MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • Summer Tips: உடல் சூட்டை தணிக்க 1 ஸ்பூன் பாதாம் பிசின் போதும்!! எப்படி சாப்பிடனும்?

Summer Tips: உடல் சூட்டை தணிக்க 1 ஸ்பூன் பாதாம் பிசின் போதும்!! எப்படி சாப்பிடனும்?

கோடை வெப்பத்தை சமாளிக்க பாதாம் பிசின் எவ்வாறு பயனுள்ளதாக இருக்கும் மற்றும் அதை எப்படி சாப்பிட வேண்டும் என்பது குறித்து இங்கு பார்க்கலாம்.

2 Min read
Author : Kalai Selvi
| Updated : Apr 14 2025, 09:48 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Badam Pisin Benefits

Badam Pisin Benefits

Benefits of Badam Pisin in Summer : கோடைகாலத்தில் வெப்பத்தின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரிப்பதால் உடலை குளிர்ச்சியாகவும், நீரேற்றுத்துடனும் வைப்பது மிகவும் அவசியம். இயற்கை முறையில் உடலை இயற்கை முறையில் உடலை குளிர்ச்சியாக பல வழிகள் உள்ளன. அவற்றில் ஒன்றுதான் பாதாம் பிசின். பாதாம் மரத்தில் இருந்து கிடைக்கும் இந்த இயற்கை பொருள் பல நூற்றாண்டு காலமாகவே இந்திய மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக, உடலை குளிர்விக்கவும் மற்றும் கடுமையான வெப்பத்திலிருந்தும் நிவாரணம் அளிக்க உதவும். இந்த அற்புதம் நிறைந்த இயற்கை பொருள் கோடை காலத்தில் நம் உடலுக்கு பல நன்மைகளை வாரி வழங்குகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
What is Badam Pisin?

What is Badam Pisin?

பாதாம் பிசின்?

பாதாம் பிசின் பாதாம் மரத்தின் பட்டையிலிருந்து பெறப்படும் ஒரு இயற்கை பிசின் ஆகும். இது குளிர்ச்சி தன்மை கொண்டது என்பதால் உடலின் வெப்பத்தை தணித்து புத்துணர்ச்சி அளிக்கின்றது. குறிப்பாக, கோடையில் ஏற்படும் உடல் சூட்டினால் பல்வேறு உபாதைகளுக்கு இது அருமருந்தாக பயன்படுத்தப்படுகிறது. ஆயுர்வேத மருத்துவத்தில், பித்த தோஷம் உள்ளவர்களுக்கு இது மிகவும் நன்மை பயக்கும். 

இதையும் படிங்க:  பாதாம் பிசின் மருத்துவ குணங்கள் நிறைந்தது; 'இப்படி' சாப்பிட்டால் முழுப்பலன்கள்!!

35
Badam Pisin Health Benefits

Badam Pisin Health Benefits

பாதாம் பிசின் ஆரோக்கிய நன்மைகள் :

எலும்பு ஆரோக்கியத்திற்கு நல்லது - பாதாம் பிசினில் கால்சியம், மெக்னீசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளதால் இது எலும்புகளை வலுப்படுத்த உதவுகிறது. எனவே இதை சாப்பிடுவதன் மூலம் மூட்டு தேய்மானம், மூட்டு வலி போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கப்படும். 

உடலை நீரேற்றமாக வைக்கும் - பாதாம் பிசின் நீரை தக்க வைக்கும் திறனை கொண்டது. இதை ஊற வைக்கும் போது தண்ணீரை உறிஞ்சி ஜெல் போன்று உருவாகும். இதை சாப்பிட்டால் உடலை நீரேற்றமாக வைத்திருக்க உதவுகிறது. குறிப்பாக கோடை காலத்தில் ஏற்படும் நீரிழிப்பு அபாயம் அதிகரிப்பதை தடுக்கும்.

ஆற்றல் வழங்கும் - பாதாம் பிசின் உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்கும். மேலும் சோர்வைப் போக்கி, மனநலத்தை மேம்படுத்தும். இதில் இருக்கும் புரதச்சத்துக்கள் மற்றும் தாதுக்கள் உடல் வளர்ச்சியை மேம்படுத்தும் மற்றும் திசுக்களை புதுப்பிக்கும். 

45
Badam Pisin Health Benefits

Badam Pisin Health Benefits

செரிமானத்திற்கு நல்லது - வெப்பத்தின் தாக்கத்தால் உடலில் அமில ரிஃப்ளக்ஸ் மற்றும் வயிற்றுப் புண்கள் போன்ற செரிமான பிரச்சனைகள் ஏற்படும். இதைப் போக்க பாதாம் பிசின் உதவுகிறது. இதில் இருக்கும் இயற்கையான குளிர்ச்சி பண்புகள் வயிற்றுப் புண் மற்றும் அமிலத்தன்மை போன்ற பிரச்சினைகளில் இருந்து நிவாரணம் அளிக்கும். மேலும் க்ஆரோக்கியமான செரிமானத்தை ஊக்குவிக்கும்.

சரும ஆரோக்கியம் - பாதாம் பிசினில் இருக்கும் குளிர்ச்சி மற்றும் நீரேற்ற பண்புகள் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. கோடையில் இதை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சருமத்தை ஈரப்பதமாக வைத்திருப்பது மட்டுமில்லாமல் தடுப்புகள், அரிப்பு, எரிச்சல் போன்ற வெப்பத்தால் ஏற்படும் சரும பிரச்சனைகளை குறைக்கவும் பெரிதும் உதவும். கூடுதலாக உடலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றி, ரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, சருமத்திற்கு இயற்கையான பொலிவை அளிக்கும்.

55
How Should You Eat Badam Pisin?

How Should You Eat Badam Pisin?

பாதாம் பிசின் எப்படி சாப்பிட வேண்டும்?

ஒரு ஸ்பூன் பாதாம் பிசினை இரவில் ஊற வைத்து பிறகு மறுநாள் காலை அதை நீங்கள் பால் இளநீர் அல்லது பல சாறு ஆகியவற்றுடன் கலந்து சாப்பிடலாம். கோடையில் உடலை குளிர்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் வைக்க பாதாம் பிசின் உங்களது உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் அவசியம் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

இதையும் படிங்க:  பாதாம் பிசின் பாக்க சின்னது தான்.. ஆனா நன்மைகளோ எக்கச்சக்கம்!

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
கோடைக்கால உடல்நலக் குறிப்புகள்
கோடைக்கால குறிப்புகள்
வாழ்க்கை முறை
ஆரோக்கிய குறிப்புகள்
பாதாம் பிசின்
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Healthy Street Foods: ஸ்ட்ரீட் ஃபுட் சாப்பிட்டா உடம்பு கெட்டுப்போகுமா? டாக்டர் சொல்றத கேளுங்க!
Recommended image2
Weight Loss: தினமும் ஜிம் போயும் வெயிட் குறையலயா? இதுதான் காரணமா இருக்கும்!
Recommended image3
முட்டை பிரியர்கள் கவனத்துக்கு! தினமும் முட்டை சாப்பிட்டால் சர்க்கரை நோய் வருமா? ஆய்வு சொல்வது என்ன?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved