பெண்ணின் தோலுக்கடியில் நெளிந்த புழுக்கள்.. அவரின் மூளைக்குள் எப்படி நுழைந்தன! மருத்துவர்கள் சொன்ன காரணம்?!
பச்சை ரத்தம், சமைத்த இறைச்சி ஆகியவற்றை சாப்பிட்ட பெண்ணின் தோலுக்கு கீழே புழுக்கள் நெளிந்த வினோத சம்பவம் வியட்நாமில் நடந்துள்ளது.
பொதுவாக இறைச்சியை சமைக்கும்போது அதிகமாக சுத்தம் குறித்த அக்கறை இருக்க வேண்டும் என மருத்துவர்கள் கூறுவர். ஏனென்றால் அவற்றில் பாக்டீரியா போன்ற நுண்ணுயிரிகள் காணப்படும். அதிலும் வீட்டுக்குள் இறைச்சியை கழுவினால் கூடுதல் கவனம் வைக்க வேண்டும். இறைச்சியை பச்சையாக சாப்பிட்டால் அதிலுள்ள கிருமிகள் நம் உடலுக்குள் அசாத்திய மாற்றங்களை ஏற்படுத்தலாம் என்றும் மருத்துவர்கள் எச்சரித்து வரும் நிலையில், வியட்நாம் நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் பச்சை ரத்தத்தை புட்டிங் போல செய்து சாப்பிட்டதால் விபரீதம் நடந்துள்ளது.
வியட்நாமை சேர்ந்த அன் பின்ஹ் பகுதியைச் சேர்ந்த 58 வயதான ஹனோய், வீட்டில் இறைச்சியை சமைத்துள்ளார். பச்சை ரத்தத்தை கொண்டு புட்டிங் மாதிரியான 'டைட் கேன்’ (Tiet canh) என்ற உள்ளூர் உணவு ஒன்றையும் தயாரித்துள்ளார். அவரே சமைத்த காரணத்தால் அதை முழுமையாக நம்பி சுவைத்துள்ளார். இங்கு தான் பிரச்சனை ஆரம்பமாகியுள்ளது. இதை சாப்பிட்ட பின்னர் அவருக்கு அடிக்கடி தலைவலி ஏற்பட்டுள்ளது.
ஹனோய் என்ற அந்த பெண், தாங்க முடியாத தலைவலியில் டான் வான் ங்கு (Dang Van Ngu) என்ற மருத்துவமனையில் சென்று பரிசோதனை மேற்கொண்டுள்ளார். அவரை மருத்துவர்கள் பரிசோதித்தபோது தான் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளிவந்துள்ளன. ஸ்கேன் ரிப்போர்ட்டில், அவருடைய உடலில் சில இடங்களில் புழுக்கள் உருவாகி நெளிந்து கொண்டிருப்பது தெரியவந்தது.
இதையும் படிங்க: வெற்றிலையை பற்றி நாம் அறியாத பல மருத்துவ பயன்கள்! தலைமுடி முதல் உடல் முழுக்க, 1 வெற்றிலையால் இத்தனை நன்மைகள்!
அவரின் உடலில் கை, கால்களில் மட்டுமில்லாமல், தோலுக்கு கீழே புழுக்கள் நெளிந்துள்ளன. அதுமட்டுமில்லை, அவருடைய மூளையை கூட புழுக்கள் விட்டு வைக்கவில்லையாம். அங்கும் புழுக்கள் குழுமியிருந்தன. இந்த மோசமான நிலையில், அவர் கொஞ்சம் தாமதித்திருந்தால் கூட உயிருக்கு ஆபத்தாக முடிந்திருக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். தற்போது அவருக்கு உரிய சிகிச்சை அளித்து உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது. சமைக்காத பச்சை ரத்தத்தால் தான் இத்தனை பிரச்சனையும் ஏற்பட்டுள்ளதாக பரிசோதனைகளில் உறுதியாகியுள்ளது. மக்களே கவனமாக இருங்கள். அசைவ உணவுகளை சுத்தமாக சமைத்து உண்ணுங்கள்.
இதையும் படிங்க: கண்ணாடியில் முகம் பார்த்தால் கடவுள் தெரிவாரா? கம்பி கட்டுற கதையெல்லாம் இல்ல! ஏன் முன்னோர் அப்படி சொன்னாங்க!!