இந்த வீக் எண்டுக்கு நாவூறும் லெமன் ஃபிஷ் ஃபிரை ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க!
மசாலாவின் மணத்தோடு மீனின் வாசனையும் சேர்ந்து இந்த ரெசிபியை மேலும் சுவை சேர்க்கும். அப்படியான இந்த லெமன் ஃபிஷ் ஃபிரை ரெசிபியை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள உள்ளோம்
அசைவ உணவு மற்றும் கடல் உணவு வகையான மீனை வழக்கமாக பொரித்து,புட்டு அல்லது குழம்பு வைத்து சாப்பிட்டு இருப்போம். மீனின் கமகம வாசனைக்கு எப்படி செய்தாலும் ருசியாகத் தான் இருக்கும். பொதுவாக பொரித்த மீன் என்று சொல்லப்படும் போது கடாயில் எண்ணெய் ஊற்றி டீப் ஃபிரை செய்து தான் பொரித்து சாப்பிட்டு இருப்பீர்கள்.
ஆனால் இன்று நாம் செய்ய உள்ள லெமன் ஃபிஷ் ஃபிரை ரெசிபியை மசாலாவில் வைத்து வேக வைத்து சமைக்க உள்ளோம். எண்ணெய் இல்லாமல் சமைப்பதால் அனைவருக்கும் ஏற்ற ஒரு ரெசிபி என்று கூறலாம்.இதன் சுவை தாறுமாறாக இருப்பதால் இனி மீன் வாங்கினால் இப்படி தான் செய்து தர வேண்டும் என்று வீட்டில் உள்ளவர்கள் கூறுவார்கள்.
மசாலாவின் மணத்தோடு மீனின் வாசனையும் சேர்ந்து இந்த ரெசிபியை மேலும் சுவை சேர்க்கும். அப்படியான இந்த லெமன் ஃபிஷ் ஃபிரை ரெசிபியை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள உள்ளோம்
தேவையான பொருட்கள் :
மீன் -1/2 கிலோ
சின்ன வெங்காயம் - 15
கரம் மசாலாத்தூள் - 1/2 ஸ்பூன்
மிளகுத்தூள் - 1/2 ஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட்-1.5 ஸ்பூன்
பச்சை மிளகாய் -2
கறிவேப்பிலை - 1 கொத்து
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் -தேவையான அளவு
ஊற வைக்க:
லெமன் ஜூஸ் -1/2 பழம்
மஞ்சள் தூள்-1/2 ஸ்பூன்
மிளகாய் தூள்-1 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
இந்த மாதிரி ஸ்ரீலங்கா ரசம் செய்தால் சும்மாவே குடித்து காலி ஆக்கிடுவாங்க!
செய்முறை :
முதலில் மீனை சுத்தம் சையது அதனை அலசி விட்டு,பின் தண்ணீர் இல்லாமல் வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். பின் சின்ன வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை மிகப் பொடியாக அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு பாத்திரத்தில் அலசி வைத்துள்ள மீனை போட்டு அதில் லெமன் ஜூஸ் மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக பிரட்டி சுமார் 1/2 மணி நேரம் வரை ஊற வைக்க வேண்டும்.
அடுப்பில் 1 கடாய் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடான பின் அதில் பொடியாக அரிந்து வைத்துள்ள சின்ன வெங்காயம் மற்றும் பச்சைமிளகாய் சேர்த்து நன்றாக வதக்கி விட வேண்டும்.
வெங்காயம் கண்ணாடி போன்று வதங்கிய பின் இஞ்சி-பூண்டு பேஸ்ட் சேர்த்து அதன் பச்சை வாசனை செல்லும் வரை வதக்கி விட்டு பின் கறிவேப்பிலையை சேர்த்து வதக்கி விட வேண்டும்.
இப்போது கடாயில் கரம் மசாலா மற்றும் மிளகுத்தூள் மற்றும் உப்பு சேர்த்து கிளறி விட்டு கலவையை ஒரே மாதிரியாக ஸ்ப்ரெட் செய்து அதன் மேல் ஊற வைத்துள்ள மீன் துண்டுகளை வைத்து விட வேண்டும். அடுப்பின் தீயினை சிம்மில் வைத்து மூடி போட்டு சுமார் 5 நிமிடங்கள் வரை வேக விட வேண்டும்.
5 நிமிடங்களுக்கு பிறகு மீன் 1 பக்கம் வெந்த பிறகு, மறுபக்கம் திருப்பி போட்டு வேக விட வேண்டும் .மீனுடன் மசாலாக் கலவையும் கலந்து சூடாக பரிமாறினால் லெமன் ஃபிஷ் பிரை ரெடி!