குழந்தைகளை அன்பாகவும் சரியான வழிகாட்டுதலுடனும் வளர்க்க உதவும் 7 முக்கியமான பாசிட்டிவ் பேரன்டிங் வழிமுறைகளை இங்கே பார்க்கலாம்.
குழந்தைகள் பேசுவதை நீங்கள் முழுமையாகக் கேட்க வேண்டும். அவர்கள் கண்களைப் பார்த்து, குறுக்கிடாமல் பேசுவதைக் கேளுங்கள். இது அவர்கள் மனதில் உங்கள் மீதான நம்பிக்கையை அதிகரிக்கும்.
பாசிட்டிவ் பேரன்டிங் என்றால் கண்டிப்பு இல்லாமல் இருப்பது கிடையாது. குழந்தைகளின் வயதுக்கு ஏற்ப சில விதிகளை உருவாக்கி, அவற்றை அன்பாகப் பின்பற்றச் சொல்லுங்கள்.
குழந்தைகள் நல்ல விஷயங்களைச் செய்யும்போது அவர்களைப் பாராட்டுங்கள். சிறு பரிசுகள் கொடுத்து அவர்களை ஊக்கப்படுத்துங்கள். இது அவர்கள் தொடர்ந்து நல்ல செயல்களைச் செய்ய உதவும்.
நீங்கள் செய்வதைப் பார்த்தே குழந்தைகள் அதிகம் கற்றுக்கொள்கிறார்கள். பொறுமை, அன்பு, பொறுப்பு போன்ற குணங்களை முதலில் நீங்கள் கடைப்பிடித்து அவர்களுக்கு முன்மாதிரியாக இருங்கள்.
குழந்தைகள் தவறு செய்தால், உடனே கோபப்படாமல் அதற்கான காரணத்தைப் புரிந்துகொள்ள முயலுங்கள். அமைதியாக அவர்களிடம் பேசி, அந்தப் பிரச்சனையைச் சுமுகமாகத் தீர்க்க வழிகாட்டுங்கள்.
தவறுகளுக்குத் தண்டனை கொடுப்பதை விட, அந்தப் பிரச்சினையை எப்படித் தீர்ப்பது என அவர்களுக்குக் கற்றுக்கொடுங்கள். இது அவர்கள் சுயமாகச் சிந்தித்துச் செயல்படப் பெரிதும் உதவும்.
குழந்தைகள் தங்கள் உணர்வுகளை உங்களிடம் தயங்காமல் பகிரும் அளவுக்கு ஒரு பாதுகாப்பான சூழலை வீட்டில் உருவாக்குங்கள். அவர்களின் கோபம், மகிழ்ச்சி என அனைத்தையும் ஏற்றுக்கொள்ளுங்கள்.