோட்டின் நிறைந்துள்ளது. இது பார்வையை பராமரிக்கவும், வயது தொடர்பான மாகுலர் சிதைவைத் தடுக்கவும் உதவுகிறது.