உங்கள் உறவை முற்றிலும் மகிழ்ச்சியாக மாற்றக்கூடிய முக்கியமான விஷயங்கள்.. தம்பதிகளே கவனிங்க..
உறவில் விரிசல் அல்லது பிரச்சனைகள் இருந்தால், அந்த உறவை மாற்றியமைக்க உதவும் சில குறிப்புகளை இந்த பதிவில் பார்க்கலாம்.
காதல் அல்லது திருமண உறவு எதுவாக இருந்தாலும் வலுவான ஆரோக்கியமான பிணைப்பை வலுப்படுத்துவது என்பது சவாலான விஷயம். ஒரு திருமண உறவில் பிணைப்பு, நெருக்கம், நம்பிக்கையை உருவாக்க நிறைய முயற்சியும், புரிதலும், வெளிப்படையான தகவல் தொடர்பு தேவைப்படுகிறது. ஆனால் சண்டைகள், மனஸ்தாபம் அல்லது உறவில் விரிசல் இருந்தால், அதை மகிழ்ச்சியான உறவாகமாற்றியமைக்க உதவும் சில குறிப்புகளை இந்த பதிவில் பார்க்கலாம்.
உறவில் குழப்பம் மற்றும் சண்டைகள் இருக்கும் சூழ்நிலைகளில், உணர்ச்சிகளை கட்டுப்படுத்தும் திறன்களை நாம் கற்றுக்கொள்ள வேண்டும். கோபத்தில் வார்த்தை வீசாமல், சிறிது நேரம் கழித்து பொறுமையாக உட்கார்ந்து உங்கள் துணையுடன் விவாதிக்கலாம். இது உறவில் உள்ள சிக்கல்களை தீர்க்க உதவும்.
நமது தகவல் தொடர்பு திறன்களில் வெளிப்படையாக இருப்பது அவசியம். உங்கள் துணையின் உணர்வுகளை புரிந்துகொள்ளவும் அல்லது பிரச்சனைகளை பேசி தீர்க்கவும், நீங்கள் தெளிவு பெற கேள்விகள் கேட்பதும் அவசியம். இந்த வெளிப்படையான தகவல் தொடர்பு மூலம் மோதல் கொண்ட உறவை மகிழ்ச்சியாக மாற்றி அமைக்க முடியும்.
உங்கள் துணை எப்படி உணர்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள, அவர்களுடன் தவறாமல் வெளியே செல்ல வேண்டும். ஒன்றாக வாக்கிங் செல்வது அல்லது ஒன்றாக திரைப்படம் பார்ப்பது போன்ற செயல்களை செய்யலாம். உறவில் நாம் எங்கு நிற்கிறோம் என்பதைப் புரிந்துகொள்வதற்கான கூடுதல் தெளிவைப் பெறவும் இது உதவும்.
ஒரு சிறிய பாராட்டு உறவை நீண்ட தூரம் கொண்டு செல்லும். எப்போதும் நன்றியுணர்வை வெளிப்படுத்துதல், சிறிய விஷயமாக இருந்தாலும் உங்கள் துணையைப் பாராட்டுதல் அல்லது நன்றி கூறுதல் ஆகியவை உங்கள் துணையை நீங்கள் எவ்வளவு மதிக்கிறீர்கள் என்பதை உணர வைக்கும்.
உறவில் எப்போதுமே பரஸ்பர மரியாதை, மதிப்பு ஆகியவை முக்கியம். உங்கள் துணையை மரியாதையுடன் நடத்துவது, அவர்களின் தேவைகளுக்கு மதிப்பு கொடுப்பது அல்லது அவர்கள் கூறுவதை காது கொடுத்து கேட்பது ஆகியவை சிக்கலான உறவை மாற்றி அமைக்க உதவும்.