இதுபோன்ற குறிப்பிட்ட அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகுங்கள்..!!
இந்தியாவில் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆனால் அவர்களில் பெரும்பாலானோருக்கு தங்களுக்கு இருக்கக்கூடிய பாதிப்பு தெரியவில்லை என்று ஆய்வுகள் கூறுகின்றன. அந்த வகையில் டைப் 2-க்கான நீரிழிவு நோய் அறிகுறிகளை தெரிந்துகொள்வது குறித்து விரிவாக பார்க்கலாம்.
அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கும் உடல்நலப் பிரச்சனைகள் ஏராளம். அதில் சில பிரச்னைகள் சாதாரணமானது என்றாலும், குறிப்பிட்ட அறிகுறிகளை அற்பமாக எடுத்துக்கொள்ளாது. அதற்காக எல்லாவிதமான உடல்நலப் பிரச்னைகளையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்று கிடையாது. அதன்படி பலராலும் சட்டென புரிந்துகொள்ள முடியாத பாதிப்பு டைப் 2 நீரிழிவு. இதனுடைய அறிகுறிகள் பொதுவாக இருப்பதால், பலரும் தங்களுக்கு இந்நோய் பாதிப்பு இருப்பது தெரியாமல் இருப்பதாக ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. அதன்படி முன்கூட்டியே டைப் 2 நீரிழிவு ஏற்படுவதற்கான அறிகுறிகள் என்ன? அவற்றை ஒவ்வொன்றாக பார்க்கலாம்.
skin care
சருமத்தில் மாற்றம்
தோலில் நிறமாற்றம் மற்றும் புள்ளிகள் தோன்றுவது ஒரு அறிகுறியாகும். தோல் தடித்தல் மற்றும் நிறமாற்றம் ஆகியவை தோன்றும். இந்த அறிகுறி பொதுவாக முழங்கால்கள், கழுத்து, அக்குள் அல்லது மூட்டுகளில் காணப்படுகிறது. இன்சூலின் ஹார்மோனில் இருக்கும் பிரச்னையால் இதுபோன்ற அறிகுறிகள் ஏற்படுகின்றன.
urine
அடிக்கடி சிறுநீர் கழித்தல்
இன்சுலின் ஹார்மோனின் உற்பத்தி குறைவது அல்லது இன்சுலின் ஹார்மோனுக்கு ஏற்றவாறு உடல் திறம்பட செயல்பட முடியாத நிலை தான் டைப் 2 நீரிழிவு பாதிப்பாகும். இந்த பாதிப்பை கொண்டவர்களுக்கு ஏற்படும் முக்கிய அறிகுறிகளில் ஒன்று அதிக தாகம் மற்றும் அடிக்கடி சிறுநீர் கழித்தல். இரத்தத்தில் குளுக்கோஸ் மெதுவாக குவிவதால், சிறுநீரகங்கள் சிறுநீரின் மூலம் அதை வெளியேற்ற முயற்சிப்பதால் தாகம் அதிகரிக்கிறது.
vision
பார்வையில் குறைபாடு
பார்வைக் குறைபாடுகளும் நீரிழிவு நோயின் அறிகுறியாக இருக்கலாம். இதன் முக்கிய அறிகுறி பார்வை மங்கலாக தெரியும். இருப்பினும், பெரும்பாலான சந்தர்ப்பங்களில், நீரிழிவு நோயின் ஆரம்பத்தில் பார்வை பிரச்சினைகள் ஏற்படாது. இதுபோன்ற அறிகுறி உங்களுக்கு இருந்தால், நோய் பாதிப்பு தீவிரமடைந்து வருவது குறிப்பிடத்தக்கது. உடனடியாக மருத்துவரை அணுகுவது முக்கியம்.
பல் துலக்கும்போது ரத்தம் வருகிறதா? இந்த பிரச்னையாக இருக்கலாம்..!!
woman health issues
அடிக்கடி சோர்வு
அடிக்கடி சோர்வு வருவது, உட்கார வேண்டும் என்கிற மனநிலை போன்றவையும் டைப் 2 நீரிழிவு பாதிப்புக்கான முக்கிய அறிகுறிகளாக இருக்கலாம். ஆனால் அதே சமயத்தில் இது நீரிழிவினால் ஏற்படுகிறது என்றும் சொல்லிவிட முடியாது. அதனால் நீங்கள் அடிக்கடி சோர்வாக ஏற்படுவது போல உணர்ந்தால் உடனடியாக மருத்துவரை சந்தியுங்கள். வேறு நோய் பாதிப்பு காரணமாகவும் உடலுக்கு சோர்வு வரக்கூடும்.
45 வயதுக்கு மேற்பட்டவர்கள் சர்க்கரை நோயை பரிசோதிக்க வேண்டும். இளைஞர்கள் இதுபோன்ற பிரச்சனைகளை இலகுவாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்று சொல்லவில்லை, ஆனால் நாற்பத்தைந்து வயதுக்கு பிறகு அடிக்கடி உடல் பரிசோதனை செய்துகொள்வது முக்கியம்.