MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • உறவுமுறை
  • Relationship Tips : உங்கள் இல்லறம் நல்லறமாக இருக்க உதவும் 5 வழிமுறைகள்..!!

Relationship Tips : உங்கள் இல்லறம் நல்லறமாக இருக்க உதவும் 5 வழிமுறைகள்..!!

காதல் செய்வது அவ்வளவு கடினமான விஷயம் அல்ல. ஆனால் அதை காப்பாற்ற பல வருட கடின உழைப்பும் அர்ப்பணிப்பும் தேவை. உறவு காப்பாற்றப்பட வேண்டிய கட்டத்தை அடையும் போது தான் தம்பதிகளுக்கு இடையில் பிரச்னை வருகிறது. ஒருசில சமயங்களில் அது விவகாரத்து பெருமளவுக்குக் கூட சென்றுவிடுகிறது.   

2 Min read
Author : Dinesh TG
Published : Mar 15 2023, 08:37 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

சமூக ஊடகங்கள், சாட்டிங் தளங்கள், டேட்டிங் தளங்களில், உறவுகளை உருவாக்குவது ஒரு விளையாட்டாகிவிட்டது. நட்பு மற்றும் காதல் போன்ற உறவுகள் ஒரு நபரின் சமூக அந்தஸ்தின் ஒரு பகுதியாக உள்ளன. எனவே, படத்தில் காண்பது போல் ரொமாண்டிக்காக தோற்றமளிக்க மக்கள் தங்கள் நேரத்தையும் பணத்தையும் முதலீடு செய்யத் தயங்குவதில்லை. இது மட்டுமின்றி பல சமயங்களில் ஈர்ப்பையும் காதலாக கருதுகின்றனர். இதனாலேயே பல சமயங்களில் காதல் திருமணத்திற்குப் பிறகும் ஒருவரையொருவர் மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள முடியாமல் போய்விடுகிறது.

டேட்டிங்கிற்குச் செல்வது, வெறித்தனமாக ஒருவரை காதலிப்பது போன்றவை மிகவும் முக்கியமாக தெரியலாம். ஆனால் டேட்டிங் மூலம் நமக்கேற்ற நபரை தேர்வு செய்வதற்கு பெரும் புரிதல் தேவைப்படுகிறது. உறவைப் பேணுவது மிகவும் கடினம். ஒரு உறவைப் பேணுவதற்கு, நீண்ட கால புரிதல், மரியாதை மற்றும் நம்பிக்கை உள்ளிட்டவை மிகவும் முக்கியமானதாகும். 

உறவுகள் வாழ்க்கையில் நாம் செய்யும் முதலீடு போன்றவை. ஒரு சிறிய தவறு உங்களுடைய மகிழ்ச்சியை மூழ்கடித்துவிடக் கூடும். அத்தகைய சூழ்நிலையில், உங்கள் மனைவியுடன் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க விரும்பினால், சில வழிமுறைகள் உள்ளன. அதை பின்பற்றுவது நிச்சயமாக நல்ல பலனை அளிக்கும்.
 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26

ஒருவருக்கொருவர் சுதந்திரமாக பேசுங்கள்:

தம்பதிகள் நீங்கள் நன்றாக பேசிக்கொள்ள வேண்டும். உங்கள் எண்ணங்களைப் பகிர்வது ஒரு வெற்றிகரமான உறவின் அடித்தளமாகும். உறவில் உள்ள இரு நபர்களும் தங்கள் தேவைகள், ஆசைகள் மற்றும் எண்ணங்களைப் பற்றி உரையாடும் போது, அந்த உறவு வலுபெறுகிறது. இதன்மூலம் தவறான புரிதல்கள் அல்லது சண்டை போன்றவற்றை ஏற்படாமல் தடுக்கலாம்.
 

36

முதிர்ச்சியான எண்ணங்கள் கொண்ட வாழ்க்கைத் துணை:

அன்பு என்பது பரவலாக எல்லோரிடத்திலும் உண்டு. ஆனால் அந்த அன்பை நம்முடைய அன்பரிடத்தில் எப்படி வெளிப்படுத்துகிறோம் என்பது முக்கியம். அதுதான் உங்களுடைய வாழ்க்கையை சுயமரியாதையுடன் வாழ வழிவகுக்கும். அந்த அன்பு தவறும் போது, உங்களுடைய துணை உங்களுக்கு உறுதுணையாக இருப்பார். அதன்மூலம் எந்த பிரச்னையாக இருந்தாலும், அதிலிருந்து உங்களால் மீண்டு வருவதற்கான வலு கிடைக்கும்.
 

46

அதிகம் யோசிக்கக் கூடாது:

உறவுகள் உங்கள் வாழ்க்கையின் ஒரு பகுதியாகும். இதுதான் உங்களது முழு வாழ்க்கை என்று நீங்கள் நம்பத் தொடங்கும் போது, ​​அது இன்னும் மோசமடையத் தொடங்கும். அத்தகைய சூழ்நிலையில், எங்கள் தனிப்பட்ட இடம் அல்லது மனைவியின் தனிப்பட்ட இடத்தை மறந்து விடுகிறோம். ஒரு சிறிய மாற்றம் கூட அதிகப்படியான சிந்தனைக்கு வழிவகுக்கிறது. எனவே உண்மையான சிக்கல் எதுவும் இல்லை என்றால், அதிகமாக போட்டு யோசிக்காதீர்கள். அதிகப்படியான மன அழுத்தமும் அதிகப்படியான சிந்தனையும் உங்கள் உறவை அழிக்கக்கூடும்.
 

56

ஏற்ற இறக்கங்களுக்கு அஞ்சக் கூடாது

எல்லாவிதமான தம்பதிகளும் தங்களுடைய வாழ்க்கையில் ஏற்படும் ஏற்ற தாழ்வு பிரச்னைகளை ஒன்றாக சமாளிக்க வேண்டும். எல்லா நாளும் நன்றாகவே இருந்துவிடாது. நாம் எதிர்பார்க்கும் படியாகவே வாழ்க்கை அமைந்துவிடாது. ஆனால் உங்கள் உறவில் உங்களுக்கு தொடர்ந்து நம்பிக்கை இருந்தால், எத்தகைய மோசமான சூழ்நிலை வந்தாலும் சமாளிக்க முடியும். அதுதான் முக்கியம்.

திருமணமான ஆண்கள் “பிறர் மனை நோக்குவது” ஏன்..??

66

பிரிந்தாலும் சேர்ந்து இருங்கள்:

ஒன்றாக நேரத்தை செலவிடுவது நல்லது, இதன்மூலம் உங்களுடைய வாழ்க்கைத் துணை நீங்கள் நன்றாக புரிந்துகொள்ள முடியும். ஆனால் எப்போது துணையை சார்ந்திருப்பது எந்த உறவுக்கும் ஆரோக்கியமானது கிடையாது. நீங்கள் இல்லாமல் உங்கள் வேலையைச் செய்ய உங்கள் மனைவிக்கு ஒரு இடம் கொடுங்கள். இதன்மூலம் ஒரு உறவில் ஒருவருக்கொருவர் அன்பை அதிகரிக்கிறது மற்றும் நம்பிக்கை வளர்த்தெடுக்கிறது.
 

About the Author

DT
Dinesh TG
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Stress Relief Foods: ஸ்ட்ரெஸ் குறைக்க உதவும் 7 சிறந்த உணவுகள்
Recommended image2
Mood Boosting Habits: 60 விநாடிகளில் உங்கள் மூடை மாற்றும் EASY டிப்ஸ்
Recommended image3
Relationship Tips: உறவுகளை மேலும் அழகாக்க 7 சூப்பர் டிப்ஸ்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved