உங்கள் துணை உங்களை ஏமாற்றுகிறார் என்பதை எப்படி கண்டுபிடிப்பது..? இதெல்லாம் தான் அறிகுறிகள்..
உங்கள் துணை உங்களை ஏமாற்றுகிறார் என்பதை குறிக்கும் அறிகுறிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
திருமண உறவில் உங்கள் துணை உங்களை ஏமாற்றுகிறார் என்று தெரியவரும் போது அது மிகுந்த வலியை ஏற்படுத்தும். உங்கள் துணை உங்களை ஏமாற்றலாம் என்பதை உங்களால் நம்ப முடியாது.. ஆனால் உங்கள் துணை உங்களை ஏமாற்றுகிறாரா என்பதைக் கண்டறிவது ஒரு சிக்கலான பணியாகும், ஏனெனில் ஏமாற்றுபவர்கள் தங்கள் செயல்களை மறைப்பதில் மிகவும் திறமையானவர்கள். இருப்பினும், உங்கள் துணை உங்களை ஏமாற்றுகிறார் என்பதை குறிக்கும் அறிகுறிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
உங்கள் துணை உங்களை ஏமாற்றினால், அவர்கள் குறிப்பிடத்தக்க நடத்தை மாற்றங்களை வெளிப்படுத்தலாம். உங்களிடம் அதிகமான விஷயங்களை மறைப்பது, ரகசியங்களை கடைபிடிப்பது, திடீர் தற்காப்பு அல்லது அவர்களின் அணுகுமுறை மற்றும் செயல்களில் ஒட்டுமொத்த மாற்றம் ஆகியவை அடங்கும்.
தகவல்தொடர்புகளில் வெளிப்படைத்தன்மை இல்லை எனில் அது ஒரு எச்சரிக்கை அறிகுறியாகும். உங்கள் துணை தங்கள் தொலைபேசி, செய்திகள் அல்லது பிற தகவல்தொடர்புகளை மறைத்தால், அவர் உங்களை ஏமாற்றுகிறார் என்று அர்த்தம். மேலும், ஒரு தகவலைப் பகிர்வதில் தயக்கம் காட்டினாலோ அல்லது அவர்களின் தனியுரிமையை பாதுகாப்பதில் அதிக கவனம் செலுத்தினாலோ அவர் உங்களை ஏமாற்றுகிறார் என்று அர்த்தம்..
ஏமாற்றுபவர்கள் பொதுவாக அதிகமாக பொய் சொல்வார்கள். உங்களிடம் ஏதாவது விளக்கம் அளிக்கும் போது அவர்களின் விளக்கங்கள் அல்லது அவர்களின் செயல்கள் பற்றிய விவரங்களில் முரண்பாடுகள் இருந்தால் அவர் உங்களை ஏமாற்றுகிறார் என்று அர்த்தம்.
ஒரு திருமண உறவில், உடல் அல்லது உணர்ச்சி நெருக்கம் குறைவது ஏமாற்றத்தைக் குறிக்கலாம். ஆனால் அதே நேரம், சில ஏமாற்றுக்காரர்கள் தங்கள் துரோகத்தை மறைக்க அதிக பாசம் அல்லது கவனத்துடன் இருக்கலாம்.
உங்கள் துணையின் வழக்கமான செயல்களின் திடீர் மாற்றங்கள் நேர்மையின்மையின் அடையாளமாக இருக்கலாம். உங்கள் துனையை எளிதில் அணுக முடியவில்லை எனில் அல்லது அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை எனில் அவர் உங்களை ஏமாற்றலாம். அதை விசாரிக்க வேண்டியது அவசியம்.
உங்கள் உள்ளுணர்வை நம்புங்கள். உங்கள் ஏதோ தவறு செய்கிறார் அல்லது நீங்கள் ஏமாற்றப்படுகிறீர்கள் என்ற உள்ளுணர்வு உங்களுக்கு இருந்தால், இந்த உணர்வுகளை ஆராய்ந்து உண்மையைத் தேடுங்கள். உங்கள் உள்ளுணர்வு ஆச்சர்யப்படும் வகையில் துல்லியமாக இருக்கும்.
சில சந்தர்ப்பங்களில், நிதி முரண்பாடுகள் ஏமாற்றத்டிஹ்ன் அடையாளமாக இருக்கலாம். விவரிக்கப்படாத செலவுகள், மறைக்கப்பட்ட கணக்குகள் அல்லது இரகசிய நிதி நடத்தை ஆகியவற்றை நீங்கள் கவனிதால் உங்கள் துணை உங்களை ஏமாற்றுகிறார் என்று அர்த்தம்..