கோகம் பழம் கேள்விபட்டிருக்கீங்களா? இதனுடைய பழச்சாறு 1 டம்ளர் குடிச்சா போதும், புற்றுசெல்கள் கூட காணாம போய்டும்
கோகம் பழம் உங்களுடைய எடை குறைப்பு முதல் உடலுக்கு தேவையான அத்தனை சத்துக்களையும் கொடுக்கிறது. கோகம் பழத்தின் நன்மைகள்...
நல்ல சிவப்பு வண்ணத்தில் காணப்படும் புளிப்பு சுவை கொண்ட பழம் 'கோகம் பழம்'. இந்த கோகம் பழத்தின் சாறு புத்துணர்ச்சியூட்டும் அற்புத பானமாக இருக்கும். கோகம் பழம் சாதாரண பழமே இல்லை.. அதில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் அதிகம் உள்ளன. கிருமி நாசினிகள், அழற்சி எதிர்ப்பு பண்புகள் கோகம் பழத்தில் உள்ளன. கோகம் பழச்சாற்றை நாம் தொடர்ந்து குடித்து வர பலவிதமான நன்மைகள் உடலுக்கு கிடைக்கும்.
ஊட்டசத்துக்களின் ஸ்டார் கோகம் பழம்:
இந்த பழத்தில் உடலின் நோயெதிர்ப்பு சக்திக்கு தேவையான வைட்டமின் சி, வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் போன்ற சத்துக்களும் பொட்டாசியம், மெக்னீசியம் போன்ற கனிம தாதுக்களும் உள்ளன. செரிமான அமைப்பு மேம்பட ஒரு டம்ளர் கோகம் பழச்சாறு குடித்தால் போதும். உங்களுடைய உடல் எடையை கட்டுக்குள் வைக்கலாம். இதில் உள்ள மாலிக் அமிலம், அசிட்டிக் அமிலம், ஹைட்ரோசிட்ரிக் போன்றவை உடலுக்கு நல்ல பயன்களை தரும்.
உடலில் ஏற்படும் ஒவ்வாமைக்கு கோகம் பழம் ஏற்றது. உடலில் காணப்படும் தடிப்புகள், புண்களுக்கு குணப்படுத்த கோகம் பழம் உதவுகிறது. இதில் உள்ள ஹைபராசிடிட்டி தாக்கம் பூச்சி கடித்தலுக்கு சிகிச்சையளிக் உதவும்.
எடை குறைப்பு
எடையை குறைக்க முடியாமல் திணறி கொண்டிருப்பவர்கள் உணவு பழக்கங்களால் எடையை குறைக்க முடியும். அந்த வகையில் கோகம் பழம் உங்களுக்கு எடை குறைப்பில் உதவுகிறது. இந்த பழத்தில் உள்ள ஹைட்ராக்சில்சிட்ரிக் அமிலம் எடையை குறைக்க உதவும். ஏனென்றால் இந்த பழத்தின் சாறு குடிப்பதால் உடலில் உள்ள கொழுப்பு அமிலங்கள் குறைகின்றன. இதனால் எடை இழப்பது துரிதப்படுத்தப்படுகிறது. உடலும் எப்போதும் உற்சாகமாக காணப்படும்.
செரிமானத்தை மேம்படுத்தும்
கோகம் பழம் செரிமான அமைப்பிற்கு நல்லது. உங்களுக்கு அசிடிட்டி, மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் இருந்தால் அதை குணப்படுத்த கோகம் பழச்சாறை எடுத்துக் கொள்ளுங்கள். உங்களுடைய இரைப்பை ஆரோக்கியமாக வைத்திருக்க இது.
புற்றுநோய் சிகிச்சை
கோகம் பழத்தில் எதிர்பு பண்புகள் அதிகமாக உள்ளன. கோகம் பழத்தை சாப்பிட்டால் புற்றுநோய் செல்கள் வளர்ச்சியைத் தடுத்துவிடும். இந்த வேலையை கோகம் பழத்தில் உள்ள கார்சினோல் செய்கிறது. கல்லீரல், கணையம், பெருங்குடல், நாக்கு, சரும புற்றுநோய்களுக்கு கூட சிகிச்சையளிக்க கோகம் பழம் உதவுகிறது.
இதையும் படிங்க: கஷ்டப்படாம சர்க்கரை நோயை ஓட ஓட விரட்டணுமா? அப்ப தினமும் இந்த விதைய கொஞ்சம் வாயில போடுங்க! நம்ப முடியாத பலன்கள்
புத்துணர்வு
கோகம் பழத்தின் சாறு உடலை குளுமையாக வைத்திருக்கும். இதனால் கோடை காலத்தில் ஏற்படும் பக்கவாதம், பிற உடல் சூட்டு நோய்கள் உங்களை அண்டாது. உங்கள் வயிற்றில் உள்ள புண்களை குணப்படுத்த இந்த பழச் சாறு உதவும். கோடை காலத்தில் கோகம் பழச்சாறு அருந்துவது ரொம்ப நல்லது.
இதையும் படிங்க: நம்ம முன்னோர் சாப்பிட்ட சோளத்தில் இவ்வளவு விஷயம் இருக்கா!! அத கட்டாயம் சாப்பிட வேறென்ன காரணம் வேணும்