உங்க துணை உங்க மேல நிபந்தனையற்ற அன்பு வைத்திருக்கிறாரா? இந்த அறிகுறிகள் இருக்கான்னு செக் பண்ணுங்க
உங்கள் துணை உங்களிடம் நிபந்தனையற்ற அன்பு வைத்திருக்கிறாரா என்பதை அறிய சில டிப்ஸ் உள்ளது.
சின்ன சின்ன விஷயங்களுக்கெல்லாம் பிரேக் அப் செய்யும் இந்த காலக்கட்டத்தில் நிபந்தனையற்ற அன்பு என்பதே பலருக்கும் தெரியாமல் போய்விட்டது. எந்த எதிர்பார்ப்புமின்றி, என்ன நடந்தாலும் உனக்கான நான் இருப்பேன் என்று கூறுவது தான் நீங்கள் காட்டும் அன்பு தான் நிபந்தனையற்ற அன்பு. உங்கள் துணை உங்களிடம் நிபந்தனையற்ற அன்பு வைத்திருக்கிறாரா என்பதை அறிய சில டிப்ஸ் உள்ளது.
நிபந்தனையற்ற அன்பு என்பது மற்றவருக்குத் தேவையானதை முழு மனதுடன் கொடுப்பதாகும். ஒரு உறவில் இரு தரப்பினரும் எந்த சூழலிலும் ஒருவருக்கொருவர் பரஸ்பர ஆதரவளிக்க தயாராக இருக்க வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக, கூட்டாண்மை என்பது இதுதான். ஒரு நபர் மற்ற நபரின் தேவைகளைப் பூர்த்தி செய்ய தங்கள் தேவைகளை புறக்கணிக்க வேண்டும் என்று இது அர்த்தம் கிடையாது. எனவே உறவின் கொடுக்கல் வாங்கல் அம்சத்தில் இரு தரப்பினரும் சமமானவர்கள் என்று அர்த்தம்.
Relationship
விஷயங்கள் சுமூகமாக இருக்கும்போது எல்லோரும் ஒருவருக்கொருவர் அன்பாக நடந்துகொள்கிறார்கள். உறவுச் சிக்கல்களைத் தீர்க்கும் போது கடினமான காலங்களில் உங்களிடம் கருணை காட்ட விரும்பும் ஒருவரை நீங்கள் கண்டால், அவர்களை ஒருபோதும் விட்டுவிடாதீர்கள்.. நிபந்தனையற்ற அன்பு என்பது உங்கள் உறவுகளில் என்ன பிரச்சனைகள் இருந்தாலும் அதை கண்டு கொள்ளாமல் இருக்க வேண்டும் என்பதை குறிக்காது.
எந்த உறவும் கருத்து வேறுபாடுகள் இல்லாமல் இருக்காது. ஒன்றாக வாழும் நபர்களுடன் கருத்து வேறுபாடுகளும் வாக்குவாதங்களும் வரும். அதை எப்படி எதிர்கொள்கிறீர்கள் என்பதுதான் முக்கியம். எந்தவொரு உறவிலும் உள்ள சிக்கல்களை நேருக்கு நேர் எதிர்கொள்ள வேண்டும். மேலும், எல்லா குறைகளையும் கடந்து நீங்கள் உங்கள் துணையை ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் துன்புறுத்தலை பொறுத்துக்கொள்வது என்று அர்த்தமல்ல. ஆனால் அவர் உண்மையாகவே மாறினால் நீங்கள் தவறுகளை மன்னித்து, அன்பையும் ஏற்றுக்கொள்ளலையும் தொடர்ந்து வழங்குவது அவசியம்.
உங்கள் அன்புக்குரியவர்களுக்கு நிபந்தனையற்ற அங்கீகாரத்தை வழங்க விரும்பினால், அவர்களுடன் எல்லாவற்றையும் தெளிவாகத் தொடர்புகொள்வதும் முக்கியம். உங்கள் உணர்வுகளைப் பற்றி வெளிப்படையாகவும், உங்கள் எல்லைகளைப் பற்றி உறுதியாகவும் இருங்கள். நீங்கள் எந்த இடத்தில் நிற்கிறீர்கள் என்பதை மற்றவருக்குத் தெரியப்படுத்தவும், உறவில் ஏதேனும் பிரச்சனைகள் ஏற்பட்டால் அதைச் சமாளிக்கவும் இதுவே சிறந்த வழியாகும். உங்கள் தேவைகள் பூர்த்தி செய்யப்படுவதை உறுதி செய்ய விரும்பினால், வெளிப்படையான தகவல் தொடர்பும் அவசியம்.