MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • உணவு
  • கோடையில் தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்!

கோடையில் தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்!

இந்த கோடை வெப்பநிலையில் பாலூட்டும் தாய்மார்களுக்கு பால் உற்பத்தி அதிகரிக்க என்னென்ன சாப்பிட்டலாம் என்பதை குறித்து காணலாம்.

2 Min read
Author : Kalai Selvi
| Updated : May 19 2023, 10:33 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
வெந்தயம்

வெந்தயம்

வெந்தயம் சமயல் அறையில் மட்டும் பயன்படுத்தபடும் மசலா பொருள் அல்ல. இது தாய்ப்பால் அதிகரிக்க உதவும் மூலிகையில் ஒன்று ஆகும். இவற்றில் இருக்க கூடிய ஈஸ்ட்ரோஜன் அதிகம் கொண்டுள்ள இவை தாய்ப்பாலை அதிகரிக்க செய்யும்.

சாப்பிடும் முறை:
ஒரு கிளாஸில் தண்ணீர் எடுத்து அதில் கால் டீஸ்பூன் அளவு வெந்தயம் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். பின் அதை இளஞ்சுடாகவோ அல்லது குளிர்ச்சியாகவோ சாப்பிட வேண்டும். இவ்வாறு தினமும் இரண்டு முறை சாப்பிடலாம்.

26
பப்பாளிப்பழம்

பப்பாளிப்பழம்

அநேக மருத்துவ குணங்களை பப்பாளிப்பழம் கொண்டுள்ளது. இளந்தாய்மார்களின் உடலில் ஆக்ஸிடாஸின் என்னும் ஹார்மோனை சுரக்க இது உதவுகிறது. எனவே தயக்கமில்லாமல் இதை சாப்பிடலாம்.

சாப்பிடும் முறை:
பப்பாளி பழத்தை (காய் எடுக்க கூடாது)  துண்டுகளாக்கி அப்படியே சாப்பிடலாம். மேலும் இதை சாலட்களில் சேர்த்தம் சாப்பிடலாம். இது தாய்ப்பாலின் அளவு மற்றும் தரத்தை அதிகரிக்கச் செய்யும். குறிப்பாக செரிமானத்திற்கு உதவுகிறது.

36
பெருஞசீரகம்:

பெருஞசீரகம்:

பெருஞ்சீரகம் தாய்ப்பாலின் அளவை அதிகரிக்கும் என்று கூறப்படுகின்றது. மேலும் இது தாய்க்கும் நன்மை செய்வதோடு மட்டுமல்லாமல், பிறந்த குழந்தையின் பெருங்குடலை கட்டுப்படுத்த உதவுகிறது.

சாப்பிடும் முறை:
பால் கொடுக்கும் தாய்மார்கள் பெருஞ்சீரகத்தை உணவில் அதிகம் சேர்த்து கொள்ளலாம். இதை நீரில் சேர்த்து கொதிக்க வைத்தும் தேநீராகவும் அல்லது பாலில் கலந்து கொதிக்க வைத்தும் குடிக்கலாம். குறிப்பாக உணவுக்கு பின் சிறிதளவு பெருஞ்சீரகத்தை சாப்பிடலாம். அது  புத்துணர்ச்சியாக இருக்கும்.

46
இனிப்பு உருளைக்கிழங்கு

இனிப்பு உருளைக்கிழங்கு

கோடை வெயில் தாக்கம் சோர்வை உண்டாக்கும். இதனை எதிர்த்து போராட இனிப்பு உருளைக்கிழங்கு சாப்பிடவும். இது பொட்டாசியத்தின் சிறந்த மூலமாகும். இதில் வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் மற்றும் வைட்டமின் சி மற்றும் மெக்னீசியம் உள்ளது. இதை குறைந்த நார்ச்சத்து உணவுகளுடன் இதை எடுக்கலாம்.

சாப்பிடும் முறை:
இனிப்பு உருளைக்கிழங்கு அல்லது சர்க்கரை வள்ளிக்கிழங்கை ஆவியில் வேக வைத்து சாப்பிட்டலாம் அல்லது  புட்டு செய்து சாப்பிடலாம்.
 

56
பாதாம்

பாதாம்

பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு ஏற்படும்  பிரசவ அரிப்பை தடுக்க பாதாம்  சிறந்த மூலமாகும். இதில்  வைட்டமின் ஈ மற்றும் ஒமேகா 3 ஆகியவை உள்ளது. இவற்றில் பிரசவத்திற்கு பின் ஏற்படும் வரிக்கோடுகளை நீக்கவும், அரிப்புகளை குணப்படுத்தவும் வேண்டிய சத்துக்களைக் கொண்டுள்ளது. இதில் உள்ள
ஒமேகா 3, பாலூட்டும் ஹார்மோன்களை அதிக அளவில் உற்பத்தி செய்ய உதவுகிறது.

சாப்பிடும் முறை:

பாதாமை அரைத்து பாலில் சேர்த்து குடிக்கலாம். இதனை இரவில் ஊறவைத்து மறுநாள் காலை, தோல் உரித்து சாப்பிடலாம். 

இதையும் படிங்க: எச்சரிக்கை: இந்த அறிகுறிகள் உங்களுக்கு இருக்கா? அப்போ நீங்க சரியாக சாப்பிடலனு அர்த்தம்..!!

66
பார்லி

பார்லி

பார்லி பாலூட்டலை அதிகரிக்கவும், நீரேற்றத்தை சீராக்கவும் உதவுகிறது. இது லாக்டோஜெனிக் உணவு ஆகும்.இதில் பீட்டா- குளுக்கன் நிறைந்துள்ளது. இது பாலிசாக்கரைடு ஆகும். இது பாலூட்டலுக்கு காரணமான ப்ரோலாக்டினை அதிகரிக்கும்.

சாப்பிடும் முறை:
பார்லியை தண்ணீரில் வேகவைத்து நாள் முழுவதும் அந்த தண்ணீரை குடிக்கலாம். அல்லது அதனை அரைத்து தோசை மாவில் சேர்க்கலாம்.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
டயட்டில் இருப்பவரா நீங்கள்.? வெள்ளை அரிசி vs பழுப்பு அரிசி – எது எடை குறைக்க உதவும்?
Recommended image2
Uric Acid : மூட்டு வலியை நீக்கும் சூப்பர் 'சட்னி' ஒருமுறை சாப்பிட்டு பாருங்க! அற்புத பலன்கள் இருக்கு
Recommended image3
Kambu Paniyaram : கம்பு பணியாரத்திற்கு 'சர்க்கரை' நோயை கட்டுப்படுத்துற சக்தி இருக்கு.. ரொம்ப ஈஸியான ரெசிபி இதோ!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved