Tamil

ஒரே நாளில் கரப்பான் பூச்சிக்கு ‘டாட்டா’! சமையலறை சீக்ரெட் டிப்ஸ்!

கரப்பான் பூச்சிகள் குப்பைகள் மற்றும் ஈரப்பதம் உள்ள இடங்களை அதிகம் தேடி வரும். இவற்றை இயற்கையான முறையில் விரட்டி அடிக்கும் வழிகளை பார்ப்போம்.

Tamil

சுத்தமாக வைக்கவும்

கரப்பான் பூச்சிகள் மீதமான உணவுகள் மற்றும் குப்பைகளை தேடி வரும். நீங்கள் சமையலறையை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

Image credits: Getty
Tamil

ஓட்டைகளை அடைக்கவும்

நீங்கள் கரப்பான் பூச்சிகள் வெளியிலிருந்து வீட்டுக்குள் நுழையும் வழிகளை முதலில் கண்டறிய வேண்டும். அந்த ஓட்டைகள் மற்றும் விரிசல்களை உடனடியாக அடைக்க வேண்டும்.

Image credits: Getty
Tamil

பேக்கிங் சோடா மற்றும் சர்க்கரை

நீங்கள் பேக்கிங் சோடாவுடன் சிறிது சர்க்கரை கலந்து சமையலறையில் வைக்கலாம். கரப்பான் பூச்சிகள் இதை சாப்பிட்டால் பாதிப்பு ஏற்பட்டு இறந்துவிடும்.

Image credits: Getty
Tamil

எசென்ஷியல் ஆயில்

கரப்பான் பூச்சிகளுக்கு யூகலிப்டஸ், ரோஸ்மேரி, பெப்பர்மின்ட் போன்ற எசென்ஷியல் ஆயில்களின் வாசனை சுத்தமாக பிடிக்காது. இதை பயன்படுத்தினால் அவை ஓடிவிடும்.

Image credits: Getty
Tamil

ஆரஞ்சு தோல்

ஆரஞ்சு தோல், எலுமிச்சை தோல், பிரிஞ்சி இலை ஆகியவை கரப்பான் பூச்சிகளை எளிதாக விரட்டும். நீங்கள் இவை அதிகம் வரும் இடங்களில் இவற்றை வைக்கலாம்.

Image credits: Getty
Tamil

வினிகர்

வினிகரின் வாசனை மற்றும் அமிலத்தன்மை கரப்பான் பூச்சிகளை அண்ட விடாது. நீங்கள் கரப்பான் பூச்சிகள் வரும் இடங்களில் வினிகரை ஸ்ப்ரே செய்யலாம்.

Image credits: Getty
Tamil

பூண்டு

பூண்டின் கடுமையான வாசனை கரப்பான் பூச்சிகளுக்கு ஆகாது. நீங்கள் கரப்பான் பூச்சிகள் நடமாடும் இடங்களில் பூண்டை தட்டி வைக்கலாம்.

Image credits: Social Media

கொலஸ்ட்ராலை குறைக்க கட்டாயம் சாப்பிட வேண்டிய 7 உணவுகள்

Snake In House: இந்த வாசனை வந்தா உங்க வீட்ல பாம்பு இருக்குனு அர்த்தம்

Evil Eye Protection: கண் திருஷ்டி படாம இருக்க, காதுக்கு பின்னாடி இல்ல.. இந்த இடத்துல பொட்டு வைங்க!

வெந்தய நீர் குடிப்பதால் கிடைக்கும் சூப்பர் நன்மைகள்