கோடையில் சிக்கன் பாக்ஸ் பரவக்கூடும்- கவனிக்க வேண்டிய விஷயங்கள்..!!
வாய் மற்றும் மூக்கில் இருந்து வெளியேறும் சுரப்புகளே நோய்க்கான முக்கிய அறிகுறியாகும். இந்த நோய் தொடர்பு இருமல் நீர்த்துளிகள் மூலம் பரவுகிறது. கொப்புளங்கள் தோன்றுவதற்கு இரண்டு நாட்களுக்கு உடலில் ஒருவித அரிப்பு ஏற்படும். அதையடுத்து உடலில் தோன்றும் கொப்புளங்கள் 6 முதல் 10 நாட்கள் வரை இருக்கும்.
chicken pox
வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், கொரோனா பாதிப்புகள் உள்ளிட்ட வைரஸ் காய்ச்சல்களால் பலரும் பாதித்து வருகின்றனர். காசர்கோடு மாவட்டத்தில் ஜனவரி முதல் இதுவரை 469 பேருக்கு சிக்குன் குனியா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. மார்ச் மாதத்தில் மட்டும் 84 பேர் சிகிச்சை பெற்றுள்ளனர். இதற்கிடையே பல்வேறு மாநிலங்களில் சின்னம்மை பரவி வரும் நிலையில், மக்கள் விழிப்புடன் இருப்பது அவசியம்.
கோடை காலத்தில் வெயில் கடுமையாக அதிகரிக்கும் போது வரக்கூடிய நோய் பாதிப்புகளில் ஒன்று சின்னம்மை நோய். இந்த 'வெரிசெல்லா ஜோஸ்டர்' என்ற வைரஸால் ஏற்படுகிறது. கர்ப்பிணிப் பெண்கள், பிறந்த குழந்தைகள், சக்கரை நோயாளிகள், புற்றுநோயாளிகள் போன்றோருக்கு நோய் பாதிப்பு ஏற்படுவதற்கான அதிக வாய்ப்புடன் உள்ளன.
நோயாளியின் வாய் மற்றும் மூக்கில் இருந்து சுரப்புகள் வெளியேறுவது முக்கிய அறிகுறியாகும். உடலில் கொப்புளங்கள் தோன்றுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன் நிறைய இடங்களில் அரிப்பு ஏற்படும். அதை தொடர்ந்து ஏற்படும் கொப்புளங்கள் 6 - 10 நாட்கள் வரை இருக்கும். பொதுவாக ஒருமுறை நோய் வந்தால் வாழ்நாள் முழுவதும் வராது என்று கூறப்படுகிறது. ஆனால் சிலருக்கு மீண்டும் இந்நோய் பாதிப்பு ஏற்படுவதாக ஆய்வுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
முதலில் ஒரு சிறிய பரு, பின்னர் அது ஒரு வகையான திரவம் நிறைந்த கொப்புளமாக மாறும். பலருக்கு சிக்கன் பாக்ஸ் வேறுபட்டது. ஆரம்ப கட்டத்தில் நோயைப் புரிந்து கொள்ளத் தவறினால் நோயின் தீவிரம் அதிகரிக்கிறது.
Chicken pox
முக்கிய அறிகுறிகள்:
1. உடலில் குமிழ்கள் தோன்றுவதற்கு ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்கு முன்பு உடல் வலி, கடுமையான சோர்வு, காய்ச்சல் மற்றும் மைய வலி போன்ற அறிகுறிகள் தோன்றும்.
2. நோய்த்தொற்றின் முக்கிய அறிகுறி தோலில் சிவப்பு அல்லது இளஞ்சிவப்பு கொப்புளங்கள். ஆரம்பத்தில், முகம், வெளிப்புறம் மற்றும் மார்பில் கொப்புளங்கள் தோன்றும். பின்பு உடல் முழுவதும் தோன்றிவிடும்.
3. காய்ச்சலுடன் வாந்தி, தலைவலி, தலைசுற்றல், பசியின்மை, உடலில் தாங்க முடியாத அரிப்பு போன்றவை சின்னம்மை நோயின் மற்ற அறிகுறிகளாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றன.
காபி அல்லது டீ குடித்த பிறகு சோர்வு ஏற்படுகிறதா..? அலட்சியம் வேண்டாம்..!!
கவனிக்க வேண்டிய விஷயங்கள்
1. தினமும் வெதுவெதுப்பான நீரில் குளிக்கவும்.
2. உடலில் கொப்புளங்களைத் தொடவோ அல்லது அமிழ்தவோ கூடாது.
3. நோய்வாய்ப்பட்ட முதல் நாளிலிருந்தே சரியான ஓய்வு முறையைக் கடைப்பிடிக்க வேண்டும்.
4. நோய் எளிதில் தொற்றக்கூடியது என்பதால், நோய்வாய்ப்பட்டவர்கள் குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் வயதானவர்களுடன் தொடர்பு கொள்வதைத் தவிர்க்கவும்.
5. பருத்தி ஆடைகளை அணியுங்கள்.
6. எண்ணெய், காரமான, புளி போன்ற உணவுகளை தவிர்க்கவும்.
7. உடலில் அரிப்பு ஏற்படுவதை தவிர்க்க, வேப்பில்லை இலைகளை படுக்கையில் போட்டு உறங்க வேண்டும்.
chicken pox
சின்னம்மைக்கு பொதுவாக மருத்துவ சிகிச்சை தேவையில்லை. உடலில் அரிப்பு அதிகரித்தால் மருத்துவரை அணுகலாம். நோய் பாதிப்பு இருக்கும் வரை மாமிசம் சாப்பிடுவது, உடலை சூடாக்கும் உணவு மற்றும் பானங்களை சாப்பிடுவது போன்றவற்றை தவிரித்திடுங்கள். சின்னம்மையால் பாதிக்கப்பட்ட நபர்கள் அதிக ஆபத்தில் உள்ளவர்களுக்கு, மருத்துவர்கள் சில நேரங்களில் நோய்த்தொற்றின் நீளத்தைக் குறைக்கவும், சிக்கல்களின் அபாயத்தைக் குறைக்கவும் மருந்துகளை பரிந்துரைக்கின்றனர்.