MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • Cycling : வெறும் 30 நிமிடந்தான்! ஆனா தினமும் சைக்கிள் ஓட்டினால் இவ்ளோ நன்மைகள் கிடைக்குமா?

Cycling : வெறும் 30 நிமிடந்தான்! ஆனா தினமும் சைக்கிள் ஓட்டினால் இவ்ளோ நன்மைகள் கிடைக்குமா?

தினமும் 30 நிமிடங்கள் சைக்கிள் ஓட்டினால் ஆரோக்கியத்திற்கு கிடைக்கும் நன்மைகள் என்ன என்பது குறித்து இந்த பதிவு தெரிந்து கொள்ளலாம்.

2 Min read
Author : Kalai Selvi
Published : Nov 26 2025, 01:02 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Benefits of Cycling for 30 Minutes
Image Credit : Freepik

Benefits of Cycling for 30 Minutes

சைக்கிள் ஓட்டுதல் என்பது வெறும் உடற்பயிற்சி மட்டுமல்ல, அது உடல் மற்றும் மன ரீதியாக பல நன்மைகளை நமக்கு வழங்குகிறது. தசைகளை வலுப்படுத்தும், மன அமைதியை தருகிறது உடலை சுறுசுறுப்பாக வைக்க உதவும் உள்ளிட்ட ஏராளமான நன்மைகளை வழங்குகிறது. எனவே, இந்த பதிவில் தினமும் வெறும் 30 நிமிடங்கள் சைக்கிள் ஓட்டுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி அறிந்து கொள்ளலாம்.

26
எடை இழப்புக்கு
Image Credit : Getty

எடை இழப்புக்கு

சைக்கிள் ஓட்டுதல் என்பது எரோபிக் பயிற்சி. இது இதயம், நுரையீரல், தசைகளை மேம்படுத்த உதவுகின்றன. குறைந்த தாக்கம் கொண்ட இந்த பயிற்சியானது, மூட்டுகளில் அதிக அழுத்தத்தை ஏற்படுத்தாது. முக்கியமாக அனைத்து வயதினருக்கும் பயனுள்ள மற்றும் பாதுகாப்பான உடற்பயிற்சியாக இது அமைகிறது.

Related Articles

Related image1
1 கி.மீ போக 10 பைசா செலவு + 3 மணி நேரம் சார்ஜ் போதும் - மலிவு விலை எலக்ட்ரிக் சைக்கிள்!
Related image2
ஒரு முறை சார்ஜ் போட்டா 70 கிமீ சல்லுனு போகலாம்: ரூ.35000ல் எலக்ட்ரிக் சைக்கிள்
36
கலோரிகள் எரிக்கப்படுகின்றன :
Image Credit : Freepik

கலோரிகள் எரிக்கப்படுகின்றன :

தினமும் 30 நிமிடங்கள் சைக்கிள் ஓட்டினால் சுமார் 200 முதல் 500 கலோரிகள் எரிக்கப்படுகின்றன. அதுவே ஒரு மாதத்திற்கு என்றால் சுமார் 9000 கலோரிகள் எரிக்கப்படும். அதாவது சுமார் ஒரு கிலோ கொழுப்பு குறைவதற்கு இது சமம்.

46
இதயம் ஆரோக்கியம் :
Image Credit : Freepik

இதயம் ஆரோக்கியம் :

தினமும் 30 நிமிடங்கள் சைக்கிள் ஓட்டினால் இதய ஆரோக்கியம் மேம்படும். அதாவது சைக்கிள் ஓட்டுதல் இதய துடிப்பை அதிகரிக்கிறது மற்றும் இரத்த ஓட்டத்தை ஊக்குவிக்கிறது. இதனால் இதயம் திறமையாக செயல்படும்.

மன ஆரோக்கியம் ;

மன ஆரோக்கியமாக இருப்பதற்கு சைக்கிள் ஓட்டுதல் மிகவும் நல்லது. சைக்கிள் ஓட்டுதல் அதிகளவு மகிழ்ச்சியான ஹார்மோன்களான எண்டோர்பின்களை வெளியிடும். இதனால் மன அழுத்தம் பதட்டம் குறையும்.

56
பிற நன்மைகள் ;
Image Credit : Getty

பிற நன்மைகள் ;

- தினமும் சைக்கிள் ஓட்டினால் ஆழ்ந்த தூக்கம் கிடைக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.

- தினமும் சைக்கிள் ஓட்டுதல் தசைகளை வலுப்படுத்த முக்கிய பங்கு வகிக்கிறது.

- இதய நோய் போன்ற நாள்பட்ட நோயின் அபாயத்தை குறைக்க உதவும்.

66
நினைவில் கொள் ;
Image Credit : our own

நினைவில் கொள் ;

- தசைகள் சேதமடைவதை தவிர்க்க கூல் டவுன் மற்றும் வார்ம் அப் பயிற்சி கண்டிப்பாக செய்யவும்.

- தொடர்ந்து சைக்கிள் ஓட்டினால் தண்ணீர் கண்டிப்பாக குடிக்க வேண்டும். இதனால் உடலின் செயல் திறன் அப்படியே இருக்கும்.

- எடையை குறைக்க முயற்சிப்பவர்கள் கண்டிப்பாக தினமும் 30 நிமிடங்கள் சைக்கிள் ஓட்ட வேண்டும் . இதனால் எடை குறைவது மட்டுமல்ல, மன நிலையும் மேம்படும். அதுபோல ஆரம்பத்தில் 10-15 நிமிடங்கள் முதலில் செய்யவும். பிறகு படிப்படியாக சைக்கிள் ஓட்டும் நேரத்தை அதிகரிக்கவும்.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
வாழ்க்கை முறை
ஆரோக்கியம்
ஆரோக்கிய குறிப்புகள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
No Maida ❌ No refined Sugar ❌ | சர்க்கரை வள்ளி கிழங்கு அல்வா | Healthy Sweet Recipe in Tamil
Recommended image2
டயட்டில் இருப்பவரா நீங்கள்.? வெள்ளை அரிசி vs பழுப்பு அரிசி – எது எடை குறைக்க உதவும்?
Recommended image3
5 வயது குழந்தை முதல் 75 வயது முதியவர் வரை… தினமும் எவ்வளவு நேரம் நடக்க வேண்டும்?
Related Stories
Recommended image1
1 கி.மீ போக 10 பைசா செலவு + 3 மணி நேரம் சார்ஜ் போதும் - மலிவு விலை எலக்ட்ரிக் சைக்கிள்!
Recommended image2
ஒரு முறை சார்ஜ் போட்டா 70 கிமீ சல்லுனு போகலாம்: ரூ.35000ல் எலக்ட்ரிக் சைக்கிள்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved