MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • உணவு
  • மணக்க மணக்க மஷ்ரூம் சுக்கா ரெசிபியை செய்தால் யார் தான் வேண்டாம் என்பார்கள்!

மணக்க மணக்க மஷ்ரூம் சுக்கா ரெசிபியை செய்தால் யார் தான் வேண்டாம் என்பார்கள்!

புலாவ், வெஜ் பிரியாணி, ரசம் சாதம் ,தயிர் சாதம் போன்றவைக்கு அல்டிமேட் காம்பினேஷனாக இருக்கும். இதனை நீங்களும் ஒரு முறை ட்ரை பண்ணி அசத்துங்க.அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய மணக்கும் மஷ்ரும் சுக்கா ரெசிபியை வீட்டில் எப்படி சுலபமாக செய்வது என்று இந்த பதிவின் கொள்ளலாம்.

2 Min read
Author : Dinesh TG
Published : Mar 11 2023, 09:16 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13

மஷ்ரூமில் மஷ்ரூம் மசாலா, மஷ்ரூம் கிரேவி, மஷ்ரூம் 65, மஷ்ரூம் வடை என்று எண்ணற்ற ரெசிபிக்களை செய்து சாப்பிட்டு இருப்போம். அந்த வகையில் இன்று நாம் மஷ்ரூம் சிக்க ரெசிபியை பார்க்க உள்ளோம்.

இந்த மஷ்ரூம் சுக்காவின் சுவை மட்டன் சுவைக்கு நிகராக இருக்கும். மட்டன் எடுக்க முடியாத நாட்களில் மஷ்ரூமை இந்த மாதிரி சமைத்து சாப்பிடலாம். இதனை குழந்தைகளும் சரி, பெரியவர்களும் சரி அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இதன் சுவை அட்டகாசமாக இருக்கும்.

புலாவ், வெஜ் பிரியாணி, ரசம் சாதம் ,தயிர் சாதம் போன்றவைக்கு அல்டிமேட் காம்பினேஷனாக இருக்கும். இதனை நீங்களும் ஒரு முறை ட்ரை பண்ணி அசத்துங்க.

அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய மணக்கும் மஷ்ரும் சுக்கா ரெசிபியை வீட்டில் எப்படி சுலபமாக செய்வது என்று இந்த பதிவின் கொள்ளலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
23

தேவையான பொருட்கள்:

மஷ்ரூம்- 200 கிராம்
வெங்காயம்- 1
சோம்பு- 1 ஸ்பூன்
மிளகு-1 ஸ்பூன்
சீரகம்-1 ஸ்பூன்
தனியா-1 ஸ்பூன்
வர மிளகாய்-3
பூண்டு விழுது- 1/2 ஸ்பூன்
மிளகாய் தூள்- 1/2 ஸ்பூன்
கறிவேப்பில்லை- 2 கொத்து
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு

 

குட்டிஸ்களின் பேவரைட் க்ரிஸ்பி "பலாக்காய் சிப்ஸ் "


செய்முறை:

முதலில் மஷ்ரூமை அலசி விட்டு ஒரே மாதிரியான அளவில் சிறியதாக அரிந்து வைத்து கொள்ள வேண்டும். அதே போன்று பெரிய வெங்காயத்தை மிகப் பொடியாக அரிந்து வைத்து கொள்ள வேண்டும்.

அடுப்பில் ஒரு கடாய் வைத்து , கடாய் சூடானவுடன் ( வெறும் கடாயில்) மிளகு, சீரகம், சோம்பு, பூண்டு,தனியா வர மிளகாய் ஆகியவற்றை சேர்த்து லேசாக வறுத்துக் கொண்டு அடுப்பில் இருந்து இறக்கி ஆற வைத்துக் கொள்ள வேண்டும். 

33

அடுப்பில் ஒரு கடாயில் மஷ்ரூமைகளை சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி ஒரு கொதி வரும் வரை வேக வைத்து அடுப்பில் இருந்து தண்ணீர் இல்லாமல் வடிகட்டி எடுத்து மஷ்ரூம்களில் இருக்கும் அதிக தண்ணீரை பிழிந்து வைத்துக் கொள்ள வேண்டும்

ஒரு மிக்சி ஜாரில் வறுத்து வைத்துள்ள மசாலா பொருட்களை சேர்த்து அதில் சிறிது வெங்காயமும் சேர்த்து பேஸ்ட் போன்று அரைத்துக் கொள்ள வேண்டும். அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் சிறிது எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடான பின் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து பின் மீதமுள்ள வெங்காயம் சேர்த்து கண்ணாடி பதம் வரை வதக்கி விட்டு அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து அதன் காரத் தன்மை செல்லும் வரை வதக்கி விட வேண்டும்.

மசாலாக்களின் பச்சை வாசனை சென்ற பிறகு, வேக வைத்து பிழிந்து வைத்துள்ள மஷ்ரூம்களை சேர்த்து வதக்கி விட்டு, உப்பு தூவி நன்றாக பிரட்டி எடுக்க வேண்டும். கலவையில் இருந்து எண்ணெய் பிரிந்து , கலவை சுண்டி வரும் வரை வதக்கி விட்டு பின் அடுப்பில் இருந்து இறக்கி பரிமாறினால் சூப்பரான மணக்க மணக்க மஷ்ரூம் சுக்கா ரெடி!

About the Author

DT
Dinesh TG
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Peerkangai Pakoda: பீர்க்கங்காயில் இப்படி பகோடா செய்து பாருங்க! மொறுமொறுப்பான ஈஸி ரெசிபி
Recommended image2
Healthy Breakfast: அவசரமான காலை நேரத்திலும் ஆரோக்கியமான காலை உணவைத் தயாரிப்பது எப்படி?
Recommended image3
Curd Benefits: தினமும் தயிர் சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved