கீரையுடன் 'இதை' சேர்த்து சாப்பிடுங்க; இல்லன்னா '1' சத்து கூட கிடைக்காது
கீரை, ஆப்பிள், தயிர் இந்த உணவுகளின் முழுச்சத்துகள் கிடைக்க அவற்றை எப்படி சாப்பிட வேண்டும் என இந்தப் பதிவில் காணலாம்.

These 5 Food Combos That Help To Improve Your Health : நாம் என்ன சாப்பிடுகிறோம் என்பது தான் நம்முடைய ஆரோக்கியத்தில் பெரும்பங்கு வைக்கிறது. ஆரோக்கியமான உணவுகள் ஆரோக்கியமான வாழ்க்கைக்கும் காரணமாகிறது. சில உணவுகளை தனியாக சாப்பிடுவதுடன் அவற்றை மற்ற உணவுகளுடன் சேர்த்து உண்ணும்போது முழுச்சத்துகளும் கிடைக்கும். இந்தப் பதிவில் சில உணவுகளின் காம்போ பற்றி காணலாம்.
Apple and Cinnamon
ஆப்பிள், இலவங்கப்பட்டை:
ஆப்பிள் உண்ணும்போது உடலுக்கு நார்ச்சத்து, ஆக்ஸிஜனேற்றிகள் கிடைக்கின்றன. இவை இதயம், நுரையீரல் ஆகிய உள்ளுறுப்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். ஆப்பிளை உண்ணும்போது அவற்றை சிறுதுண்டுகளாக நறுக்கி இலவங்கப்பட்டை பொடியினை தூவி சாப்பிட வேண்டும். இதனால் அழற்சி எதிர்ப்பு திறன் அதிகரிக்கும். இரத்த சர்க்கரையை அளவு சீராக இருக்க உதவும்.
Orange and Almond
ஆரஞ்சு, பாதாம்:
ஆரஞ்சு பழங்களில் வைட்டமின் சி சத்து அதிகம் உள்ளது. இது உங்களுடைய நோயெதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்த உதவுகிறது. உடலில் இரும்புச்சத்து உறிஞ்சுதலையும் மேம்படுத்தும். பாதாமில் நல்ல கொழுப்புகள், வைட்டமின் ஈ, புரதச்சத்து ஆகியவை உள்ளன. இந்த இரண்டையும் சாப்பிடுவதால் சரும ஆரோக்கியம் மேம்படும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
Lemon and Spinach
எலுமிச்சை சாறு, கீரை: கீரையில் உள்ள இரும்புச்சத்து நான் ஹீம் (Non heme) வகையை சேர்ந்தது. இவை உறிஞ்சப்பட கடினமானவை. ஆகவே கீரை உண்ணும்போது வைட்டமின் சி உள்ள உணவுகளை சாப்பிடுவது அவசியமாகிறது. இவை கீரையில் உள்ள இரும்புச்சத்தை கிரகிக்க உதவுகின்றன. கீரையை சமைத்த பின்னர் அவற்றில் எலுமிச்சை சாறு சேர்த்து சாப்பிட்டால் இரும்புச்சத்து உறிஞ்சுதல் மேம்படுகிறது. இந்த இரண்டும் சேர்த்து உண்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும். உடல் சோர்வின்றி காணப்படும். இரத்த சிவப்பணுக்கள் உற்பத்தி ஆதரிக்கப்படுகிறது.
இதையும் படிங்க: பாதாம் சாப்பிட்டால் இந்த '6' உணவுகளை தவிருங்க.. மீறினா உடல்நல பிரச்சனை வரும்!
Berries and Yogurt
பெர்ரி, யோகர்ட்:
யோகர்ட் புரோபயாடிக்குகள், புரதம் கொண்டவை. இதை உண்பதால் குடல் ஆரோக்கியத்தை மேம்படும். தசை மீட்சிக்கு உதவுகிறது. பெர்ரியில் உள்ள நார்ச்சத்து, ஆக்ஸிஜனேற்றிகள் உடலுக்கு நல்லது. பெர்ரியும், தயிரும் உண்பதால் செரிமானம் மேம்படும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இதய ஆரோக்கியம் மேம்படும்.
இதையும் படிங்க: நெய் ரொம்ப நல்லது.. ஆனா இந்த '5' பொருள்களோட சாப்பிட்டால் ஆபத்து
Black Pepper and Turmeric
கருப்பு மிளகு, மஞ்சள்:
மஞ்சளில் உள்ள குர்குமின் ஆற்றல்வாய்ந்த அழற்சி எதிர்ப்பு பண்பு கொண்டது. கருப்பு மிளகு குர்குமின் உறிஞ்சுதலை அதிகரிக்கக் கூடியது. இவற்றை உணவில் சேர்த்துக் கொண்டால் மூட்டு வலி குறையும். மூளை ஆரோக்கியம் மேம்படும். உங்களுக்கு நாள்பட்ட அழற்சி இருந்தால் அதை எதிர்த்துப் போராட மஞ்சள், கருப்பு மிளகு உண்ணலாம்.