உங்கள் துனை உங்களை ஏமாற்றி பயன்படுத்திக் கொள்கிறார் என்பதற்கான அறிகுறிகள் இவை தான்..
உங்கள் துணை உங்களை பயன்படுத்துகிறார் என்பதற்கான அறிகுறிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
திருமண உறவில் வலுவான பிணைப்பை உருவாக்க தம்பதிகள் ஆரோக்கியமான, பரஸ்பர மரியாதைக்குரிய உறவைப் பேணுவது அவசியம். ஆனால் ஒரு துணை மற்றொருவரை தங்கள் சுயநலத்திற்காக பயன்படுத்தக்கூடிய நிகழ்வுகள் உள்ளன, இதன் விளைவாக உறவில் சிக்கல் ஏற்படும். ஒரு ஆரோக்கியமான உறவை வளர்க்க வேண்டுமெனில், உங்கள் துணை உங்களை பயன்படுத்துகிறார் என்பதற்கான அறிகுறிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
உங்கள் துணை நிதி மற்றும் பண விவகாரங்கள் தொடர்பாக உங்களை எந்த முடிவும் எடுக்க அனுமதிக்கவில்லை எனில் கவனம் தேவை. அவர் உங்களை பயன்படுத்திக் கொள்கிறார் என்பதற்கான அறிகுறியாகும். அதாவது பணம் விஷயத்தில் உங்களை தொடர்ந்து கட்டுப்படுவத்துவது, உங்களிடம் உள்ள பணம் தொடர்பான தகவல்களை சொல்லுமாறு அழுத்தம் கொடுப்பது அல்லது உங்கள் ஆலோசனை இல்லாமல் பணம் தொடர்பான முடிவுகளை அவரே எடுப்பது போன்றவை. ஆரோக்கியமான உறவில் வெளிப்படையான தொடர்பு இருப்பதுடன், இருவரும் சேர்ந்து முடிவெடுக்கும் அம்சம் இருக்கும்.
உங்கள் துணை உங்களை ஏமாற்றி உங்களை பயன்படுத்துபவராக இருந்தால், அவர் உங்களை உணர்வு பூர்வமாக திசை திருப்பலாம். அதாவது உங்கள் மீது தவறு இல்லை என்றாலும், உங்களுக்கு குற்ற உணர்வை ஏற்படுத்தலாம். உங்கள் துணை உங்கள் சுயமரியாதையை தொடர்ந்து குறைமதிப்பிற்கு உட்படுத்தினாலோ அல்லது உங்கள் உணர்வுகளை நிராகரித்து வந்தாலோ அவர் நிச்சயம் உங்களை பயன்படுத்திக் கொள்கிறார் என்பதற்கான அறிகுறியாகும்.
உங்கள் துணை உங்களை தனிமைப்படுத்தினால் அது மோசமான அறிகுறி. உங்கள் நண்பர்கள் அல்லது பெற்றோருடன் பேசக்கூடாது என்பது போன்ற கட்டுப்பாடு விதித்தால், அவர் உங்களை தனிமைப்படுத்த முயற்சிக்கலாம். ஆனால் ஆரோக்கியமான உறவில் ஒரு துணை மற்றொருவரின் தனிப்பட்ட வளர்ச்சியை ஊக்குவிப்பார். தனிமைப்படுத்தப்பட்டதற்கான அறிகுறிகளுக்கு விழிப்புடன் இருங்கள், ஏனெனில் அவை ஒட்டுமொத்த நல்வாழ்வைத் தீங்கு விளைவிக்கும்.
Some signs that your family does not love you
ஒரு சமநிலையான உறவில், இரு கூட்டாளிகளும் தங்கள் திறன்களுக்கு ஏற்ப பங்களிக்கிறார்கள். வீட்டு வேலைகள், குழந்தை பராமரிப்பு அல்லது பிற பணிகளில் உங்கள் துணை உங்களுக்கு நிச்சயம் உதவுவார். ஆனால் உங்களுக்கு அவர் எந்த உதவியை செய்ய முன்வரைவ்ல்லை என்றாலோ அல்லது பெரும்பாலான வேலைகளை நீங்கள் மட்டுமே செய்தாலோ அவர் உங்களை பயன்படுத்திக் கொள்கிறார் என்பதற்கான அறிகுறி. ஒரு ஆரோக்கியமான திருமண உறவில் உங்கள் துணை எல்லா வேலைகளையும் பகிர்ந்து கொள்வார்..
வெளிப்படையான மற்றும் நேர்மையான தொடர்பு ஆரோக்கியமான உறவின் அடிப்படை. உங்கள் துணை உங்களைக் கலந்தாலோசிக்காமல் ஒருதலைப்பட்சமான முடிவுகளை எடுத்தால் அவர் உங்களை பயன்படுத்துகிறார் என்பதற்கான அறிகுறி. மேலும் இந்த வெளிப்படைத்தன்மை இல்லாமை உணர்ச்சி மற்றும் உடல் ரீதியான பிரச்சனைகள் வரை நீட்டிக்கப்படலாம். ஒரு திருமண உறவில் உங்கள் துணையின் கருத்துகளை அங்கீகரிப்பதும், வெளிப்படையான தொடர்பைப் பேணுவதும் உறவின் வளர்ச்சிக்கு முக்கியமானதாகும். எனவே உங்கள் துணையிடம் இந்த அறிகுறிகள் இருந்தால் கவனமாக இருப்பது நல்லது.