கணவனுக்கு தெரியாம எல்லா மனைவியும் இந்த 1 விஷயத்தை ரகசியமா வச்சிக்கிட்டா ரொம்ப நல்லது... அது என்னனு தெரியுமா?
கணவனுக்கும் மனைவிக்கும் இடையே எந்த ரகசியமும் இருக்கக் கூடாது என்பார்கள். ஆனால் இந்த ஒரு விஷயம் மட்டும் அப்படியல்ல...
நம்முடைய வீட்டில் அம்மாக்கள் பருப்பு டப்பா, அரிசிக்குள்ளாக காசு ஒளித்து வைத்திருப்பதை நாம் பார்த்திருப்போம். அந்த காசு அவர்களின் சேமிப்பு. வீட்டு செலவு போக அவ்வப்போது மீதமாகும் பணத்தை அப்படி சேர்த்து வைப்பார்கள். வீட்டில் அவசர தேவை வரும்போது அதை எடுத்து செலவு செய்வார்கள். அப்படி, கணவருக்கு தெரியாமல் சிறிது பணத்தை சேமிப்பது காலங்காலமாக நடந்து வருகிறது. எல்லார் வீட்டிலும் இந்த விஷயம் நடந்தாலும், ரகசியமாக பணம் சேர்த்து வைக்க ரகசியமாக வங்கி கணக்கை தொடங்குவது கூடுதல் நன்மை தரும். இது ஒவ்வொரு பெண்ணின் தனிப்பட்ட தேவை என்றே சொல்லலாம். பெண்களுக்கான சேமிப்பு பகுதி எப்போதும் வீட்டின் சமையலறையாகவே இருக்கவேண்டியதில்லையே.. அது வங்கியாகவும் இருக்கலாம்.
ஒரு பெண் நிதி சுதந்திரம் கொண்டிருந்தால் சில கடினமான சூழல்களை எளிதில் சமாளித்துவிடுவாள். கணவருக்கு தெரியாமல் ரகசியமாக வங்கி கணக்கு வைக்க சொல்வது நிதி சுதந்திரம் இருக்கவேண்டும் என்பதற்காக தான். ஒருவேளை குடும்பத்தில் எதிர்பாராத செலவு, அவசர சூழ்நிலை, உறவில் நிதி தொடர்பான பிரச்சனை வரும்போது இந்த தனிக்கணக்கு உங்களுக்கு உதவும்.
தனியுரிமை:
எல்லா விஷயத்திற்கும் கணவரிடம் கேட்டு பணம் பெறுவது சிலருக்கு சங்கடத்தை ஏற்படுத்தும். வேலைக்கு செல்லும் நபருக்கு தனிக்கணக்கு இருந்தால் வீட்டு செலவு போக மீதியை வங்கியில் சேமித்து கொள்ளலாம். வேலைக்கு செல்லாத பெண்களாக இருந்தால் வீட்டு செலவில் சிக்கனம் செய்து சேமிக்கலாம். இந்த சேமிப்பை தனிப்பட்ட விருப்பங்கள், பொழுதுபோக்கு ஏதேனும் புதிய பொருள் வாங்க செலவு செய்யலாம்.
புதிய திட்டம்:
புதியதாக ஏதேனும் கற்று கொள்ள பயிற்சி வகுப்புகள் செல்லலாம். புது பிசினஸ் தொடங்க இந்த பணம் பயன்படலாம். வீட்டில் பொருளாதாரப் பற்றாகுறை வந்தால் உங்களுடைய சேமிப்பு உதவியாக இருக்கும். ஒருவேலை உங்களுடைய கணவர் ஒரு குடிகாரர் அல்லது சூதாடி என்று வைத்து கொள்வோம். வீட்டில் நீங்கள் என்னதான் பணத்தை சேமித்து வைத்தாலும் அது வீணாகிவிடும். அதே நேரம் நீங்கள் ரகசியமாக வங்கி கணக்கை வைத்திருந்தால் அது நன்மையே!
இதையும் படிங்க: பெண்கள் எப்படியெல்லாம் செக்ஸ் கற்பனை பண்ணுவாங்க தெரியுமா?
நீங்கள் குறைவாக சம்பாதிக்கும்போது அல்லது அதிகமாக சம்பாதித்தும் நிதி விஷயங்களில் கணவனை சார்ந்து இருக்கும் நேரத்தில் ரகசிய வங்கிக் கணக்கு உங்களுக்கு உதவியாக இருக்கும். இதனால் கணவன் மனைவி இருவரும் பணப்புழக்கத்தில் சரிசமமாக இருக்க முடியும். வீட்டுச் செலவுகள், மற்ற நிதி விஷயங்களில் பங்களிக்க முடியும். எல்லா உறவிலும் வெளிப்படையான தன்மை அவசியம். அதனால் நேர்மையாக இருப்பது அவசியம் என்றாலும், சரியான காரணங்களோடு ரகசிய வங்கி கணக்கை வைத்திருந்தால் அது நல்லதே! பணத்தை சேமிக்கும்போது புத்திசாலித்தனமாக இருக்கலாம். ஆனால் போலியாக ஏமாற்றும் போக்கு இருக்கவேண்டாம். உறவை சிதைக்கும்.
இதையும் படிங்க: முதலிரவில் தம்பதிகள் ஏன் பால் குடிக்கிறார்கள் தெரியுமா? யாருக்கும் தெரியாத சுவாரசியமான பின்னணி!!