மொச்சைப் பயிறுகளில் கொட்டிக்கிடக்கும் ஆரோக்கிய நன்மைகள்..!!
மொச்சை பயிறு சாப்பிடுவதல் ஏராளமான நன்மைகள் உண்டு. நமது பாரம்பரிய காய்கறிகளில் மொச்சைக் கொட்டைக்கு எப்போதும் தனி இடம் உண்டு. இது உடல் சோர்வு முதல் கர்ப்ப கால குறைபாடுகள் வரை போக்கும் திறன் கொண்டதாகும்.
நமது தமிழ்நாட்டு சமையல்களில் பயறுகளுக்கு எப்போதுமே தனி இடம் உண்டு. பல்வேறு பயர்கள் உலர்ந்த நிலையில் ஆண்டு முழுவதும் கிடைக்கின்றன. ஆனால் குளிர்காலங்கள் வந்துவிட்டால் அவரைப் பருப்பு, மொச்சைக் கொட்டைகள், பட்டானி உள்ளிட்டவை அதிகளவில் விற்பனைக்கு கிடைக்கும். குறிப்பாக மொச்சைப் பயிறுக்கு நாட்டுக் காய்கறிகளிலும் முக்கியத்துவம் உண்டு. இது உடல் சோர்வு முதல் கர்ப்ப கால குறைபாடுகள் வரை போக்கும் திறன் கொண்டதாகும். இதிலுள்ள போலாட் என்கிற பொருளில் கர்ப்ப காலங்களில் பெண்களுக்கு ஏற்படும் பிரச்னைகளை குறைக்கும் திறன் உள்ளது. மனதை உறுதியாக வைத்திருக்கும், வளர்ச்சிதை மாற்றத்தை மேம்படுத்தவும் மொச்சைப் பயிறுகள் உதவுகின்றன. அதன்காரணமாக இவற்றை நமது முன்னோர்கள் மருத்துவத் தேவைக்காகவும் பயன்படுத்தி வந்துள்ளனர்.
அளவுடன் சாப்பிட வேண்டும்
கர்ப்ப காலங்களில் மொச்சைப் பயிறுகளை பெண்கள் அளவுடன் சாப்பிட வேண்டும். இதை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால், வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு ரத்தசோகை ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். அதனால் மருத்துவரை அணுகி உங்களுடைய போலேட் தேவையை தெரிந்துகொண்டு, மொச்சைப் பயிறை சாப்பிட்டு வாருங்கள். கருவில் இருக்கும் குழந்தைக்கு முழுமையான வளர்ச்சி மட்டுமில்லாமல் முன்கூட்டியே குழந்தை பிறப்பது, கருச்சிதைவு ஏற்படுவது, குறைந்த எடையுடன் குழந்தை பிறப்பது போன்ற பிரச்னைகளையும் தடுக்கும் திறன் மொச்சைப் பயிறுகளுக்கு உண்டு.
வயதானவர்களுக்கு சிறந்தது
பொதுவாக வயதான பலருக்கும் பார்க்சின் என்கிற நோயால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்பு அதிகம். அதை தடுக்க அவர்களுக்கு மொச்சைப் பயிறு அதிகளவில் கொடுக்கலாம். மேலும் இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு போலேட் என்கிற குறைபாடு ஏற்படும்.அதை போக்கவும் அவர்களுக்கு மொச்சைப் பயிறை சாப்பிடக் கொடுக்கலாம். இதற்கு மனச்சோர்வை போக்கும் குணம் இருப்பதால், வயதானவர்கள் மொச்சைப் பயிறை அடிக்கடி சாப்பிட்டால் அமைதியான சூழலில் இருப்பார்கள்.
இருதய நலன் மேம்படுகிறது
இதில் அதிகளவும் மெக்னீஷியம் இருப்பதால், ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்கும். மேலும் மொச்சைப் பயிறுகளில் இருக்கும் கரையக்கூடிய நார்ச்சத்துகள் கொலஸ்ட்ராலை அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ளும். இதன்மூலம் இருதய நலன் மேம்படுகிறது இப்பயிறுகளில் இரும்புச் சத்து போதுமான அளவு காணப்படுவதால், ரத்த சிவப்பணுக்கள் உற்பத்தி அதிகளவில் இருக்கும். அதனால் உங்களுக்கு அடிக்கடி உடல் சோர்வு ஏற்பட்டால், அடிக்கடி மொச்சைப் பயிறுகளை சாப்பிட்டு வாருங்கள். விரைவில் பிரச்னை நீங்கும். இதிலிருக்கும் நார்ச்சத்து சக்கரை அளவை கட்டுப்பாடாக வைத்திருப்பதுடன், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
பிறப்பு குறைப்பாட்டை போக்கும்
கருவில் இருக்கும் குழந்தைகளுக்கு எந்தவிதமான பிறப்புக் குறைபாடும் இல்லாமல் இருக்க, கர்ப்பிணிகள் அடிக்கடி தங்களுடைய உணவில் மொச்சைப் பயிறுகளை சேர்த்துக்கொள்ள வேண்டும். பொதுவாக அனைவருக்கும் தினசரி 400 எம்.சி.ஐ அளவு போலேட் சத்துக்கள் தேவைப்படுகிறது. ஆனால் கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு 600 எம்.ஜி.சி அளவு வரை போலேட் தேவை அதிகரிக்கிறது. அது ஒரு குவளை மொச்சைப் பயிறுகளின் மூலம் தாராளமாக கிடைத்துவிடும். இதனால் வயிற்றில் இருக்கும் குழந்தைகளுக்கு முழுமையான வளர்ச்சி கிடைக்கும்.
ஊட்டச்சத்து
பச்சை நிறமாக காணப்படும் மொச்சைப் பயிறுகளின் பிறப்பிடம் இஸ்ரேலாகும். இது இயற்கையாகவே இனிப்புச் சுவை கொண்டது. அதனால் வெறும் வாயில் கூட இதை பலரும் சாப்பிடுவார்கள். இதில் உடலுக்கு தேவையான, இருதய நலனுக்கு வேண்டிய சோடியம், செலினியம், மெக்னீஷியம், வைட்டமின் சி போன்ற சத்துக்கள் அதிகளவில் உள்ளன. மெலிந்த புரதத்தை வழங்கும் திறன் கொண்ட மொச்சை பயிறுகளில் வைட்டமின் ஏ, இரும்புச் சத்து, நியசின், வைட்டமின் கே மற்றும் பி6, தியமின், கோலின் போன்ற சத்துகளும் இடம்பெற்றுள்ளன.