MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
TRENDING :
Moon Transit in Scorpio
OTT Release This Week
Sevvai Peyarchi 2026
Guru Peyarchi 2027
Gajakesari Yoga
Venus Enters Swati Nakshatra
8th Pay Commission
Bigg Boss Tamil Season 10
Sun Mars Conjunction
8th Pay Commission DA Hike
Horoscope Predictions for All Zodiac Signs
8th Pay Commission News
India's Longest Non Stop Train
Instant Soft Idli Recipes
Samasaptaga Yoga
Ragi Food Recipes
  • Home
  • உடல்நலம்
  • உணவு
  • Vegetables Cooking Mistakes: காய்கறிகளை இப்படி சமைக்காதீங்க..பலரும் செய்யும் தவறுகள்!

Vegetables Cooking Mistakes: காய்கறிகளை இப்படி சமைக்காதீங்க..பலரும் செய்யும் தவறுகள்!

vegetable cooking mistakes: காய்கறிகளை சமைக்கும்போது பலரும் செய்யும் பொதுவான தவறுகள் என்ன? அதிக நேரம் வேகவைப்பது, தண்ணீரில் ஊறவைப்பது உள்ளிட்ட தவறுகளை தவிர்த்து ஊட்டச்சத்துக்களை பாதுகாக்கும் வழிகளை தெரிந்துகொள்ளுங்கள்.

2 Min read
Author : Vishnupriya
Published : Sep 15 2026, 04:24 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
காய்கறிகளை இப்படி சமைக்காதீங்க
Image Credit : pinterest

காய்கறிகளை இப்படி சமைக்காதீங்க

காய்கறிகள் தினசரி உணவில் தவிர்க்க முடியாத முக்கிய உணவுப் பொருள். இவற்றில் உடலுக்குத் தேவையான வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்து உள்ளிட்ட பல்வேறு ஊட்டச்சத்துக்கள் கிடைக்கின்றன. ஆனால், காய்கறிகளை வாங்குவது முதல் கழுவுவது, நறுக்குவது, சமைப்பது வரை நாம் பின்பற்றும் சில சாதாரண பழக்கங்கள், அவற்றில் உள்ள சில ஊட்டச்சத்துக்கள் குறைவதற்கு காரணமாகலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
காய்கறிகளை நீண்ட நேரம் சமைப்பது
Image Credit : pinterest

காய்கறிகளை நீண்ட நேரம் சமைப்பது

காய்கறிகள் நன்றாக வேக வேண்டும் என்பதற்காக அவற்றை அதிக நேரம் சமைப்பது அவசியமில்லை. தேவையான அளவு மட்டும் வேகவைத்து, நீண்ட நேரம் கொதிக்கவிடாமல் சமைப்பது, காய்கறிகளில் உள்ள சில ஊட்டச்சத்துக்களைப் பாதுகாக்க உதவும்.

உதாரணமாக, ப்ரோக்கோலி மற்றும் கீரைகளை அதிக நேரம் வேகவைக்காமல், மென்மையாக வெந்தவுடன் இறக்குவது நல்லது. இதனால் அதிக நேரம் சமைப்பதால் ஏற்படக்கூடிய ஊட்டச்சத்து இழப்பை ஓரளவு தவிர்க்கலாம்.

உப்பு சேர்ப்பது

காய்கறிகளை வதக்கும்போது சீக்கிரம் வெந்துவிடும் என்பதற்காக ஆரம்பத்திலேயே அதிகளவு உப்பு சேர்ப்பதைத் தவிர்க்கவும். காய்கறிகள் ஓரளவு வெந்த பிறகு, தேவையான அளவு உப்பை சரியான நேரத்தில் சேர்ப்பது சுவையையும், பதத்தையும் சிறப்பாக வைத்திருக்க உதவும்.

Related Articles

Related image1
Vegetable Price Today: காய்கறி வாங்கப் போறீங்களா? தக்காளி, வெங்காயம், பூண்டு முதல் முழு விலை பட்டியல் இதோ
Related image2
Vegetable Buying Tips: கத்திரிக்காய்க்கும் ‘ஆண்–பெண்’ உண்டா? காய்கறி வாங்கும் முன் தெரிஞ்சுக்கோங்க!
34
காய்கறிகளை கழுவி நறுக்க வேண்டும்
Image Credit : pinterest

காய்கறிகளை கழுவி நறுக்க வேண்டும்

காய்கறிகளை முதலில் நறுக்கிவிட்டு பின்னர் தண்ணீரில் கழுவும் பழக்கம் சிலரிடம் உள்ளது. இதற்கு பதிலாக, காய்கறிகளை முதலில் நன்றாக கழுவி, அதன் பிறகு நறுக்குவது நல்லது. இதனால் வெட்டப்பட்ட பரப்பில் இருந்து நீரில் கரையும் ஊட்டச்சத்துக்கள் வெளியேறுவதை ஓரளவு குறைக்கலாம்.

அதிக தண்ணீர் சேர்ப்பது

காய்கறிகளை வேகவைக்க அதிகளவு தண்ணீர் பயன்படுத்தும்போது, தண்ணீரில் கரையும் சில வைட்டமின்கள் நீரில் கலந்து விடலாம். அந்த நீரை முழுவதுமாக கீழே கொட்டிவிட்டால், அதில் கரைந்துள்ள ஊட்டச்சத்துக்களும் வீணாகும் வாய்ப்புள்ளது. எனவே, தேவையான அளவு தண்ணீர் மட்டும் பயன்படுத்துவது சிறந்தது.

44
தோலுடன் சமைக்க வேண்டும்
Image Credit : pinterest

தோலுடன் சமைக்க வேண்டும்

சில காய்கறிகளை தோல் நீக்காமல், நன்றாகக் கழுவி தோலுடன் சமைப்பது நல்லது. தோலில் நார்ச்சத்து உள்ளிட்ட சில ஊட்டச்சத்துக்கள் கிடைக்கக்கூடும். எனவே, அனைத்து காய்கறிகளிலும் தோலை நீக்க வேண்டிய அவசியம் இல்லை. அதேபோல், சமைத்த உணவை மீண்டும் மீண்டும் சூடுபடுத்துவது சுவையையும் தரத்தையும் பாதிக்கலாம்.

ஒவ்வொரு காய்கறிக்கும் ஏற்ற சமையல் முறை மாறுபடும். சில காய்கறிகளை ஆவியில் வேகவைத்தால் சிறப்பாக இருக்கும். சிலவற்றை லேசாக வதக்கி சமைக்கலாம். எனவே, காய்கறியின் தன்மை மற்றும் சமையலுக்கு ஏற்ற முறையைத் தேர்வு செய்து சமைப்பது முக்கியம்.

About the Author

V
Vishnupriya
ஆரோக்கிய குறிப்புகள்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
மோர் குழம்பு சாயங்காலம் வரை பிரெஷ்ஷா இருக்கணுமா? இதை செய்யுங்க‌!
Recommended image2
தினமும் கேரட் சாப்பிடுங்க... அதில் எவ்ளோ நன்மைகள் இருக்குனு தெரியுமா?
Recommended image3
Almond Roti : பாதாம் மாவுல சப்பாத்தி சாப்பிட்டு இருக்கீங்களா? சாப்பிட்டா அப்புறம் விட மாட்டீங்க!
Related Stories
Recommended image1
Vegetable Price Today: காய்கறி வாங்கப் போறீங்களா? தக்காளி, வெங்காயம், பூண்டு முதல் முழு விலை பட்டியல் இதோ
Recommended image2
Vegetable Buying Tips: கத்திரிக்காய்க்கும் ‘ஆண்–பெண்’ உண்டா? காய்கறி வாங்கும் முன் தெரிஞ்சுக்கோங்க!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved