தயிருடன் சேர்த்து சாப்பிடக் கூடாத 3 பொருட்கள்..!!
சில உணவுகளை தயிருடன் சேர்த்து சாப்பிடக் கூடாது என்கின்றனர் நிபுணர்கள். எனவே தயிருடன் சாப்பிடக்கூடாத சில உணவுகளை பற்றி தெரிந்து கொள்வோம்.
தயிர் சாப்பிட விரும்பாதவர்கள் குறைவு. அதற்கு காரணம் அதனுடைய சுவை மற்றும் அதிலுள்ள ஊட்டச்சத்துகள் போன்றவை ஆகும். தயிரில் கால்சியம், வைட்டமின் பி-2, பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் போன்ற பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன. தயிர் ஒரு சிறந்த புரோபயாடிக் ஆகும். தினமும் உங்கள் உணவில் தயிர் சேர்த்துக்கொள்வது செரிமானத்தை மேம்படுத்தவும், வயிற்று வலியைக் குறைக்கவும், வயிறு மற்றும் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் பெரிதும் உதவுகிறது. இருப்பினும், சில உணவுகளை இந்தத் தயிருடன் சேர்த்து உட்கொள்ளக் கூடாது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். எனவே தயிருடன் சாப்பிடக்கூடாத சில உணவுகளை பற்றி தெரிந்து கொள்வோம்.
பழங்கள்
இந்த பட்டியலில் முதல் முறையாக பழங்கள் குறித்து விரிவாக தெரிந்துகொள்வோம். மாம்பழம் போன்ற பழங்களை தயிருடன் சேர்த்து சாப்பிடுவது கூடாது. அதற்கு காரணம் மாம்பழத்தில் சூடு அதிகம் மற்றும் தயிர் குளிர்ச்சியான பொருள். எனவே இந்த கலவையை முடிந்தவரை தவிர்ப்பது நல்லது.
வெங்காயம்
இந்த பட்டியலில் வெங்காயம் இரண்டாவது இடத்தில் உள்ளது. தயிர் குளிர்ச்சியானது, வெங்காயமும் குளிர்ச்சியானது தான். ஆனால் வெங்காயம் நம் உடலுக்கு சென்றவுடன் சூட்டை கிளப்பிவிடும். இவை இரண்டையும் சேர்த்து சாப்பிடுவது வயிற்று பிரச்னைகள், தோல் ஒவ்வாமை போன்ற பிரச்னைகள் தோன்றும். எனவே தயிருடன் வெங்காயம் சேர்ப்பதை முடிந்தவரை தவிர்ப்பது நல்லது.
Fish
மீன்
தயிர் விலங்குகளின் பாலில் இருந்து பெறப்படுவதால், மீன் மற்றும் இறைச்சி போன்ற அசைவ உணவுகளுடன் அதை உட்கொள்ளக்கூடாது. எண்ணெய் உணவுகளுடன் தயிர் சாப்பிடாமல் இருப்பது நல்லது. இவை செரிமானத்தை மோசமாக பாதிக்கும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.