de-stress | மன அழுத்தப் பிரச்னையில் இருந்து விடுபட உதவும் 5 உணவுகள்..!!
மன ஆரோக்கியத்தை மேம்படுத்த உணவுமுறை மாற்றங்களையும் செய்யலாம். மன அழுத்தத்தைக் குறைக்கவும், மகிழ்ச்சியாக உணரவும் உதவும் சில உணவுகள் குறித்து தெரிந்துகொள்வோம்.
stress
நாம் சாப்பிடும் உணவுதான் நமது ஆரோக்கியத்தை பெரிய அளவில் தீர்மானிக்கிறது. எனவே, உங்களுக்கு என்ன உடல்நலப் பிரச்சினைகள் இருந்தாலும், முதலில் உங்கள் உணவில் சில மாற்றங்களைச் செய்ய முயற்சிக்க வேண்டும். இன்னும் சரியாகவில்லை என்றால், வேறு ஏதாவது காரணம் இருக்க வேண்டும். அப்போது மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும். இதன் மூலம், உணவில் மாற்றங்களைச் செய்து, மன ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம். மன அழுத்தத்தைக் குறைக்கவும், மகிழ்ச்சியாக உணரவும் உதவும் சில உணவுகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.
டார்க் சாக்லேட்
இதில் உள்ள சில பொருட்கள் 'எண்டோர்பின்' என்ற ஹார்மோனை உற்பத்தி செய்ய உதவுகின்றன. இந்த ஹார்மோன் வலி மற்றும் மன அழுத்தத்தை போக்க உதவுகிறது. டார்க் சாக்லேட்டில் உள்ள மெக்னீசியம் மன அழுத்தத்தையும் பதட்டத்தையும் குறைக்க பெரிதும் உதவுகிறது.
avocado
அவகேடோ
வெண்ணெய் பழம் பல ஆரோக்கிய நன்மைகளை வழங்கும் ஒரு உணவு. இதில் நார்ச்சத்து, பொட்டாசியம், ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் வைட்டமின் பி6 ஆகியவை உள்ளன. இவை அனைத்தும் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். மகிழ்ச்சியின் ஹார்மோன் எனப்படும் 'செரோடோனின்' உற்பத்திக்கு அவகேடோ பெரிதும் உதவுகிறது.
amla
நெல்லிக்காய்
நெல்லியில் ஆண்டி ஆக்சிடண்டுகள் நிறைந்து காணப்படுகின்றன. அதனால் இதை அடிக்கடி சாப்பிடுவது மன அழுத்தத்தை எதிர்த்துப் போராட உதவுகிறது. மேலும் இந்த நெல்லிகளில் வைட்டமின் சி அதிகளவில் உள்ளது. இதை சாப்பிடுவது மன அழுத்தத்திற்கு எதிராக செயல்பட்டு, மனதை அமைதி அடைய வைக்கும்.
கீரைகள்
முருங்கைக் காய், அதனுடைய கீரையை அவ்வப்போது சாப்பிடுவது மன அழுத்தத்திலிருந்து விடுபட உதவுகிறது. இவற்றில் உள்ள வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உடலுக்கு பல்வேறு வகையில் நன்மை செய்கிறது. கீரையில் உள்ள மெக்னீசியமும் மன அழுத்தத்தைப் போக்க உதவுகிறது.
கோடையில் ரத்த சக்கரை அளவை கட்டுக்குள் வைக்க இதைச் செய்யுங்க..!!
புளித்த உணவுகள்
புளித்த உணவுகளில் உள்ள பாக்டீரியாக்கள், எடுத்துக்காட்டு தயிர், குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகின்றன. குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது மன அழுத்தத்திலிருந்து விடுபட உதவும். அதனுடன் பதட்டமும் குறையும்.