பி12 சத்துக்கு முட்டை, சிக்கனுக்கு பதிலா சீரகம் சாப்பிடலாமா? நிபுணர்கள் தகவல்
முட்டை மற்றும் கோழி கறிக்கு பதிலாக வைட்டமின் பி12 சத்தை சீரகம் சாப்பிடுவதன் மூலம் பெறலாமா? இது குறித்து நிபுணர்கள் சொல்வது என்ன என்பதை குறித்து இங்கு பார்க்கலாம்.

Vitamin B12 Sources
Cumin Replace Eggs Chicken for Vitamin B12: Expert's Opinion : வைட்டமின் பி12 என்ற ஊட்டச்சத்து உடலை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. இந்த வைட்டமின் உடலில் ரத்த சிவப்பணுக்களை உற்பத்தி செய்ய, டிஎன்ஏ தொகுப்பு மற்றும் நரம்பு மண்டலத்தின் சரியான செயல்பாட்டை பராமரிப்பதற்கு பெரிதும் உதவுகின்றது. கூடுதலாக ஆற்றல் உற்பத்தியை அதிகரிக்க இந்த வைட்டமின் உதவுகிறது. இந்த வைட்டமின் குறைபாட்டால் உடலில் ரத்த சோகை, அதிகப்படியான சோர்வு, நினைவாற்றல் இழப்பு, கை கால்களில் கூச்ச உணர்வு மற்றும் மனநிலை தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும்.
Vitamin B12 Sources
பொதுவாக இந்த வைட்டமின் குறைபாடு சைவ உணவு சாப்பிடுபவர்களிடையே தான் அதிகமாக காணப்படும். காரணம் இந்த வைட்டமின் இறைச்சி, முட்டை மற்றும் பால் பொருட்களில் தான் அதிகம் காணப்படும். இருப்பினும், சீரகம் வைட்டமின் பி12 நல்ல மூலமாக கருதப்படுவதால், முட்டை, கோழிக்கு பதிலாக வைட்டமின் 12 இன் சத்தை பெறலாமா? இது குறித்து நிபுணர்கள் சொல்வது என்ன என்பதை குறித்து இங்கு பார்க்கலாம்..
இதையும் படிங்க: வைட்டமின் பி12 குறைவாக இருந்தால் உடலில் என்ன நடக்கும்? மருத்துவர் சொன்ன அதிர்ச்சி தகவல்..
Vitamin B12 Sources
நிபுணர்களின் கருத்து?
இதுகுறித்து நொய்டாவில் இருக்கும் டயட் மந்த்ரா கிளினிக் உணவியல் நிபுணர் கூறுகையில், சீரகம் சமையலறையில் பயன்படுத்தப்படும் மசாலா பொருட்கள் ஒன்றாகும். இதில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உட்பட்ட பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இது ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளை வழங்கும் சீரகத்தில் வைட்டமின் பி12 - ம் உள்ளது. ஆனால் முட்டை, சிக்கனை விட இதில் வைட்டமின் பி12 அளவு மிகக் குறைவு என்று ஆராய்ச்சி சொல்லுகின்றது. இத்தகைய சூழ்நிலையில், இது சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நன்மை என்றாலும், வைட்டமின் பி12 சமாளிக்குமா என்று கேட்டால் கண்டிப்பாக இல்லை. உண்மையில், வைட்டமின் பி12 அசைவ உணவுகளில் தான் அதிகமாக உள்ளன. மேலும் சில சைவ உணவுகளில் செறிவூட்டப்பட்ட அளவில் வைட்டமின் பி12 உள்ளன. அதாவது சோயா, பாதாம், ஓட்ஸ் போன்றவற்றில் வைட்டமின் டி12 உள்ளன. மேலும் செறிவூட்டப்பட்ட தானியங்களிலும் வைட்டமின் பி12 காணப்படுகிறது.
Vitamin B12 Sources
சைவ உணவு சாப்பிடுபவர்கள் வைட்டமின் பி12 குறைபாட்டை போக்க என்ன செய்யலாம்?
சைவ உணவு சாப்பிடுபவர்கள் வைட்டமின் பி12 குறைபாட்டை போக்க வலுவூட்டப்பட்ட காய்கறிகளை தங்களது உணவு அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று உணர்வியல் நிபுணர்கள் கூறுகின்றனர். கூடுதலாக பால், தயிர், சீஸ் மற்றும் பிற பல பொருட்களையும் எடுத்துக் கொள்ள வேண்டும். இது தவிர, வைட்டமின் பி12 குறைபாட்டை தவிர்க்க மருத்துவரின் ஆலோசனை பேரில் சப்ளிமெண்ட்ஸ் எடுத்துக் கொள்ளலாம்.
Vitamin B12 Sources
குறிப்பு :
வைட்டமின் பி12 நம்முடைய உடலுக்கு ரொம்பவே முக்கியமானது என்பதால், அதில் அலட்சியமாக இருக்கவே கூடாது. மேலும் இந்த வைட்டமின் குறைபாட்டை நீக்குவது ரொம்பவே முக்கியம். இல்லையெனில் பல உடல்நல பிரச்சனைகள் மட்டுமின்றி, மன ரீதியான பிரச்சனையும் ஏற்படும்.
இதையும் படிங்க: பெண்கள் 'சைவம்' சாப்பிடுவதும் காரணமா? வைட்டமின் 'பி12' குறைபாட்டின் மோசமான அறிகுறிகள் தெரியுமா?