சோர்வாக இருக்கிறதா? வெறும் 60 விநாடிகளில் உங்கள் மனநிலையை மாற்றும் சில எளிய பழக்கங்களை இங்கே பார்க்கலாம்.
இந்த மூச்சுப் பயிற்சி உங்கள் இதயத் துடிப்பை சீராக்கி, மன அழுத்தத்தை உடனடியாகக் குறைக்கும். இது நரம்பு மண்டலத்தை அமைதியாக்கி, மனதை ரிலாக்ஸ் செய்யும்.
காலை வெயில் உங்கள் உடலில் 'செரோடோனின்' எனப்படும் மகிழ்ச்சி ஹார்மோனை அதிகரிக்கும். ஜன்னல் ஓரம் சிறிது நேரம் நின்றால் கூட உங்கள் மூட் உடனடியாக மாறும்.
தோள்பட்டையை லேசாக அசைத்து ரிலாக்ஸ் செய்வது, முதுகு வலியை குறைக்கும். வெறும் 10 விநாடிகள் இப்படிச் செய்தால் உடல் சோர்வு நீங்கி புத்துணர்ச்சி கிடைக்கும்.
உடலில் நீர்ச்சத்து குறையும் போது சோர்வும் கோபமும் வரும். ஒரு கிளாஸ் தண்ணீர் குடிப்பது உங்கள் உடலை ரெஃப்ரெஷ் செய்து, மூளையை சுறுசுறுப்பாக்கும்.
'இன்று நான் சிறப்பாக செயல்படுகிறேன்' என உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள். இந்த சின்ன பழக்கம் நாள் முழுவதும் உங்களை பாசிட்டிவாக வைக்கும்.
காபி, பெர்ஃபியூம் அல்லது எசென்ஷியல் ஆயில் வாசனையை நுகர்வது மூளையின் உணர்ச்சி மையத்தை தூண்டும். நல்ல நறுமணம் உடனடியாக மனதை அமைதியாக்கும்.
தொடர்ந்து மொபைல் பயன்படுத்துவதால் கைகளில் சோர்வு ஏற்படும். கைகளையும் விரல்களையும் ஸ்ட்ரெட்ச் செய்வது ரத்த ஓட்டத்தை அதிகரித்து நல்ல ரிலீஃப் தரும்.
நிமிர்ந்து நிற்பது அல்லது நேராக உட்காருவது உங்கள் தன்னம்பிக்கையை உடனடியாக அதிகரிக்கும். இது ஆக்சிஜன் ஓட்டத்தை சீராக்கி, மூடை பாசிட்டிவாக மாற்றும்.
தொடர்ந்து ஸ்கிரீனை பார்ப்பதை தவிர்த்து, சிறிது நேரம் கண்களுக்கு ஓய்வு கொடுங்கள். இந்த சின்ன பிரேக் உங்கள் கவனத்தை குவித்து, எரிச்சலை குறைக்கும்.
இன்று நடந்த ஒரு நல்ல விஷயத்தை நினைத்துப் பாருங்கள். இது டோபமைன் ஹார்மோனை சுரக்கச் செய்து, மன அழுத்தமான நாளிலும் மகிழ்ச்சியைத் தரும்.