MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • Heart Attack: அலட்சியம் வேண்டாம்! மாரடைப்பின் 5 'சைலண்ட்' அறிகுறிகள்!

Heart Attack: அலட்சியம் வேண்டாம்! மாரடைப்பின் 5 'சைலண்ட்' அறிகுறிகள்!

நெஞ்சு வலி மட்டும்தான் மாரடைப்பின் அறிகுறியா என்றால் இல்லை. எந்த நோய்க்கும் முன் உடல் சில சிக்னல்களைத் தரும். அதை கவனிக்கத் தவறுவதே பாதிப்புக்குக் காரணம். மாரடைப்பு வருவதற்கு முன் உடல் தரும் ரகசிய சிக்னல்களை இப்போது தெரிந்துகொள்ளுங்கள்!

1 Min read
Author : Priya Velan
Published : May 18 2026, 05:38 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
தாடை மற்றும் பற்களில் திடீர் வலி
Image Credit : Getty

தாடை மற்றும் பற்களில் திடீர் வலி

பல் சொத்தை இல்லை, ஆனா திடீரென தாடையிலும், பல்லிலும் கடுமையான வலி ஏற்படுகிறதா? இதயத்திற்கு செல்லும் நரம்புகளும், தாடை நரம்புகளும் நெருக்கமாக இருப்பதால், இதயம் தவிக்கும் போது தாடையில் வலி எதிரொலிக்கும். காரணம் இல்லாமல் கீழ் தாடை வலித்தால், உடனே அலர்ட் ஆகுங்கள்!

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
25
தீவிரமான, விசித்திரமான சோர்வு
Image Credit : Getty

தீவிரமான, விசித்திரமான சோர்வு

வழக்கமான வேலைதான்.. ஆனா, இப்போதெல்லாம் ஒரு பக்கெட் தண்ணீர் தூக்கினால் கூட ரொம்ப சோர்வு ஏற்படுகிறதா? இதயம் பலவீனமடையும் போது, உடலின் மற்ற பாகங்களுக்கு ரத்தத்தை அனுப்ப அது கடுமையாக போராடும். இதனால் தான் இந்த அதீத சோர்வு. நன்றாக தூங்கியும் காலையில் எழ முடியாத அளவுக்கு சோர்வு இருந்தால், அது இதயம் போடும் அலாரம்!

Related Articles

Related image1
ஆண்கள் அவசியம் செய்துகொள்ள வேண்டிய 7 முக்கியமான ஆரோக்கிய பரிசோதனைகள்
Related image2
30+ பெண்களே உஷார்! உங்கள் எலும்புகளை இரும்பாக்க இதோ சில பாரம்பரிய உணவுகள்
35
காரணமில்லாத அஜீரணம், குமட்டல்
Image Credit : Getty

காரணமில்லாத அஜீரணம், குமட்டல்

காரசாரமா எதுவும் சாப்பிடல.. ஆனா நெஞ்சு கருக்குது, வாந்தி வர்ற மாதிரி இருக்கா? பலரும் இதை சாதாரண 'அசிடிட்டி' என்று நினைத்து மாத்திரை சாப்பிட்டு விடுகிறார்கள். ஆனால், இதயத்தின் கீழ் பகுதியில் பாதிப்பு ஏற்படும் போது, அது வயிற்றுப் பகுதியில் வலியை தூண்டும். ஈனோ குடித்தும் நெஞ்செரிச்சல் சரியாகவில்லை என்றால், அது அசிடிட்டி அல்ல.. ஹார்ட் அட்டாக்கின் அறிகுறியாக இருக்கலாம்!

45
ஏசி அறையிலும் கொட்டும் வியர்வை
Image Credit : Getty

ஏசி அறையிலும் கொட்டும் வியர்வை

வெயிலே இல்லை, நல்ல குளிர்ச்சியான அறை.. ஆனாலும் உடல் முழுக்க பதற்றத்துடன் குளிர்ந்த வியர்வை கொட்டுகிறதா? அடைபட்ட தமனிகள் வழியே ரத்தத்தை செலுத்த இதயம் கூடுதல் எஃபெர்ட் போடும் போது, உடலின் வெப்பநிலையை கட்டுப்படுத்த நரம்பு மண்டலம் வியர்வையை அள்ளி தெளிக்கும். காரணமே இல்லாமல் 'ஜில்லென்று' வியர்த்தால், உடனே மருத்துவரை அணுகுவது உசிதம்.

55
இடது கை மட்டுமல்ல.. வலது கையும் வலிக்கலாம்!
Image Credit : Getty

இடது கை மட்டுமல்ல.. வலது கையும் வலிக்கலாம்!

இடது கை வலிக்கிறது மட்டும்தான் மாரடைப்பு என நினைக்க வேண்டாம்; வலது கை அல்லது முதுகுப் பகுதியில் பரவும் வலியும் ஆபத்தே! நெஞ்சின் மையப்பகுதியில் ஆரம்பித்து, கழுத்து, முதுகு அல்லது இரண்டு கைகளுக்கும் வலி பரவுவது மாரடைப்பின் மிக முக்கிய சிக்னல். இந்த வலி சில நிமிடங்கள் வந்து வந்து போனால், அதை சாதாரண தசைப்பிடிப்பு என்று அலட்சியப்படுத்தாதீர்கள்.

About the Author

PV
Priya Velan
இவர் இணைய பத்திரிக்கை துறையில் 10 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். லைஃப் ஸ்டைல் கட்டுரைகள் மட்டுமின்றி சினிமா, அரசியல் ஆகிய செய்திகள் எழுதுவதிலும் திறன் படைத்தவர்.
ஆரோக்கியம்
ஆரோக்கிய குறிப்புகள்
தாக்குதல்

Latest Videos
Recommended Stories
Recommended image1
காலையில் சட்டென 10 நிமிடத்தில் தயாரிக்க ஈஸியான 5 பாரம்பரிய பிரெக்ஃபாஸ்ட் ரெசிபி
Recommended image2
Gut Health: குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் 7 விஷயங்கள்!
Recommended image3
Daily Multivitamin : வயதானவர்கள் தினமும் மல்டிவைட்டமின் எடுத்தால் என்ன ஆகும்? வெளியான அதிர்ச்சி தகவல்
Related Stories
Recommended image1
ஆண்கள் அவசியம் செய்துகொள்ள வேண்டிய 7 முக்கியமான ஆரோக்கிய பரிசோதனைகள்
Recommended image2
30+ பெண்களே உஷார்! உங்கள் எலும்புகளை இரும்பாக்க இதோ சில பாரம்பரிய உணவுகள்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved