வெறும் வயிற்றில் சோம்பு தண்ணீர்.. இத்தனை அற்புத நன்மைகளா?
செரிமானம் முதல் எடை இழப்பு வரை சோம்பு தண்ணீரை வெறும் வயிற்றில் குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகளைப் பற்றி இங்கு அறிந்து கொள்ளலாம்.

Fennel Seed Water Benefits : சோம்பு எல்லாருடைய வீட்டின் சமையலறையில் பயன்படுத்தப்படும் மிகவும் பிரபலமான மசாலா பொருட்களில் ஒன்றாகும். ஹோட்டல்களில் சாப்பிட்ட பிறகு கூட சோம்பு சாப்பிட கொடுப்பார்கள். இது தவிர, பலர் பொதுவாக பெருஞ்சீரகத்தை வாயில் மென்று சாப்பிட விரும்புவார்கள். காரணம் இதை வாய் புத்துணர்ச்சிக்காக பயன்படுத்துகிறோம். உண்மையில், பெருஞ்சீரகம் நமக்கு பல ஆரோக்கிய நன்மைகளை வாரி வழங்குகிறது. ஏனெனில் அவற்றில் வைட்டமின் கே, வைட்டமின் சி, வைட்டமின் ஏ, வைட்டமின் ஈ, பொட்டாசியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், துத்தநாகம் ஆகியவை உள்ளன. மேலும் இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. சோம்பு குளிர்ச்சியூட்டும் விளைவைக் கொண்டுள்ளதால், பெரும்பாலானோர் சோம்பு நீரை வெறும் வயிற்றில் குடிக்க அறிவுறுத்துகிறார்கள். அதுமட்டுமல்லாமல் இது பல கடுமையான நோய்களிலிருந்தும் நம்மை பாதுகாக்க உதவுகிறது. சரி, இப்போது வெறும் வயிற்றில் பெருஞ்சீரக தண்ணீரை குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கியம் நன்மைகளைப் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

செரிமான பிரச்சனைகள்
பெருஞ்சீரகம் செரிமான அமைப்புக்கு மிகவும் நன்மை பயக்கும். பெருஞ்சீரகத்தில் இருக்கும் அலர்ஜி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் வாயு, வீக்கம், அமிலத்தன்மை, அஜீரணம் மற்றும் மலச்சிக்கல் போன்ற வயிறு சம்பந்தமான பிரச்சினைகளை சரி செய்து, செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது.
எடையை குறைக்க உதவும்:
எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு பெருஞ்சீரக தண்ணீர் மிகவும் நன்மை பயக்கும். வெறும் வயிற்றில் இந்த தண்ணீரை குடிப்பதன் மூலம் உடல் நச்சு நீக்கம் செய்யப்படும். மேலும் பெருஞ்சீரகத்தில் நார்ச்சத்து நிறைந்துள்ளதால், உணவை எளிதில் ஜீரணமாக்கி உடலில் கொழுப்பு சேருவதை தடுக்கும். இது பசியின்மை மற்றும் அதிகமாக சாப்பிடும் பிரச்சனையையும் தடுக்கும். இதனால் எடையை சுலபமாக குறைத்து விடலாம்.
சரும பிரச்சனைகளை போக்கும்:
பெருஞ்சீரகத்தில் கால்சியம், துத்தநாகம், செலினியம் போன்ற தாதுக்கள் உள்ளதால் அவை ரத்த ஓட்டத்தில் ஆக்ஸிஜன் சமநிலையை பராமரிக்கும் மற்றும் ஹார்மோன்களை சமநிலைப்படுத்துவதற்கு முக்கிய பங்கு வகிக்கின்றன. காரணமாக சருமத்தில் நல்ல விளைவை ஏற்படுத்தும். மேலும் சோம்பு நீரில் இருக்கும் வைட்டமின் சி பல சரும பிரச்சனைகளை நீக்க உதவுகிறது. சோம்பு தண்ணீரை முகத்தில் தடவினால் வெடிப்பு, அரிப்பு போன்ற எந்த பிரச்சனையும் ஏற்படாது. குறிப்பாக சருமத்தை இந்நீர் சுத்தமாகவும், ஈரப்பதமாகவும் வைக்கும்.
கண்களுக்கு நன்மை பயக்கும் :
பெருஞ்சீரகத்தில் வைட்டமின் ஏ நிறைந்துள்ளதால், இது கண் பார்வையை மேம்படுத்த உதவுகிறது. எனவே தினமும் சோம்பு நீரை குடித்து வருவதன் மூலம் கண் தொடர்பான பிரச்சனைகள் நீங்கும்.
பற்கள் மற்றும் ஈறுகளுக்கு நல்லது:
பெருஞ்சீரகத்தில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளதால் இது வாயை புத்துணர்ச்சியாக வைக்கும். மேலும் இது பற்கள் மற்றும் ஈறுகளுக்கு மிகவும் நன்மை பயக்கும்.
உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும்:
சோம்பு நீரில் ஏராளமான பொட்டாசியம் உள்ளதால், உயரத்தை அழுத்தத்தின் அறிகுறிகளை குறைக்க பெரிதும் உதவுகிறது. இதன் காரணமாக இதயம் தொடர்பான அபாயங்கள் வராது. மேலும் இந்நீர் கொலஸ்ட்ரால் அபாயத்தையும் குறைக்கும்.
இதையும் படிங்க: உடல் மெலிய '1' கிளாஸ் பெருஞ்சீரக தண்ணீர்.. எப்போது குடித்தால் பலன் தெரியுமா?
பெருஞ்சீரக தண்ணீர் தயாரிக்கும் முறை:
பெருஞ்சீரக தண்ணீரை தயாரிக்க முதலில் இரவிலேயே பெருஞ்சீரகத்தை ஒரு கிளாஸ் தண்ணீரில் ஊற வைத்து விடுங்கள். பிறகு காலையில் எழுந்தவுடன் அந்த நீரை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். வேண்டுமானால் பெருஞ்சீரகத்தையும் சாப்பிடலாம். மற்றொரு வழி என்னவென்றால் பெருஞ்சீரகத்தை வறுத்து தண்ணீரில் கொதிக்க வைத்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து வரலாம். பெருஞ்சீரகத்தை தேநீராகவும் குடித்து வந்தால் சளி, இருமல் பிரச்சனை குணமாகும்.
இதையும் படிங்க: சாப்பிட்ட பிறகு 1 ஸ்பூன் பெருஞ்சீரகம் சாப்பிட்டால் என்ன ஆகும்?!
யாரெல்லாம் சோம்பு நீர் குடிக்க கூடாது:
- பெருஞ்சீரகத்தில் இருக்கும் எண்ணெய் பலருக்கு ஒவ்வாமை பிரச்சினையை ஏற்படுத்தும். அத்தகையவர்கள் சோம்பு நீரை குடிக்க வேண்டாம்.
- கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் பெண்கள் பெருஞ்சீரக நீரை கூடாது.
- அதுபோல உங்களுக்கு ஏதேனும் உடனல்ல பிரச்சனைகள் இருந்தாலோ அல்லது பிரச்சினைக்கான மருந்துகளை எடுத்துக் கொண்டாலோ ஆலோசனை இல்லாமல் சோம்பு நீர் குடிக்க வேண்டாம்.
குறிப்பு : வயிற்று வலி மற்றும் பிற பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.