கண்ணாடியில் முகம் பார்த்தால் கடவுள் தெரிவாரா? கம்பி கட்டுற கதையெல்லாம் இல்ல! ஏன் முன்னோர் அப்படி சொன்னாங்க!!
கண்ணாடியில் நாம் முகம் பார்க்கும் வழக்கம் எப்போது? எப்படி உருவானது தெரியுமா? அதன் பின்னணியில் உள்ள வரலாறை இன்று தெரிந்து கொள்ளுங்கள்.
கண்ணாடி பார்க்காதவர்கள் வெகு குறைவுதான். நாளொன்றுக்கு பல முறை கண்ணாடி பார்ப்பவர்களும் உண்டு. ஆனால் கண்ணாடிகள் இல்லாத காலமும் உண்டு. அப்போது மக்கள் என்ன செய்திருப்பார்கள் என்று தெரியுமா? கண்ணாடிகள் தோன்றிய வரலாறை தெரிந்து கொண்டால், ஆச்சர்யப்படுவீர்கள். ஜெர்மன் வேதியியலாளர் ஜஸ்டஸ் வான் லீபிக் என்பவர் தான் கண்ணாடியை அறிமுகம் செய்துள்ளார். 1835 ஆம் ஆண்டில் தான் அவர் கண்ணாடியைக் கண்டுபிடித்ததாகக் கூறப்படுகிறது.
அந்த காலத்து கண்ணாடிகள் இப்போது பயன்படுத்துவதை விடவும் ரொம்ப அழகானவையாக இருந்துள்ளன. அதில் கலைநயமான வேலைபாடுகளும் இருந்துள்ளன. கண்ணாடி கண்டுபிடித்த காலகட்டத்தில் அது எல்லோருக்கும் கிடைக்கவில்லை. புதிய கண்டுபிடிப்புகள் எப்போதும் விலை அதிகமாக இருக்குமே! அதனால் கண்ணாடி வாங்க முடியாதவர்கள் தண்ணீரில் தான் முகம் பார்த்தனர்.
தொடக்க காலங்களில், கண்ணாடியை ஒரு மந்திர பொருள் போல மக்கள் நினைத்துள்ளனர். நம்மை நாமே பிரதியாக கண்ணாடியில் பார்க்க முடியும் என்பதால், மக்களுக்கு அது ஆச்சர்யத்தை கொடுத்துள்ளது.
இதையும் படிங்க: வெற்றிலையை பற்றி நாம் அறியாத பல மருத்துவ பயன்கள்! தலைமுடி முதல் உடல் முழுக்க, 1 வெற்றிலையால் இத்தனை நன்மைகள்!
இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியில் நாம் ரொம்ப முன்னேறிவிட்டோம். அதனால் நம்முடைய முகத்தை செல்போனில் விதவிதமாக படம் பிடித்து காண்கிறோம். பல ஆண்டுகளுக்கு முன்பு மக்களுக்கு அந்த வாய்ப்பு இல்லை. அதனால் தங்களை கண்ணாடியில் பார்ப்பது அவர்களுக்கு வினோதமான நம்பிக்கையை வழங்கியிருக்கிறது. ஒருவர் கண்ணாடியில் தன்னை முதன்முதலாகக் கண்டல், அவர்கள் கடவுளைக் காண்பார்கள் என்று நினைத்தார்களாம். இப்போது நினைத்து பார்த்தால் இது வினோதமாகவும், நகைச்சுவையாகவும் இருக்கும். ஆனால் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஏதேனும் ஒரு நம்பிக்கை இருந்து வந்திருக்கிறது. ஆனால் அது மற்றொரு காலத்தில் பொருந்துவதில்லை. அப்படி தான் கண்ணடி காண்பது கடவுளை காட்டும் என்பதும்.
இதையும் படிங்க: அட்சய திருதியை நாளில் மறந்தும் செய்யக்கூடாத தவறுகள்! மீறினால் லட்சுமியின் கோவம்! வீட்டில் வறுமை உண்டாகும்!!