MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • மழைக்காலம் தொடங்கியாச்சு! சளி மற்றும் இருமலால் அவதிப்படுகிறீர்களா? இந்த வீட்டு வைத்தியத்த ட்ரை பண்ணுங்க!

மழைக்காலம் தொடங்கியாச்சு! சளி மற்றும் இருமலால் அவதிப்படுகிறீர்களா? இந்த வீட்டு வைத்தியத்த ட்ரை பண்ணுங்க!

இந்த குளிர்காலத்தில் இயற்கையான முறையில் சளி, இருமல் மற்றும் தொண்டை வலியை சமாளிக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை முயற்சிக்கவும்..

2 Min read
Author : Kalai Selvi
| Updated : Nov 02 2023, 02:10 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

குளிர்காலம் வந்துவிட்டது, அதனுடன் சளி, இருமல் மற்றும் தொண்டை வலி வரும் நேரம் இது.  நீங்கள் செல்லும் எல்லா இடங்களிலும் இந்த காலகட்டத்தில் மக்கள் தும்மல் அல்லது இருமல் சத்தத்தை கேட்க முடியும். சளி, இருமல் மற்றும் தொண்டை வலி ஒன்றும் தீவிரமானதாக இல்லாவிட்டாலும், அதற்கு முறையாக சிகிச்சையளிக்கப்படாவிட்டால், அது பல நாட்கள் நீடிக்கும் மற்றும் மிகவும் தொந்தரவாக இருக்கும்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
27

அதுபோல் இந்நாளில் ஜலதோஷம் தலைவலி, சோர்வு போன்றவற்றை ஏற்படுத்தும், இதனால் அன்றாட வேலைகளில் கவனம் செலுத்துவது சவாலாக இருக்கும்.  எனவே, அதை விரைவில் குணப்படுத்த நடவடிக்கை எடுப்பதே சிறந்த விஷயம்.  உங்கள் குளிர்கால சளி, இருமல் மற்றும் தொண்டை வலியை குணப்படுத்த கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை முயற்சிக்கவும்...
 

37

சளி, இருமல் மற்றும் தொண்டை வலியிலிருந்து விடுபட சிறந்த வீட்டு வைத்தியம்:

சூடான நீர் மற்றும் உப்பு: தொண்டைப்புண் பிரச்சனையால் உங்களுக்கும் தொந்தரவு இருந்தால், உப்பு கலந்த வெதுவெதுப்பான நீரில் வாய் கொப்பளிக்கலாம். ஆயுர்வேதத்தில் வெந்நீர் குடிப்பதால் ஏற்படும் பல நன்மைகள் பற்றி கூறப்பட்டுள்ளது. வெந்நீரைக் குடிப்பதன் மூலம், உடலில் உள்ள கொழுப்பின் அளவைக் கட்டுப்படுத்துவதுடன், செரிமானமும் ஆரோக்கியமாக இருக்கும்.
 

47

துளசி கஷாயம்: ஆயுர்வேதத்தில் துளசி மிகவும் பயனுள்ளதாக விவரிக்கப்பட்டுள்ளது. துளசி கஷாயத்தை அருந்தினால் சளி இருமல், தொண்டை வலி நீங்கும். இந்த கஷாயம் செய்ய, ஒரு கப் தண்ணீரில் 4 முதல் 5 கருப்பு மிளகு மற்றும் 5 துளசி இலைகளை கொதிக்க வைக்கவும். பிறகு அவற்றை வடிக்கட்டி குடிக்கலாம்.

இதையும் படிங்க:  குளிர்கால சரும வறட்சி... ரொம்ப  பீல் பண்றீங்களா? இந்த எண்ணெய்யை ட்ரை பண்ணுங்க!

57

தேன்: சளி இருமல் மற்றும் தொண்டை வலியால் அவதிப்படுவோருக்கு இந்த குளிர்காலத்தில் சிறந்த இயற்கை வைத்தியம் தேன் ஆகும். ஆம் தேனை சிறிதளவு மிளகுத்தூளுடன் கலந்து சாப்பிட்டால் சளி இருமல் தொல்லை நீங்கும். தேன் வைரஸிலிருந்து உங்களைப் பாதுகாக்க உதவும். இது தொண்டை வலியை குறைக்கும்.

இதையும் படிங்க:  காய்ச்சல் இருக்கும் போது குளிக்கலாமா? அது நல்லதா ..குளித்தால் என்ன நடக்கும்..?

67

வைட்டமின் சி நிறைந்த உணவுகளை உண்ணுங்கள்: வைட்டமின் சி நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகள் உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துவதோடு, சளி மற்றும் இருமலை ஏற்படுத்தும் வைரஸ்களிலிருந்து உங்களைக் காக்கும் என்று நம்பப்படுகிறது. இது ஒரு பயனுள்ள தடுப்பு நடவடிக்கையாகும். குளிர்காலத்தில், நெல்லிக்காய், ஆரஞ்சு அல்லது எலுமிச்சையை தண்ணீரில் போட்டு சாப்பிடுவது சளி அல்லது இருமல் ஏற்படும் அபாயத்தை வெகுவாகக் குறைக்கும்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

. 

77

மஞ்சள் பால்: ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான பாலில் 2 தேக்கரண்டி மஞ்சள் கலந்து குடிப்பது வைரஸ் காய்ச்சல், இருமல் மற்றும் மலேரியா போன்ற நிலைமைகளுக்கு சிகிச்சையளிக்க உதவும், ஏனெனில் மஞ்சள் நோய் ஏற்படுத்தும் நுண்ணுயிரிகளை எதிர்த்துப் போராடக்கூடிய விதிவிலக்கான பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளுடன் வருகிறது.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
வாழ்க்கை முறை
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
329
AUSAUS
(90.0 ov)330/4
Day 2
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›

Recommended Stories
Recommended image1
Appalam Mor Kuzhambu : அப்பளம் மோர் குழம்பு..தேங்காய் மசாலாவில் அசத்தலான சுவை; ஒரு முறை இப்படி செய்து பாருங்க!
Recommended image2
Vazhaipoo Usili : வாழைப்பூ உசிலி..சத்தும் சுவையும் நிறைந்த பாரம்பரிய உணவு!
Recommended image3
Scratched Non Stick Pan: தோசை தவாவில் இருக்கும் கீறல்… உடலுக்குள் நச்சு செல்லுமா? நிபுணர்கள் கூற்று
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved