தினமும் 1 கிமீ வாக்கிங் போனா 'எவ்வளவு' சீக்கிரம் எடை குறையும்?
Daily 1 km Walking Benefits : ஒரு மாதம் 2 முதல் 3 கிலோ உடல் எடை குறைய நாள்தோறும் மணி நேரம் நடக்க வேண்டும். இந்த பதிவில் 1 கிமீ வாக்கிங் செல்வதன் நன்மைகளை காணலாம்.

தினமும் 1 கிமீ வாக்கிங் போனா 'எவ்வளவு' சீக்கிரம் எடை குறையும்?
உடல் எடையை குறைக்க மக்கள் பல வழிகளில் முயன்று வருகின்றனர். கொடூரமான டயட், தீவிர உடற்பயிற்சி செய்பவர்களும் உண்டு, நான்கு நாட்கள் பயிற்சி செய்துவிட்டு ஏன் எடை குறையவில்லை என ஆதங்கப்படுவர்களும் உண்டு. இந்தப் பதிவில் உடல் எடையை விரைவில் குறைப்பதற்கான எளிய வழிகளை தெரிந்துகொள்ளலாம்..
எடை குறைக்க டிப்ஸ்;
தினமும் 1 மணிநேர நடைப்பயிற்சி செய்வது எடையை குறைக்கும். ஆனால் அதனுடன் கலோரி பற்றாக்குறை (calorie deficit) உணவு பழக்கத்தை கொண்டிருக்க வேண்டும். அதாவது உங்களுக்கு ஒரு நாளில் உணவு மூலம் கிடைக்க வேண்டிய கலோரிகளை குறைவாக எடுத்து கொள்வது. அப்படி குறைவாக உண்ணும்போது விரைவில் எடை இழப்பு இருக்கும். ஒரு மாதத்தில் 2 முதல் 3 கிலோ எடையைக் குறைப்பது கடினமான காரியமல்ல. நீங்கள் அனைத்து உணவுகளையும் சாப்பிட்டாலும் எடையை குறைக்கலாம். ஆனால் ஒரு நாளுக்கு 200 முதல் 300 கலோரிகள் குறைவாக எடுக்க வேண்டும். முக்கியமாக ஒரே இடத்தில் அமர்வது, அடிக்கடி படுத்து கொள்வது என இல்லாமல் உடலை தினமும் ஆக்டிவாக வைக்க வேண்டும். இதுவே எடை குறைப்புக்கு மட்டுமல்ல நீண்ட ஆயுளுக்கும் அடிப்படையான விஷயம்.
கலோரிக் பற்றாக்குறையை பின்பற்றுவது எப்படி?
கலோரிக் பற்றாக்குறை (Caloric deficit) என்றால் உடலுக்கு தேவையான வழக்கமான கலோரிகளை விட குறைவாக உண்பதாகும். இந்த எடை குறைப்பு பயணத்தில் தசை இழப்பைத் தடுக்க புரத உணவுகளை அதிகம் எடுக்கவேண்டும். ஒருவருக்கு 2500 தேவை எனில் அவர் அதற்கு குறைவாக எடுத்து கொள்ளும்போது எடையிழப்பு இருக்கும். பலருக்கு ஒரு வாரத்தில் 0.45 கிலோ எடை குறைக்க 500 கலோரிகள் குறைப்பதே போதும்.
இதையும் படிங்க: வித்தியாசமான வாக்கிங்!! 50 வயசுக்கு மேல 'எவ்வளவு' நேரம் 'பின்னோக்கி' நடக்கனும் தெரியுமா?
நடைபயிற்சி எப்படி எடையை குறைக்கும்?
நடைபயிற்சி எடையிழப்பு சிறந்த பயிற்சியாகும். தினமும் 1 மணிநேர நடை எடையை கணிசமாக குறைக்கும். உங்களுடைய வேகத்தை பொறுத்து குறைந்தபட்சம் ஒரு மணி நேரத்தில் 5 கிமீ வரை நடக்க முடியும். உங்களுக்கு அவ்வளவு தூரம் நடக்க முடியாவிட்டால் ஆரம்பத்தில் 1 கிமீ நடப்பதை பழப்படுத்துங்கள். சுமார் 5,500 முதல் 6,500 அடிகள் நடக்கலாம். இதனால் உடலில் உள்ள கெட்ட கொழுப்பு கரையும். இதய ஆரோக்கியம் மேம்படும். மனச்சோர்வு குறையும். கீழ் உடலில் உள்ள தொடை, கால், மூட்டு, கணுக்கால் ஆகியவை வலுப்பெறும். நடக்கும்போது சுறுசுறுப்பாக கைகளை அசைத்தால் மேல் உடலின் தசைகளுக்கும் நல்ல பயிற்சியாக இருக்கும்.
இதையும் படிங்க: 60 வயதுக்கு பின் பெண்கள் 'எத்தனை' காலடிகள் வாக்கிங் போகனும்? இதோ அறிவியல் உண்மை!!