- Home
- உடல்நலம்
- Fennel Seeds Benefits : சோம்புக்கு இவ்வளவு சக்தியா? தொப்பையை குறைக்க சிறந்த தேர்வு! எப்படி சாப்பிட்டால் எடை குறையும்?
Fennel Seeds Benefits : சோம்புக்கு இவ்வளவு சக்தியா? தொப்பையை குறைக்க சிறந்த தேர்வு! எப்படி சாப்பிட்டால் எடை குறையும்?
உடல் எடை மற்றும் தொங்கும் தொப்பையை குறைக்க சோம்பை எப்படியெல்லாம் சாப்பிட வேண்டும் என்பதை இந்த பதிவில் காணலாம்.

Fennel Seeds Benefits
கிச்சனில் இருக்கும் பல மசாலா பொருட்கள் மருத்துவ குணங்கள் கொண்டவை. அந்த வகையில் வயிற்று உப்புசம், அசிடிட்டி, அஜீரணம் போன்ற பல பிரச்சனைகளுக்கு பழங்காலத்திலிருந்தே சோம்பு (பெருஞ்சீரகம்) பயன்படுத்தப்பட்டு வருகின்றது. சோம்பில் ஏராளமான சத்துக்கள் உள்ளன. இத்தகைய சூழ்நிலையில், உடல் பருமன் மற்றும் தொங்கும் தொப்பையை குறைக்க சோம்பு பெரிதும் உதவியாக இருக்கும் என்று பலருக்கும் தெரிவதில்லை. அதுவும் எந்தவித பக்க விளைவுகள் இல்லாமல். இப்போது உடல் எடை மற்றும் தொப்பையை குறைக்க சோம்பை எப்படியெல்லாம் சாப்பிடலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
சோம்பு தண்ணீர் :
ஒரு ஸ்பூன் சோம்பை இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைத்து விடுங்கள். பிறகு மறுநாள் காலையில் ஒரு கிளாஸ் தண்ணீரை பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைத்து கொதிக்க வைக்கவும். நன்கு கொதித்ததும் ஊற வைத்த சோம்பையும் இதனுடன் சேர்ந்து மீண்டும் ஒரு முறை கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். தொடர்ந்து குடித்து வந்தால் உடலில் நல்ல மாற்றங்கள் தெரியும்.
சோம்பு தேநீர் :
சோம்பு டீ குடிப்பது செரிமான பிரச்சனைகளை சரி செய்யும் மற்றும் மெட்டாபாலிசத்தை அதிகரித்து எடையை குறைக்க பெரிதும் உதவும். இந்த டீ தயாரிப்பதற்கு ஒரு பாத்திரத்தில் 1 கிளாஸ் தண்ணீரை ஊற்றி நன்கு கொதிக்க வைக்க வேண்டும். பிறகு அதில் ஒரு ஸ்பூன் சோம்பு, சின்னத்துண்டு இஞ்சி சேர்த்து சில நிமிடங்கள் கொதிக்க வைத்து அடுப்பை அணைக்கவும். பின் அதில் சிறிதளவு புதினா இலைகளை சேர்த்து 2 நிமிடம் மூடி வைக்கவும். பின் அதை வடிகட்டி அதனுடன் 1/2 ஸ்பூன் தேன் கலக்கவும். அவ்வளவுதான் சுவையான சோம்பு டீ ரெடி!!
சோம்பு பொடி :
இதற்கு அடுப்பில் ஒரு வாணலியை வைத்து அதில் சிறிது சோம்பு போட்டு சும்மா 2-3 நிமிடங்கள் மிதமான தீயில் வைத்து வதக்கி பிறகு ஆற வைக்கவும். பின் அதை மிக்ஸி ஜாரில் போட்டு பொடியாக்கி காற்று புகாத ஒரு கண்ணாடி ஜாரில் போட்டு வைக்கவும். தினமும் உணவு சாப்பிட்ட பிறகு இந்த பொடியை 1-2 சிட்டிகை சாப்பிட்டவும்.
சோம்பு சூரணம் :
இதற்கு அடுப்பில் ஒரு வாணலியை வைத்து அதில் 4 ஸ்பூன் சோம்பு, 2 ஸ்பூன் ஓமம், 2 ஸ்பூன் சீரகம், 1 ஸ்பூன் வெந்தயம் ஆகியவற்றை சேர்த்து நன்கு மணம் வரும் வரை வறுக்கவும். பிறகு அதை ஆற வைத்து ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு நன்கு பொடியாக்கிக் கொள்ளவும். அந்த பொடியை ஒரு கிண்ணத்தில் போட்டு அதனுடன் 1 ஸ்பூன் பெருங்காயத்தூள், 1 ஸ்பூன் பிளாக் சால்ட் மற்றும் தேவையான அளவு தேன் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும் பிறகு அதை சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டி காற்று போகாத ஒரு கண்ணாடி ஜாரில் போட்டு வைக்கவும். இந்த உருண்டையை தினமும் ஒன்று சாப்பிட்டாலே போதுமானது.

