MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • "வீட்டுல விஷேஷம்" என்று விரைவில் சொல்வதற்கு சாப்பிட வேண்டியவை என்னென்ன!

"வீட்டுல விஷேஷம்" என்று விரைவில் சொல்வதற்கு சாப்பிட வேண்டியவை என்னென்ன!

பெண்கள் கருத்தரிக்க வேண்டும் என்று திட்டமிடும் போதே அதற்கு தகுந்தாற் போல் உணவுகளை எடுத்துக் கொள்ளுதல் மிகவும் அவசியமாகும். குறிப்பாக இரும்புச்சத்து மற்றும் ஃபோலிக் அமிலம் அதிக அளவில் இருக்கும் காய்கறி மற்றும் பழங்களை தேர்வு செய்து சாப்பிட வேண்டும். அவை இதில் பெருமளவில் உள்ளது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

2 Min read
Author : Dinesh TG
Published : Mar 11 2023, 01:44 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

இன்று நாம் சாலையில் செல்கின்ற போது தெருவிற்கு ஒன்று என்ற வீதம் மகப்பேறு மருத்துமனைகைளை நம்மால் காண முடிகிறது. இயற்கையாக கருத்தரிக்கும் காலம் சென்று, மருத்துவத்தின் உதவியோடு கருத்தரிக்கும் அவல நிலை நம் குடும்பங்களிலும் யாரோ ஒருவருக்கு நிகழ்ந்து கொண்டு தான் இருக்கிறது.

பெண்கள் கருத்தரிக்க வேண்டும் என்று திட்டமிடும் போதே அதற்கு தகுந்தாற் போல் உணவுகளை எடுத்துக் கொள்ளுதல் மிகவும் அவசியமாகும். குறிப்பாக இரும்புச்சத்து மற்றும் ஃபோலிக் அமிலம் அதிக அளவில் இருக்கும் காய்கறி மற்றும் பழங்களை தேர்வு செய்து சாப்பிட வேண்டும். அவை இதில் பெருமளவில் உள்ளது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

காய்கறிகள்:

ப்ரக்கோலி:


ப்ரக்கோலியிலுள்ள இரும்பு சத்து , ஃபோலிக் ஆசிட் மற்றும் பிற ஊட்டச் சத்துக்கள் அதனை வளமான உணவாக மாற்றுகிறது. இதனை எடுத்துக் கொள்வதால் கருமுட்டை வெளிப்படுதல் செயலுக்கு துணை புரிகிறது. மேலும் கருமுட்டையை முதிர்ச்சியடைய செய்கிறது. தவிர கருப்பைகளுக்கு போதுமான வைட்டமின் சி-யும் தருகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
fruits

fruits

முட்டைக்கோஸ்:

முட்டைக்கோஸ் மலட்டுத்தன்மை பிரச்சனையை நீக்கும் காய்கறிகளில் முக்கியமான ஒன்றாகும். இதற்கு முக்கியமான் காரணம் யாதெனில் முட்டைக்கோஸில் இருக்கும் டி-இண்டோல் மீதேன் என்ற வேதிப்பொருள் தான். இந்த வேதிப்பொருள் ஈஸ்ட்ரோஜன் மெட்டபாலிசத்தில் முக்கியமாக செயல்படுவதால் இடமகல் கருப்பை அகப்படலம் மற்றும் நார்த்திசுக்கட்டிகள் முதலியவை ஏற்படாமல் காக்கும்.

உருளைக்கிழங்கு:

உருளைக்கிழங்கு என்று கூறும் போது எண்ணெய்யில் பொரிக்காமல் வேக வைத்து செய்யப்படும் உணவுகளை சாப்பிடுவது சிறந்தது. இதில் இருக்கின்ற வைட்டமின் பி மற்றும் ஈ, அணுக்களின் பிரிவை அதிகரிக்க செய்கிறது. கருவில் உருவாகும் சினை முட்டை ஆரோக்கியமாக இருப்பதற்கு மிக முக்கியமாக செயல்படுகிறது.

பீன்ஸ்:

பீன்ஸில் பெருமளவிலான லீன் புரதமம், இரும்புச்சத்தும் காணப்படுகிறது. கருத்தரிக்க முயற்சிக்கும் பெண்கள் இந்த பீன்ஸை அதிகளவில் எடுத்துக் கொள்வதன் மூலம் கருவுறும் தன்மை அதிகரிக்க செய்கிறது.

பழங்கள்:

அன்னாசிப்பழம்:

அன்னாசிப்பழத்தில் அதிக அளவில் காணப்படுகின்ற மாங்கனீசால் பல்வேறு இனப்பெருக்க ஹார்மோன்களை சுரக்க செய்கிறது. தவிர மாங்கனீசு அளவு குறைவாக காணப்படும் போது மலட்டுத்தன்மை ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.

34
Did you just eat the fruit-Too many fruits are also poisonous to the body, be careful

Did you just eat the fruit-Too many fruits are also poisonous to the body, be careful

மணக்க மணக்க மஷ்ரூம் சுக்கா ரெசிபியை செய்தால் யார் தான் வேண்டாம் என்பார்கள்!

மாதுளை:

மாதுளையில் ஹார்மோன் குறைபாடுகளை குறைத்து, கர்ப்பப்பையை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள பெரிதும் துணை புரிகிறது. மேலும் கணவன் மனைவி இருவருக்கும் லிபிடோவை அதிகப்படுத்துகிறது.

வாழைப்பழம்:

வாழைப்பழத்தில் இருக்கும் அதிகமான வைட்டமின் பி6 சீரான மாதவிடாய் சுழற்சியை ஏற்படுத்துகிறது. சீரான மாதவிடாய் சுழற்சி இருக்குமெனில் கருவுறும் தன்மையும் அதிகரிக்கிறது. முறையான மாதவிடாய் இல்லாத போது மலட்டுத்தன்மை மற்றும் கருத்தரிப்பதில் இடர்களும் நேர அதிக வாய்ப்புகள் உள்ளன.

ஆரஞ்சு:

ஆரஞ்சில் அதிக அளவிலான ஃபோலெட் உள்ளதால் கருமுட்டை வெளிப்பாட்டை சீராக்குகிறது. மேலும் இதில் விட்டமின் சி அதிகமாக இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்து பெண்களை பலப்படுத்துகிறது.

44

முட்டை :
 

முட்டைகள் கருவுறும் தன்மைக்கு சந்தேகமே இல்லாமல் சிறந்த உணவாக விளங்குகிறது. முட்டையில் கோலின், ஃபோலிக், ஒமேகா 3 கொழுப்பமிலங்கள் மற்றும் வைட்டமின் டி வளமையாக உள்ளதால், கர்ப்பமாக திட்டமிடும் ஒவ்வொரு பெண்ணுக்கும் இது முழுமையான உணவாக விளங்கும்.

மஞ்சள்:

மஞ்சளில் அதிக அளவு ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் இருப்பதால் கருவுறும் தன்மையை அதிகரிக்க செய்து ஆரோக்கியமான கர்ப்பம் தரிக்க பெரிதும் உதவுகிறது.

"உணவே மருந்து ,மருந்தே உணவு" என்ற பழமொழிக்கு ஏற்ப சிறந்த உணவு வகைகளை தேர்வு செய்து சாப்பிட்டாலே இயற்கையாக கருத்தரிக்கலாம்.

About the Author

DT
Dinesh TG
ஆரோக்கிய குறிப்புகள்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Egg Yolk Benefits: முட்டையோட மஞ்சள் கருவை தூக்கி போடுறீங்களா? இவ்வளவு சத்துகளை மிஸ் பண்றீங்க!
Recommended image2
Leaf Appalam: கேரட், பீட்ரூட்டில் கலர் கலர் இலை அப்பளம்.. இடியாப்பம் மாவில் ஈஸி ரெசிபி!
Recommended image3
Coconut Oil: இரவில் தூங்கும் முன் காலில் தேங்காய் எண்ணெய்! தினமும் தடவினால் என்ன நடக்கும் தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved