தம்பதிகளே இந்த அறிகுறிகளை புறக்கணிக்காதீங்க.. உறவில் விரிசல் ஏற்படலாம்..
சில நேரங்களில், சில பழக்கவழக்கங்கள் அல்லது நடத்தைகள் சரியாக இல்லை என்றால் அது டாக்ஸிக் உறவாக மாறலாம். எனவே உறவில் நீங்கள் புறக்கணிக்கக்கூடாத அறிகுறிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
திருமணம் அல்லது காதல் என்பது ஒரு அழகான உணர்வு ஆனால் சில நேரங்களில், சில காரணிகள் உறவை முறிக்கின்றன. நீங்கள் எந்த வகையான உறவில் இருக்க விரும்புகிறீர்கள் என்பதைத் தீர்மானிக்கும் போது பல காரணிகள் செயல்படுகின்றன. சரியான துணை, சரியான உறவு, அல்லது திருமணம் போன்றவற்றிற்கான மன உருவமும் சரிபார்ப்புப் பட்டியலும் நம் அனைவருக்கும் உள்ளது. ஆனால் சில நேரங்களில், சில பழக்கவழக்கங்கள் அல்லது நடத்தைகள் சரியாக இல்லை என்றால் அது டாக்ஸிக் உறவாக மாறலாம். எனவே உறவில் நீங்கள் புறக்கணிக்கக்கூடாத அறிகுறிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
துஷ்பிரயோகம்
ஆரோக்கியமான உறவில், தம்பதியர் ஒருவரையொருவர் மதிப்பார்கள் பரஸ்பரம் அன்பு காட்டுவார்கள், உண்மையாக நேசிப்பார்கள். ஆனால், உங்கள் துணை உங்களை அடித்து துன்புறுத்தினாலோ அல்லது உங்களை உணர்ச்சிப்பூர்வமாக துன்புறுத்தினோலோ செய்தாலோ, அது உறவில் விரிசலை ஏற்படுத்தும்.
உறவு ரகசியம்
உங்கள் துணை உங்களைப் பற்றி தங்கள் நண்பர்களுக்கோ அல்லது குடும்பத்தினருக்கோ தெரிவிக்கவில்லை என்றால், அவர்கள் ஏற்கனவே உறவில் உள்ளனர் அல்லது உங்களை ஏமாற்றுகிறார்கள். இல்லைஎனில் உங்களுடனான உறவில் இருக்க ஈடுபட பயப்படுகிறார்கள். காதல் உறவில் வெளிப்படைத்தன்மை அவசியம். இது உறவில் பிரிவு ஏற்படுவதற்கான வெளிப்படையான காரணம ஆகும்.
ஏமாற்றுதல்
உங்கள் துணை உங்களை ஏமாற்றினால் மன்னிக்காதீர்கள். ஏமாற்றுதல் என்பது ஒருவரின் நம்பிக்கை மற்றும் அவமரியாதைக்கு வழிவகுக்கிறது. மேலும் நம்பிக்கை இல்லை என்றால் அந்த உறவும் நீடிக்காது.
குற்ற உணர்வை ஏற்படுத்துதல்
ஒரு வாக்குவாதத்தில், தெரிவிக்கும் கருத்துகளுக்கு பலர் பின்னர் வருத்தம் தெரிவிப்பார்கள். ஆனால் சிலர் வேண்டுமென்ற உங்களை புண்படுத்த வேண்டும் என்ற நோக்கில், உங்கள் துணை கடந்த கால அனுபவங்களை வாக்குவாதத்தில் கொண்டு வந்து, உங்களை இழிவுபடுத்தினால், உங்கள் மீது குற்றம் சாட்டினால், அது மோசமான அறிகுறியாகும். உங்கள் உறவில் சிக்கல் ஏற்படலாம்.
மோசமான சுகாதாரம்
சுகாதாரத்தை நன்கு உணர்ந்து கொள்வது அவசியம். அடிக்கடி பல் துலக்குவது முதல் தினமும் குளிப்பது மற்றும் உடல் துர்நாற்றத்தை தடுக்க வாசனை திரவியம் பயன்படுத்துவது, உடலுறவுக்குப் பிறகு சுத்தம் செய்வது போன்றவை முக்கியம். உங்கள் துணை சுகாதாரத்தை கடைபிடிக்கவில்லை எனில், உறவில் சிக்கல் ஏற்படலாம்.
நடத்தையைக் கட்டுப்படுத்துதல்
உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்தையும் உங்கள் பங்குதாரர் கட்டுப்படுத்த முயன்றால், உங்கள் தொழில், உங்கள் ஆடை தேர்வு அல்லது உங்கள் நண்பர்கள், உறவை முறித்துக் கொள்ளுங்கள். ஆரோக்கியமான உறவில், உங்கள் பங்குதாரர் உங்கள் வாழ்க்கைக்கு மதிப்பு சேர்க்கிறார், உங்கள் முடிவுகளை ஆதரிக்கிறார் மற்றும் ஆக்கபூர்வமான விமர்சனங்களைத் தருகிறார்.