- Home
- உடல்நலம்
- சிறுநீர் கழித்த உடனே தண்ணீர் குடிக்கும் பழக்கம் இருக்கா? இந்த 'ஆபத்தான' நோய் வரும் ஜாக்கிரதை!
சிறுநீர் கழித்த உடனே தண்ணீர் குடிக்கும் பழக்கம் இருக்கா? இந்த 'ஆபத்தான' நோய் வரும் ஜாக்கிரதை!
Drinking Water After Urination : சிறுநீர் கழித்த உடனே தண்ணீர் குடிக்கலாமா? கூடாதா? என்பதை பற்றி இங்கு காணலாம்.

சிறுநீர் கழித்த உடனே தண்ணீர் குடிக்கும் பழக்கம் இருக்கா? இந்த 'ஆபத்தான' நோய் வரும் ஜாக்கிரதை!
உடலை ஆரோக்கியமாக வைக்க ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் சீரான உணவுப் பழக்கத்தை பின்பற்றுவது மிகவும் அவசியம். இதனுடன் சில ஆரோக்கியமான பழக்கவழக்கங்களையும் பின்பற்ற வேண்டும். உங்களுக்கு தெரியுமா.. நீங்கள் தண்ணீர் குடிக்கும் விதமும் நீங்கள் சாப்பிடும் உணவும் உங்களது உடலில் நேரடியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று. பல நேரங்களில் நம்மிடம் இருக்கும் சில பழக்கங்களால் உடல்நலம் பாதிக்கப்படும். அவற்றில் ஒன்று தான் சிறுநீர் கழித்த பிறகு உடனே தண்ணீர் குடிப்பது.
சிறுநீர் கழித்த உடனேயே தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் விளைவுகள்
பலரிடமும் இந்த பழக்கம் இருக்கும். அவர்கள் பெரும்பாலும் இரவில் சிறுநீர் கழிக்க எளிது சிறுநீர் கழித்த உடனேயே தண்ணீர் குடிப்பார்கள். இதை தொடர்ந்து செய்தால் அது உங்களது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் தெரியுமா? எனவே, சிறுநீர் கழித்த உடனே தண்ணீர் குடித்தால் அது உங்களது ஆரோக்கியத்தில் என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும், தண்ணீர் குடிப்பதற்கான சரியான நேரம் எது என்பதை பற்றியும் இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
இதையும் படிங்க: யூரின் கொஞ்சமா போகுதா..? அசால்டா இருக்காதீங்க... இந்த ஆபத்தான நோய்கள் வரும்!
சிறுநீர் கழித்த உடனேயே தண்ணீர் குடிக்க கூடாது ஏன்?
சிறுநீர் கழித்த உடனேயே தண்ணீர் குடிக்கும் போது சிறுநீரகம் தொடர்பான பல மோசமான பிரச்சனைகளை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. ஆனால், நீங்கள் இதை எப்போதாவது செய்தால் எந்தவித பிரச்சனையும் ஏற்படுத்தாது. ஆனால் இந்த பழக்கத்தை நீங்கள் தொடர்ந்து செய்யும்போது அது சிறுநீரகம் தொடர்பான பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் என்பது நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். உண்மையில் சிறுநீர்க் கழிக்கும் போது சிறுநீர்ப் பையானது காலியாகிவிடும். ஆனால் சில கூறுகள் அதில் அப்படியே இருக்கும். அதை சிறுநீர் குழாய் வழியாக வெளியேற முடியாமல் இருக்கும். இத்தகைய சூழ்நிலையில் நீங்கள் சிறுநீர் கழித்த பிறகு உடனடியாக தண்ணீர் குடித்தால் இந்த தனிமங்கள் பையில் இருக்கும் தண்ணீரில் கரைய முடியாமல் அதில் அப்படியே தங்கிவிடும். இதன் காரணமாக தான் சிறுநீரக கற்கள் ஏற்படும் பிரச்சனை அதிகரிக்கிறது.
இதையும் படிங்க: குளிக்கும் போது சிறுநீர் வருதா? 'இந்த' காரணமா இருக்கலாம்!!
எப்போது தண்ணீர் குடிக்கலாம்?
சிறுநீர் கழிப்பதற்கு முன் தண்ணீர் குடிக்கலாம். இப்பஇ செய்வதன் மூலம் ஆரோக்கியத்தில் எந்தவித பாதிப்பும் ஏற்படாது. மேலும் சிறுநீர் தொடர்பான பிரச்சனைகளையும் தவிர்க்கலாம்.
சிறுநீர் கழித்த பிறகு எப்போது தண்ணீர் குடிக்க வேண்டும்?
நிபுணர்களின் கூற்றுப்படி, சிறுநீர் கழித்த உடனேயே தண்ணீர் குடிக்காமல் குறைந்தது 15 நிமிடம் கழித்து தண்ணீர் குடிக்க வேண்டும் இதனால் சிறுநீர் பாதை தொற்று ஏற்படும் அபாயம் குறையும். அதுவும் ஒரு கிளாஸ் தண்ணீர் மட்டுமே குடிக்க வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் அதிகமாக குடிப்பது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல..
எப்போதெல்லாம் தண்ணீர் குடிக்க கூடாது?
- வெள்ளரி, முலாம்பழம், தர்பூசணி போன்ற பழங்களை சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிக்கவே கூடாது. அது உங்களது ஆரோக்கியத்திற்கு மோசமான தீங்கு விளைவிக்கும்.
- வெயிலில் இருந்து வந்த உடனேயே சூடான பால், டீ அல்லது தண்ணீர் ஒருபோதும் குடிக்க வேண்டாம்
- உடற்பயிற்சி செய்த உடனே தண்ணீர் குடிப்பதும் தவறு.
- வறுத்த உணவுகள், எண்ணெயில் பொறித்த உணவுகளை சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிப்பதை தவிர்க்கவும்