உங்கள் துணை உணர்ச்சி ரீதியாக முதிர்ச்சியடையாதவரா? இந்த அறிகுறிகள் இருக்கான்னு பாருங்க..
உங்கள் துணை உணர்ச்சி ரீதியாக முதிர்ச்சி அடையாதவர் என்பதை குறிக்கும் அறிகுறிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
திருமண உறவில் உணர்ச்சிபூர்வமான தொடர்புகளை உருவாக்குவது என்பது முக்கிய அம்சமாகும், ஏனெனில் இது உங்கள் துணையுடன் பிணைப்பை உருவாக்க உதவுகிறது. இருப்பினும், உணர்ச்சி வெளிப்பாடுகள் சரியாக நிர்வகிக்கப்படாவிட்டால் மோதல்கள் மற்றும் உறவில் விரிசல்களுக்கு வழிவகுக்கும். மிகவும் உணர்ச்சிவசப்படுவதைத் தவிர்ப்பது அவசியம், ஆனால் அது உறவுகளுக்கு நச்சுத்தன்மையை ஏற்படுத்தும் என்பதால் உணர்வு ரீதியான முதிர்ச்சியற்ற தன்மையை தவிர்ப்பது முக்கியமானது.
உணர்ச்சி ரீதியாக முதிர்ச்சியடையாத நபர்கள், தங்கள் துணையை உதவியற்றவர்களாகவும் குழப்பமாகவும் உணர்வார்கள். அத்தகையவர்களை அடையாளம் காண உங்களுக்கு உதவ சில அறிகுறிகள் உள்ளன. உணர்ச்சி ரீதியாக முதிர்ச்சியடையாத கூட்டாளிகள் தற்காப்பு மற்றும் உணர்ச்சி ரீதியாக வெடிக்கும் நடத்தையை வெளிப்படுத்தலாம், கோபம் போன்ற அடிப்படை உணர்ச்சிகளைப் புரிந்துகொள்வதற்கும் செயலாக்குவதற்கும் திறன் இல்லாமல், அவர் உங்கள் உங்களை குற்றம்சாட்டலாம் அல்லது கூச்சலிடலாம்.
உணர்ச்சி ரீதியாக முதிர்ச்சியடையாத கூட்டாளர்கள் தங்கள் உணர்வுகளுக்காக தங்கள் கூட்டாளர்களை அவமானப்படுத்தலாம், சில நேரங்களில் அவர்கள் குழந்தைத்தனமாக நடந்து கொள்ளலாம். அவர்கள் உணர்ச்சி ஆழம் மற்றும் சுய பிரதிபலிப்புடன் போராடும்போது எல்லாவற்றையும் தனிப்பட்ட தாக்குதலாக உணர்கிறார்கள்.
உணர்ச்சி ரீதியாக முதிர்ச்சியடையாத நபர்கள் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு பதில் அதை புறக்கணிக்க முயல்வார்கள், உறவுகள் எளிதாக இருக்க வேண்டும் என்று அவர்கள் நம்புகிறார்கள், கருத்து வேறுபாடுகள் இருக்கும்போது வெளியேறத் தயாராக இருக்கிறார்கள்.
உணர்ச்சி ரீதியாக முதிர்ச்சியடையாத கூட்டாளர்கள் பெரும்பாலும் ஒழுங்கற்ற அல்லது செயலிழந்த உறவுகளின் வரலாற்றைக் கொண்டிருபார்கள், அவர்கள் கடந்த காலத்திலிருந்து கற்றுக்கொள்ள மாட்டார்கள். தங்கள் குற்றத்தை ஒப்புக்கொள்ளாமல், அடுத்த நபரை குற்றம்சாட்டுவார்கள்.
தங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு முன்னால் வித்தியாசமாக செயல்பட முனைவதுடன், எல்லாம் சரியானது என்ற தோற்றத்தை கொடுக்க முயற்சிப்பார்கள். வெளிப்படையான தொடர்பு, சண்டைகளுக்கு பிறகு வேலிகளைச் சரிசெய்யும் திறன் மற்றும் தனிப்பட்ட பொறுப்பு ஆகியவை உள்ள குடும்பங்களில் உணர்ச்சி ரீதியாக முதிர்ச்சியடைந்தவர்கள் வளர்கிறார்கள் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இருப்பினும், வாழ்க்கையின் பிற்பகுதியில் கூட, சரியான வழிகாட்டுதலுடன், ஒவ்வொரு தனிநபரும் 'வாழ்க்கையை புதிய வழிகளில் வழிநடத்தும் திறன் மற்றும் உணர்ச்சி கட்டுப்பாடுகளை வளர்த்துக் கொள்ள முயற்சி செய்யலாம். அது ஒவ்வொரு தனிநபரின் முயற்சியை சார்ந்தது என்பது முக்கியம்.