- Home
- உடல்நலம்
- துரத்தி துரத்தி குறி..! ஒரே பெண்ணை 41 முறை கடித்த பாம்பு... ஒவ்வொரு முறையும் உயிர்பிழக்கும் அதிசயம்..!
துரத்தி துரத்தி குறி..! ஒரே பெண்ணை 41 முறை கடித்த பாம்பு... ஒவ்வொரு முறையும் உயிர்பிழக்கும் அதிசயம்..!
சிறுமியின் குடும்பத்தினர் ஒவ்வொரு முறையும் பாம்பு கடித்தது பற்றி கூறும்போதும், ‘‘ பாம்புகள் ஒரே பெண்ணை 41 முறை தொடர்ந்து கடித்து வருவது எதனால் என்று புரியவில்லை’’ என்கிறனர்.

சிறுமையை மட்டுமே குறி வைக்கும் பாம்பு
ஒரு முறை பாம்பு கடித்தாலே உயிர் பிழைப்பார்களா? என்பது சந்தேகமே. ஆனால் ஒரு சிறுமியை 41 முறை பாம்பு கடித்தும் ஒவ்வொரு முறையும் அவர் பிழைத்துக் கொள்வதை மருத்துவர்களும், கிராமவாசிகள் ஆச்சரியப்படுகின்றனர்.
உத்தரப்பிரதேசத்தின் பாராபங்கி மாவட்டத்தில் அடிக்கடி நடக்கும் இந்தச் சம்பவம் இப்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. ஜவஹர்பூர் கிராமத்தைச் சேர்ந்த ஒரு இளம் பெண்ணை இதுவரை 41 முறை பாம்பு கடித்துள்ளது. ஆனால் ஒவ்வொரு முறையும் சிகிச்சைக்குப் பிறகு அவர் உயிர் பிழைத்து விடுகிறார். குடும்பத்தில் அத்தனை பேர் இருந்தாலும் பாம்பு இந்த பெண்ணை மட்டுமே மீண்டும் மீண்டும் குறிவைக்கிறது. அது மற்ற குடும்ப உறுப்பினர்களை ஒருபோதும் தீண்டியதில்லை என்கிறார்கள் அந்தச் சிறுமியின் குடும்பத்தினர்.
கதையும் இல்ல நாவலும் இல்ல..
அந்த கிராமத்தில் வசிக்கும் முனாவ்வர் அலியின் மகள் ரஹ்மத்துல் பானோ. அவரை நேற்று மாலை சுமார் 5 மணியளவில் மீண்டும் ஒரு பாம்பு கடித்தது. குடும்பத்தினர் அவசரமாக அந்தச் சிறுமியை தேவா சமூக சுகாதார மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர் நேற்று மாலை 6:35 மணிக்கு அனுமதிக்கப்பட்டார். சிறுமி மயக்க நிலையில் மருத்துவர்களின் மேற்பார்வையில் வைக்கப்பட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட சிறுமியின் சகோதரர் ஆசாத் இது குறித்து கூறுகையில், "என் சகோதரியை இதற்கு முன்பு வெவ்வேறு சந்தர்ப்பங்களில் 40 முறை பாம்புகள் கடித்துள்ளது. நாங்கள் அவரை சிகிச்சைக்காக லக்னோவின் ராம் மனோகர் லோஹியா மருத்துவமனை மற்றும் அதிர்ச்சி மையத்திற்கு அழைத்துச் சென்றோம். ஆனால் அவள் ஒவ்வொரு முறையும் உயிர் பிழைத்தாள். இது ஒரு நாவல் அல்லது கதை போல் தோன்றலாம், ஆனால் இதுதான் உண்மை" என்கிறார்.
இயற்கைக்கு அப்பாற்பட்ட நிகழ்வு
அதே நேரத்தில், தேவா சமூக சுகாதார மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள், மருத்துவ சேவையில் இதுபோன்ற ஒரு சூழ்நிலை அரிதானது. தற்போது சிறுமியின் உடல்நிலை சீராக இருந்தாலும், குடும்பத்தினர் இதை ஒரு இயற்கைக்கு அப்பாற்பட்ட நிகழ்வாகக் கருதுகின்றனர். அதே நேரத்தில், பாம்பு ஏன் இந்த பெண்ணை மட்டும் மீண்டும் மீண்டும் குறிவைக்கிறது என்பது ஆச்சரியமாக இருக்கிறது. அதற்கான காரணமும் யாருக்கும் தெரியவில்லை. இந்த சிறுமி எங்களிடம் பல முறை அழைத்து வரப்பட்டு காப்பாற்றப்பட்டுள்ளார்’’ என்கிறார்கள்.
தொடரும் சந்தேகம்
சிறுமியின் குடும்பத்தினர் ஒவ்வொரு முறையும் பாம்பு கடித்தது பற்றி கூறும்போதும், ‘‘ பாம்புகள் ஒரே பெண்ணை 41 முறை தொடர்ந்து கடித்து வருவது எதனால் என்று புரியவில்லை’’ என்கிறனர்.