- Home
- உடல்நலம்
- Bad Breath : மோசமான வாய் துர்நாற்றத்தால் பேசவே கூச்சமா? இந்த உணவுகளை சாப்பிட்டால் கெட்டவாடை நீங்கும்
Bad Breath : மோசமான வாய் துர்நாற்றத்தால் பேசவே கூச்சமா? இந்த உணவுகளை சாப்பிட்டால் கெட்டவாடை நீங்கும்
மோசமான வாய் துர்நாற்றத்தை சமையலறையில் இருக்கும் சில பொருட்களைக் கொண்டு சரி செய்வது எப்படியென்று இங்கு காணலாம்.

Best Foods For Bad Breath
வாய் துர்நாற்றம் என்பது பெரும்பாலானோர் சந்திக்கும் ஒரு பொதுவான பிரச்சனையாகும். வாய் துர்நாற்றத்தால் பிறரிடம் பேசக்கூட கூச்சமாக இருக்கும். அந்த அளவிற்கு இது மிகுந்த சங்கடத்தை ஏற்படுத்தும். காலை இரவு என இரண்டு வேளையும் பல் துலக்கினாலும், நாக்கை சுத்தமாக வைத்துக் கொண்டாலும் வாய் துர்நாற்றமாக வீசுகிறது என்றால், உங்களது குடல் பிரச்சனையாக இருக்கிறது என்று அர்த்தம். இப்படி குடல் பிரச்சனையால் வாய் துர்நாற்றம் வீசுகிறது என்றால் அதை சரி செய்வதற்கு சில சமையல் பொருட்கள் உதவும். அவை என்னவென்று இங்கு பார்க்கலாம்.
இஞ்சி
இஞ்சியில் இருக்கும் ஜிஞ்செரோல் உமிழ்நீர் உற்பத்தி மற்றும் குடல் இயக்கத்தை அதிகரிக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். மேலும் இது வயிற்றை விரைவாக காலி செய்து, வயிற்றில் இருக்கும் உணவை நீண்ட நேரம் கொதித்து, வாய் துர்நாற்றம் ஏற்படும் வாய்ப்பை குறைக்கும்.
புதினா இலைகள் :
புதினா இலையில் இருக்கும் மெந்தால் மற்றும் ஆன்டி பாக்டரியல் பண்புகள் குடலில் இருக்கும் பாக்டீரியாக்களை அழித்து வாய் துர்நாற்றத்தை நீக்கும். மேலும் இது செரிமானத்தை சீராக்கும் மற்றும் வாய்க்கு புத்துணர்ச்சி அளிக்கும்.
சோம்பு :
சோம்பு விதையில் இருக்கும் அனெத்தோல் என்னும் சேர்மம் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளன. சோம்பு குடல் வாயுவை குறைக்கவும், வாய் துர்நாற்றத்தை தடுக்கவும் பெரிதும் உதவும். எனவே உணவு சாப்பிட்ட பிறகு சிறிது சோம்பு வாயில் போட்டு மெல்லுங்கள்.
கிராம்பு :
கிராம்பில் இருக்கும் வலுவான ஆன்டி செப்டிக் மற்றும் ஆன்ட்டி பாக்டரியல் பண்புகள் துர்நாற்றத்தை உண்டாக்கும் பாக்டீரியாக்களை முற்றிலும் அழித்துவிடும். மேலும் வாய்க்கு புத்துணர்ச்சியை கொடுக்கும்.