தினமும் பூண்டை நெய்யில் வறுத்து சாப்பிடுங்க; நடக்கும் ஆச்சரியம் பாருங்க!
Garlic Fried In Ghee : நெய்யில் வறுத்த பூண்டை தினமும் சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி இங்கு காணலாம்.

தினமும் பூண்டை நெய்யில் வறுத்து சாப்பிடுங்க; நடக்கும் ஆச்சரியம் பாருங்க!
நெய் மற்றும் பூண்டு இவை இரண்டும் சமையலறையில் பயன்படுத்தப்படும் முக்கியமான பொருளாகும். சிலர் பூண்டை பச்சையாக அப்படி சாப்பிட விரும்புகிறார்கள். இன்னும் சிலரோ அதை கடாயில் வறுது சாப்பிடுவார்கள். ஆனால் பூண்டை நெய்யில் வறுத்து சாப்பிட்டால் உங்கள் உடலுக்கு பலவிதமான ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? ஏன் நம்முடைய தமிழ் பாரம்பரிய வைத்திய உணவு முறைகளில் கூட நெய்யில் பூண்டை வறுத்து அதை சாதத்துடன் கலந்து சாப்பிடுவது வழக்கத்தில் உள்ளது. இதுதவிர, நெய்யும் பூண்டும் சேரும்போது நெய்யில் இருக்கும் கொழுப்பின் அளவானது குறையும். எனவே இந்த பதிவில் தினமும் நெய்யில் வறுத்த பூண்டை சாப்பிடவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
பூண்டில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள்:
பூண்டு சமையலறையில் மட்டுமின்றி, பாரம்பரிய மருத்துவத்திலும் மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. வைட்டமின் பி, வைட்டமின் கே, கால்சியம், தாமிரம், பாஸ்பரஸ் போன்ற கூறுகள் பூண்டில் உள்ளன. அவை ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது தவிர, பூண்டில் பாக்டீரியா எதிர்ப்பு, வைரஸ் எதிர்ப்பு, பூஞ்சை எதிர்ப்பு, பண்புகள் உள்ளன. அவை பல நோய் மற்றும் உடல்நல பிரச்சினைகளிலிருந்து நம்மை பாதுகாக்கும்.
பூண்டின் நன்மைகள்:
- உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு ரத்த அழுத்தத்தை குறைக்க பூண்டு உதவுகிறது மற்றும் இதய நோய் அபாயத்தையும் இது குறைக்கும்.
- உடலில் கெட்ட கொழுப்பின் அளவை குறித்து நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்க பூண்டு உதவுகிறது.
- பூண்டில் இருக்கும் அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் உடலில் ஏற்படும் வீக்கத்தை குறைக்கவும், கீழ்வாதம் போன்ற பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் அளிக்கவும் உதவுகிறது.
- பூண்டில் புற்று நோய் எதிர்க்கும் பண்புகள் உள்ளன.
- மூளை மற்றும் நினைவாற்றல் செயல்பாட்டை மேம்படுத்த பூண்டு உதவுகிறது.
- இதய நோய் ஆபத்தில் இருக்கும் ஆண்கள் தினமும் பூண்டு சாப்பிடுவது மிகவும் நன்மை பயக்கும்.
- உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூண்டு முக்கிய பங்கு வகிக்கிறது.
நெய்யில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள்:
நெய்யில் நல்ல கொழுப்புகள், புரதம் , ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், வைட்டமின் கே, வைட்டமின் ஏ, கால்சியம் மற்றும் மெக்னீசியம் போன்ற பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன. தினமும் உணவில் நெய் சேர்த்துக் கொண்டால் பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும்..
இதையும் படிங்க: பூண்டு சீக்கிரம் முளைவிடாம ரொம்ப காலம் பயன்படுத்த சூப்பர் டிப்ஸ்!!
நெய்யின் நன்மைகள்:
- நெய்யில் இருக்கும் வைட்டமின் கே, கால்சியம் மற்றும் மெக்னீசியம் போன்ற தாதுக்கள் எலும்புகளை வலுவாகவும் ஆரோக்கியமாகவும் வைக்க உதவுகிறது.
- தினமும் நீயே உங்களது உணவில் சேர்த்துக் கொண்டால் செரிமான அமைப்பு மேம்படும் இதனால் உணவு எளிதில் ஜீரணமாகிவிடும்.
- நீ ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல சருமத்திற்கும் மிகவும் நன்மை பயக்கும். நெய் உங்களை எப்போதும் எளிமையாக வைக்க உதவுகிறது.
- தினமும் நெய் சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள நரம்புகளின் செயல்பாடு மேம்படும்.
இதையும் படிங்க: பூண்டில் மருத்துவ குணம் இருந்தாலும் இந்த '7' பேர் சாப்பிடக் கூடாது!! மீறினால் என்னாகும் தெரியுமா?
நெய்யில் வறுத்த பூண்டை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்:
1. நெய்யில் வறுத்தப்பூண்டை தினமும் சாப்பிட்டு வந்தால் செரிமான பிரச்சினைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும். மலச்சிக்கல் அமிலத்தன்மை போன்ற பிரச்சனைகள் சரியாகும். இதனால் வயிறு எப்போதும் ஆரோக்கியமாகவே இருக்கும்.
2. பூண்டை நெய்யில் வறுத்து சாப்பிட்டால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். முக்கியமாக பூண்டில் இருக்கும் பாக்டீரியா எதிர்ப்பு, பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் சளி மற்றும் இருமலை குணமாக்கும் மற்றும் வைரஸ் தொற்றுகளில் இருந்து உடலை பாதுகாக்கும்.
3. இயற்கையாகவே பூண்டு உடலில் இருக்கும் கெட்ட கொழுப்பை குறைக்கும். எனவே தினமும் நெய்யில் வறுத்த பூண்டை சாப்பிட்டு வந்தால் உடலில் நல்ல கொழுப்பு அதிகரிக்கும், எடையேயும் கட்டுக்குள் இருக்கும்.
4. நெய்யில் வறுத்தப்பூண்டு உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது.
5. ஆண்கள் நெய்யில் வறுத்த பூண்டை தினமும் சாப்பிட்டு வந்தால் டெஸ்டோஸ்டிரோன் அளவு அதிகரிக்கும்.
6. தூக்கமின்மை பிரச்சனைகள் நீங்கள் அவதிப்படுகிறீர்கள் என்றால் நெய்யில் வறுத்த பூண்டை தினமும் சாப்பிடுங்கள். நல்ல தூக்கம் வரும்