MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • உணவு
  • Broccoli Dosa : மொறுமொறுப்பான ப்ரோக்கோலி தோசை செய்வது எப்படி? சுவையான ஈஸி ரெசிபி

Broccoli Dosa : மொறுமொறுப்பான ப்ரோக்கோலி தோசை செய்வது எப்படி? சுவையான ஈஸி ரெசிபி

Broccoli Dosa: ப்ரோக்கோலி தோசை செய்வது எப்படி? தேவையான பொருட்கள், ப்ரோக்கோலியை தயார் செய்யும் முறை, மாவு கலப்பது முதல் மொறுமொறுப்பான தோசை சுடுவது வரை முழுமையான செய்முறையை தெரிந்துக்கொள்ளுங்கள்.

2 Min read
Author : Vishnupriya
Published : Oct 02 2026, 04:24 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
ப்ரோக்கோலி தோசை
Image Credit : Pinterest

ப்ரோக்கோலி தோசை

ப்ரோக்கோலி பிடிக்காது என்று சொல்லும் குழந்தைகள் முதல், தினமும் ஒரே தோசை சாப்பிட்டு போரடித்தவர்கள்வரை அனைவரையும் கவரும் வகையில் ப்ரோக்கோலி தோசை செய்யலாம். காய்கறியின் சத்தும், தோசையின் மொறுமொறுப்பான சுவையும் சேர்ந்த இந்த ரெசிபி காலை உணவு அல்லது மாலை நேர ஸ்நாக்ஸாகவும் அசத்தும்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
சுவையான ப்ரோக்கோலி தோசை செய்வது எப்படி?
Image Credit : Pinterest

சுவையான ப்ரோக்கோலி தோசை செய்வது எப்படி?

  • தோசை மாவு – 2 கப்
  • ப்ரோக்கோலி - 1 கப்
  • பெரிய வெங்காயம் - 1
  • பச்சை மிளகாய் - 1
  • இஞ்சி - சிறிய துண்டு
  • சீரகம் - 1\2 டீஸ்பூன்
  • மிளகுத்தூள் - 1\4 டீஸ்பூன்
  • மஞ்சள்தூள் - சிறிதளவு
  • உப்பு - தேவையான அளவு
  • கொத்தமல்லித்தழை - சிறிதளவு
  • எண்ணெய் - தேவையான அளவு
35
ப்ரோக்கோலி தயார் செய்வது
Image Credit : Pinterest

ப்ரோக்கோலி தயார் செய்வது

  • முதலில் ப்ரோக்கோலியை சிறிய பூக்களாகப் பிரித்து நன்றாகக் கழுவிக்கொள்ளுங்கள்.
  • பின்னர் வெந்நீரில் சிறிதளவு உப்பு சேர்த்து, அதில் ப்ரோக்கோலியை 2 - 3 நிமிடங்கள் மட்டும் போட்டு எடுத்துத் தண்ணீரை முழுமையாக வடித்துக்கொள்ளவும்.
  • அடுத்து, ப்ரோக்கோலி, பச்சை மிளகாய், இஞ்சி ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு, தண்ணீர் அதிகம் சேர்க்காமல் கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளுங்கள்.
  • இதை முழுமையாக பேஸ்ட் போல அரைக்க வேண்டாம். சிறிய துகள்களுடன் இருந்தால், தோசையில் ப்ரோக்கோலியின் சுவையும் நல்ல அமைப்பும் கிடைக்கும்.
45
தோசை சுடும் முறை
Image Credit : Pinterest

தோசை சுடும் முறை

  • தோசைக்கல்லை மிதமான சூட்டில் வைத்து சூடானதும் சிறிதளவு எண்ணெய் தடவுங்கள்.
  • ஒரு கரண்டி மாவை எடுத்து தோசைக்கல்லின் நடுவில் ஊற்றி, வழக்கமான தோசையைப் போல மெல்லியதாக வட்டமாக தேய்க்கலாம்.
  • ஓரங்களில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி, அடிப்பகுதி பொன்னிறமாகும் வரை வேகவிடுங்கள்.
  • பின்னர் திருப்பிப் போட்டு மறுபக்கத்தையும் வேகவிடவும். மொறுமொறுப்பாக வேண்டும் என்றால் தோசையை சற்று மெல்லியதாக ஊற்றி, மிதமான தீயில் கூடுதல் நேரம் வேகவைக்கலாம்.
  • சூடான தோசையை தேங்காய் சட்னி, புதினா சட்னி அல்லது கார சட்னியுடன் பரிமாறினால் சுவை வேற லெவலில் இருக்கும்.
55
சுவையை அதிகரிக்க சில டிப்ஸ்
Image Credit : Pinterest

சுவையை அதிகரிக்க சில டிப்ஸ்

  • ப்ரோக்கோலியை அதிக நேரம் வேகவைக்க வேண்டாம். இல்லையெனில் அதன் அமைப்பும் சுவையும் மாறிவிடும்.
  • காரம் பிடிக்கும் என்றால் சிறிது மிளகாய்த்தூள் அல்லது மிளகாய் சேர்க்கலாம்.
  • குழந்தைகளுக்காக செய்யும்போது பச்சை மிளகாயை தவிர்த்து, சிறிது துருவிய சீஸ் சேர்க்கலாம்.
  • இன்னும் சத்தான தோசை வேண்டுமென்றால் துருவிய கேரட், குடைமிளகாய் போன்றவற்றையும் சேர்க்கலாம்.
  • ப்ரோக்கோலியை அரைத்த பிறகு அதிக தண்ணீர் சேர்ப்பதை தவிர்க்கவும். மாவு நீர்த்துவிட்டால் தோசை சரியாக வராமல் போகலாம்.

ஒரே தோசை மாவில் வழக்கமான தோசைக்கு ஒரு புது ட்விஸ்ட் கொடுக்க வேண்டும் என்றால், இந்த ப்ரோக்கோலி தோசை நல்ல ஒரு முயற்சி.

About the Author

V
Vishnupriya
கா. விஷ்ணுபிரியா செய்தித் துறையில் 3 வருடம் அனுபவம் கொண்டவர். ETV Bharat இணையத்தளத்தில் பணியாற்றிய இவர் தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் மல்டிமீடியா ஜர்னலிஸ்டாக பணிபுரிகிறார். இவர் அரசியல், சினிமா மற்றும் லைஃப் ஸ்டைல் உள்ளிட்ட துறைகளில் தொடர்ந்து எழுதி வருகிறார்.
உணவு
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Beetroot Podi Urundai: பீட்ரூட் சூப்பர் டேஸ்டி பொடி உருண்டை! ஒருமுறை ட்ரை பண்ணுங்க..திரும்பத் திரும்ப செய்யத் தோணும்
Recommended image2
Empty Salna : ஹோட்டல் ஸ்டைலில் காரசாரமா பரோட்டா சால்னா! சுலபமாக செய்வது எப்படி?
Recommended image3
டேஸ்ட்டி + ஹெல்த்தி.. சப்பாத்தி மாவில் இந்த 5 பொருட்களை சேர்த்து பாருங்க.. வேறலெவல் சப்பாத்தி ரெடி
Related Stories
Recommended image1
Jackfruit Biryani: மட்டன் பிரியாணியை மிஞ்சும் சுவை.. பலாக்காயில் இப்படியொரு தம் பிரியாணியா?
Recommended image2
kollu Rasam: கொள்ளு ரசம் இப்படி செஞ்சு பாருங்க! மணமும் சுவையும் அசத்தும்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved