MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • Sea Foods : உணவில் கட்டாயம் சேர்க்க வேண்டிய 5 கடல் உணவுகள்.. எவ்வளவு சத்துக்கள் இருக்கு தெரியுமா?

Sea Foods : உணவில் கட்டாயம் சேர்க்க வேண்டிய 5 கடல் உணவுகள்.. எவ்வளவு சத்துக்கள் இருக்கு தெரியுமா?

கடல் உணவுகள் அதிக ஊட்டச்சத்தம் என்பதை ஊட்டச்சத்துக்களின் களஞ்சியமாக அவை விளங்குகின்றன புரதம் ஒமேகா-3 அயிட்டமீன்கள் தாதுக்கள் நிறைந்துள்ளன நாம் கட்டாயம் சாப்பிட வேண்டிய ஐந்து கடல் உணவுகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

2 Min read
Author : Ramprasath S
Published : Jul 16 2025, 11:45 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
மீன்கள்
Image Credit : stockPhoto

மீன்கள்

உடலுக்குத் தேவையான ஆரோக்கியமான கொழுப்பு அமிலங்களில் ஒன்றாக ஒமேகா 3 அமிலங்கள் விளங்கி வருகிறது. இந்த கொழுப்பு அமிலங்கள் பெரும்பாலும் சால்மன், கானாங்கெளுத்தி, சூரை, மத்தி ஆகிய மீன்களில் நிறைந்துள்ளது. இந்த ஆரோக்கியமான கொழுப்புகள் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை குறைக்க உதவுகின்றன. இதனால் மாரடைப்பு, பக்கவாதம் ஏற்படும் அபாயமும் குறைவாக உள்ளது. மீன்களை அதிகம் உட்கொள்வது மூளையின் ஆரோக்கியத்திற்கும், நினைவாற்றல் மேம்பாட்டிற்கும் உதவுகிறது. ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு அத்தியாவசியமானது. குழந்தைகளின் கண் ஆரோக்கியத்தை பராமரிக்கவும், கண்குறைபாடுகளை தடுக்கவும் மீன் உணவுகள் உதவுகிறது. மேலும் இதில் உள்ள வைட்டமின் டி எலும்புகளை பலப்படுத்தவும் உதவுகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
நண்டு
Image Credit : stockPhoto

நண்டு

நண்டில் கால்சியம், புரதம், துத்தநாகம், தாமிரம், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் ஆகியவை உள்ளன. கால்சியம் நிறைந்திருப்பதால் நண்டு சாப்பிடுபவர்களுக்கு எலும்பு மற்றும் பற்களின் ஆரோக்கியம் மேம்படுகிறது. புரதம் நிறைந்த கடல் உணவுகளில் ஒன்றாக நண்டு விளங்குகிறது. இதில் இருக்கும் துத்தநாகம் செல்களின் வளர்ச்சிக்கும், காயங்களை குணப்படுத்தவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது. இதில் உள்ள தாமிரம் இரும்புச் சத்தை உறிஞ்சுவதற்கும், இரத்த சிவப்பணுக்களின் உற்பத்திக்கும் உதவுகிறது. மீன்களைப் போலவே நண்டுகளும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்தவை. நண்டு சாப்பிடுபவர்களுக்கு ஞாபக மறதி பிரச்சனை குறையும் என சில ஆய்வுகள் கூறுகின்றன.

35
இறால்
Image Credit : stockPhoto

இறால்

கடல் உணவுகளில் மிக முக்கியமான உணவு வகை இறால்களாகும். இதில் உயர்தர புரதம், செலினியம், வைட்டமின் பி12, குறைந்த கலோரிகள் நிறைந்துள்ளது. இதில் உள்ள புரதங்கள் தசை வளர்ச்சிக்கு அத்தியாவசியமானதாகும். செலினியம் ஒரு சக்திவாய்ந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் என்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், செல்களை சேகத்திலிருந்து பாதுகாக்கவும் உதவுகிறது. இதில் உள்ள வைட்டமின் பி12 இரத்த சிவப்பு அணுக்களின் உற்பத்திக்கு முக்கிய பங்கு வகிப்பதோடு, நரம்பு மண்டலத்தின் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கிறது. குறைந்த கலோரிகள் இருப்பதால் உடல் எடையை குறைக்க விரும்புவர்களுக்கு இறால் ஒரு சிறந்த இறைச்சி தேர்வாகவும் உள்ளது.

45
கணவாய்
Image Credit : stockPhoto

கணவாய்

கணவாய் வகை மீன்கள் பற்றி பலருக்கும் தெரிவதில்லை. ஆனால் இந்த மீன்களும் புரதம் நிறைந்த ஒரு உணவாகும். இதில் இரும்புச்சத்து அதிகம் இருப்பதால் இரத்த சோகையை தடுக்கவும், ஆக்ஸிஜன் போக்குவரத்திற்கு தேவையான இரும்புச்சத்தை உடலுக்கு வழங்குகிறது. வைட்டமின் பி12 நிறைந்திருப்பதால் நரம்பு மண்டல ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. சரும சுருக்கங்கள், வயதான தோற்றம் வராமல் தடுக்கும் கொலாஜன் உற்பத்திக்கு தேவையான தாமிரத்தை இது உடலுக்கு வழங்குகிறது.

55
சிப்பிகள்
Image Credit : stockPhoto

சிப்பிகள்

மீன்களைப் போலவே சிப்பிகளும் பல ஆரோக்கிய நன்மைகள் நிறைந்த ஒரு கடல் உணவாகும். இதில் துத்தநாகம் மிக அதிகமாக நிறைந்துள்ளது. இதன் காரணமாக செல்களின் வளர்ச்சி, இனப்பெருக்க ஆரோக்கியம், நோய் எதிர்ப்பு சக்தி ஆகியவை அதிகரிக்கிறது. உடல் செல்களை சேதமடையாமல் பாதுகாக்கும் செலினியமும் சிப்பிகளில் கணிசமாக உள்ளது. மேலும் இரும்புச்சத்து, வைட்டமின் பி12 மற்றும் பிற வைட்டமின்களையும் சிப்பிகள் கொண்டுள்ளன.

குறிப்பு: கடல் உணவுகளை அதிக மசாலாக்கள் சேர்த்து வறுப்பதற்கு பதிலாக வேக வைத்தோ அல்லது குழம்பாக சமைத்த ஒன்பது அதன் முழு ஊட்டச்சத்துக்களை பெறவும் சில வகை மீன்களில் பாதரசங்கள் அதிகம் இருக்கலாம் எனவே குறைவான பாதரசம் உள்ள மீன்களான சால்மன் மத்தி போன்ற மீன் வகைகளை தேர்ந்தெடுப்பது நல்லது எந்த உணவையும் போல கடல் உணவுகளையும் அளவோடு எடுத்துக் கொள்ள வேண்டும் கடல் உணவுகளால் ஒவ்வாமை ஏற்பட்டால் கடல் உணவுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும் அல்லது மருத்துவரை அணுக வேண்டும்.

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஆரோக்கியம்
ஆரோக்கிய குறிப்புகள்
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
1st ODI • NZ vs IND 2026
NZNZ
Wed, 4 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Water Sipper: 2K கிட்ஸ் ஏன் இந்த வாட்டர் சிப்பருக்கு இவ்ளோ முக்கியத்துவம் தராங்க?
Recommended image2
Rasam Vadai : ரசத்தில் ஊறிய மென்மையான ரச வடை..ஒரு முறை செய்தால் மீண்டும் மீண்டும் செய்வீங்க!
Recommended image3
Kambu Paal Urundai : கம்பு பால் உருண்டை ..தேங்காய்ப்பால், வெல்லம் சேர்த்து இப்படி ஒரு முறை செய்து பாருங்க!
Related Stories
Recommended image1
River Fish Benefits : ஆற்று மீன்கள் சாப்பிடலாமா? கொட்டிக்கிடக்கும் ஏராளமான நன்மைகள்
Recommended image2
Fish Foods : இந்த 9 வகையான மீன்களை அடிக்கடி சாப்பிடுங்கள்.. கொட்டிக்கிடக்கும் நன்மைகள்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved