MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • உணவு
  • Jackfruit Biryani: மட்டன் பிரியாணியை மிஞ்சும் சுவை.. பலாக்காயில் இப்படியொரு தம் பிரியாணியா?

Jackfruit Biryani: மட்டன் பிரியாணியை மிஞ்சும் சுவை.. பலாக்காயில் இப்படியொரு தம் பிரியாணியா?

Jackfruit Biryani: மட்டன் பிரியாணி சுவையில் சைவமாக ஒரு சூப்பர் பிரியாணி செய்ய வேண்டுமா? பலாக்காய், பாசுமதி அரிசி, மசாலா, புதினா, கொத்தமல்லி சேர்த்து மணக்கும் பலாக்காய் தம் பிரியாணியை வீட்டிலேயே எளிதாக செய்வது எப்படி? என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்.

3 Min read
Author : Vishnupriya
Published : Sep 30 2026, 05:21 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
மட்டன் பிரியாணி சுவையில் பலாக்காய் தம் பிரியாணி
Image Credit : Pinterest

மட்டன் பிரியாணி சுவையில் பலாக்காய் தம் பிரியாணி

மட்டன் பிரியாணியின் மணமும், மசாலாவின் காரசாரமான சுவையும் பிடிக்கும். ஆனால் சைவமாக ஒரு பிரியாணி சாப்பிட வேண்டும் என்று நினைக்கிறீர்களா? ஒருமுறை இந்த பலாக்காய் தம் பிரியாணியை செய்து பாருங்கள்.

மசாலாவில் ஊறிய மென்மையான பலாக்காய் துண்டுகள், நெய் மணம் வீசும் பாசுமதி அரிசி, வறுத்த வெங்காயம், புதினா, கொத்தமல்லி என ஒவ்வொரு கவளத்திலும் பிரியாணி சுவை நிறைந்திருக்கும். சரியான மசாலா அளவிலும், தம் முறையிலும் செய்தால் இது பலாக்காயா? மட்டனா? என்று கேட்கும் அளவுக்கு சுவையாக இருக்கும்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
28
பலாக்காய் தம் பிரியாணிக்கு தேவையான பொருள்கள்
Image Credit : Pinterest

பலாக்காய் தம் பிரியாணிக்கு தேவையான பொருள்கள்

பலாக்காய் மசாலாவுக்கு

  • இளம் பலாக்காய் - 500 கிராம்
  • பெரிய வெங்காயம் - 2
  • தக்காளி - 2
  • இஞ்சி பூண்டு விழுது - 1 1\2 டீஸ்பூன்
  • பச்சை மிளகாய் - 2
  • தயிர் - 1\2 கப்
  • மஞ்சள் தூள் - 1\4 டீஸ்பூன்
  • மிளகாய் தூள் - 1 1\2 டீஸ்பூன்
  • தனியா தூள் - 1 டீஸ்பூன்
  • கரம் மசாலா - 1 டீஸ்பூன்
  • உப்பு - தேவையான அளவு
  • எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
  • புதினா - ஒரு கைப்பிடி
  • கொத்தமல்லி - ஒரு கைப்பிடி

தாளிக்க

  • எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்
  • நெய் - 2 டேபிள்ஸ்பூன்
  • பட்டை - 2 சிறிய துண்டுகள்
  • கிராம்பு - 4
  • ஏலக்காய் - 3
  • பிரியாணி இலை - 1
  • சோம்பு - 1\2 டீஸ்பூன்
  • கல்பாசி - சிறிதளவு

அரிசிக்கு

  • பாசுமதி அரிசி - 2 கப்
  • தண்ணீர் - தேவையான அளவு
  • உப்பு - தேவையான அளவு
  • எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்

அலங்கரிக்க

  • வெங்காயம் - 2, நீளமாக நறுக்கியது
  • முந்திரி - 10
  • புதினா - சிறிதளவு
  • கொத்தமல்லி - சிறிதளவு
  • குங்குமப்பூ - சிறிதளவு
  • வெதுவெதுப்பான பால் - 2 டேபிள்ஸ்பூன்
38
பலாக்காயை எப்படி தயார் செய்வது?
Image Credit : Pinterest

பலாக்காயை எப்படி தயார் செய்வது?

இளம் பலாக்காயின் தோலை நீக்கி, சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கிக் கொள்ளுங்கள். கையில் எண்ணெய் தடவிக்கொண்டு நறுக்கினால் பிசின் ஒட்டுவது குறையும்.

நறுக்கிய பலாக்காயை தண்ணீரில் போட்டு சிறிது மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து 5 - 7 நிமிடங்கள் வேகவைக்கலாம். முழுமையாக குழைய விடக்கூடாது.

48
பலாக்காய் மசாலா செய்வது
Image Credit : Pinterest

பலாக்காய் மசாலா செய்வது

  • ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை, சோம்பு, கல்பாசி சேர்த்து தாளிக்கவும். பின்னர் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும்.
  • வெங்காயம் பொன்னிறமாக மாறியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
  • தக்காளியை சேர்த்து நன்றாக குழைய விடவும். இப்போது மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள், கரம் மசாலா மற்றும் உப்பு சேர்க்கவும்.
  • தயிரை நன்றாகக் கலந்து ஊற்றி, எண்ணெய் பிரியும் வரை மசாலாவை சமைக்கவும்.
  • பின்னர் வேகவைத்த பலாக்காயை சேர்த்து மெதுவாக கிளறவும். புதினா, கொத்தமல்லி சேர்த்து 5 - 8 நிமிடங்கள் மசாலாவுடன் பலாக்காய் நன்றாக சேரும் வரை சமைக்கவும்.
  • இறுதியில் எலுமிச்சை சாறு சேர்த்து அடுப்பை அணைக்கவும்.
58
பிரியாணி அரிசியை எப்படி வேக வைப்பது?
Image Credit : Pinterest

பிரியாணி அரிசியை எப்படி வேக வைப்பது?

  • பாசுமதி அரிசியை 20 - 30 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
  • ஒரு பெரிய பாத்திரத்தில் தண்ணீர் கொதிக்க வைத்து அதில் உப்பு, சிறிதளவு எண்ணெய் அல்லது நெய், எலுமிச்சை சாறு சேர்க்கலாம்.
  • ஊறவைத்த அரிசியை சேர்த்து சுமார் 70 - 80 சதவீதம் வெந்த நிலையில் வடிகட்ட வேண்டும்.
  • அரிசியை முழுமையாக வேகவிடக்கூடாது. தம் போடும்போது மீதமுள்ள பதம் வந்துவிடும்.
68
பலாக்காய் தம் பிரியாணி செய்வது எப்படி?
Image Credit : Pinterest

பலாக்காய் தம் பிரியாணி செய்வது எப்படி?

  • கனமான பாத்திரத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.
  • முதலில் சிறிதளவு பலாக்காய் மசாலாவை அடுக்காக போடவும்.
  • அதன் மேல் அரை அளவு சாதத்தை பரப்பவும்.
  • அதன் மேல் புதினா, கொத்தமல்லி, வறுத்த வெங்காயம் மற்றும் சிறிதளவு நெய் சேர்க்கவும்.
  • மீண்டும் பலாக்காய் மசாலா, சாதம் என அடுக்குகளை அமைக்கவும்.
  • கடைசியாக குங்குமப்பூவை வெதுவெதுப்பான பாலில் கலந்து மேலே ஊற்றவும். சிறிது நெய், வறுத்த வெங்காயம், புதினா மற்றும் கொத்தமல்லி தூவவும்.
  • பாத்திரத்தை இறுக்கமாக மூடி மிதமான தீயில் 5 நிமிடங்கள், பின்னர் மிகக் குறைந்த தீயில் 10 -15 நிமிடங்கள் தம் போடவும்.
  • அடுப்பை அணைத்த பிறகு உடனே மூடியைத் திறக்காமல் 10 நிமிடங்கள் அப்படியே வைக்கவும்.
  • பின்னர் கீழிருந்து மேலாக மெதுவாக கிளறி பரிமாறலாம்.
78
சுவை அதிகமாக இருக்க சில டிப்ஸ்
Image Credit : Pinterest

சுவை அதிகமாக இருக்க சில டிப்ஸ்

  • இளம் பலாக்காயை பயன்படுத்தினால் மசாலாவை நன்றாக உறிஞ்சிக் கொள்ளும்.
  • பலாக்காயை அதிகமாக வேகவிட்டால் தம் போடும்போது குழைந்து விடும்.
  • பிரியாணி மசாலாவில் புதினா + கொத்தமல்லி + நெய் மூன்றும் முக்கியம்.
  • அரிசியை முழுமையாக வேகவைக்காமல் 70 - 80 சதவீதம் பதத்தில் வடிப்பதே தம் பிரியாணியின் முக்கிய ரகசியம்.
  • பலாக்காயை மசாலாவில் சிறிது நேரம் ஊறவைத்து சமைத்தால் சுவை இன்னும் நன்றாக இருக்கும்.
  • மட்டன் பிரியாணி போன்ற ஆழமான சுவை வேண்டுமென்றால் சிறிதளவு பிரியாணி மசாலா மற்றும் வறுத்த வெங்காயம் சேர்க்கலாம்.
88
எதனுடன் பரிமாறலாம்?
Image Credit : Pinterest

எதனுடன் பரிமாறலாம்?

இந்த பலாக்காய் தம் பிரியாணியை வெங்காய ரைத்தா, வெள்ளரிக்காய் ரைத்தா, புதினா ரைத்தா, கத்தரிக்காய் பச்சடி ஆகியவற்றுடன் பரிமாறலாம். அதனுடன் சிறிதளவு ஊறுகாயும் வைத்தால் சுவை மேலும் அதிகரிக்கும்.

குறிப்பு: பலாக்காய் நன்றாக சமைந்துள்ளதா என்பதை உறுதி செய்து பரிமாறவும். குறிப்பாக பெரிய அளவில் தயாரிக்கும்போது, தம் போடும் நேரத்தில் அடிப்பகுதி கருகாமல் இருக்க கனமான அடிப்பகுதி கொண்ட பாத்திரத்தைப் பயன்படுத்துவது நல்லது.

About the Author

V
Vishnupriya
கா. விஷ்ணுபிரியா செய்தித் துறையில் 3 வருடம் அனுபவம் கொண்டவர். ETV Bharat இணையத்தளத்தில் பணியாற்றிய இவர் தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் மல்டிமீடியா ஜர்னலிஸ்டாக பணிபுரிகிறார். இவர் அரசியல், சினிமா மற்றும் லைஃப் ஸ்டைல் உள்ளிட்ட துறைகளில் தொடர்ந்து எழுதி வருகிறார்.
உணவு
வாழ்க்கை முறை
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Temple style puliyodharai : இதுதான் ரகசியமா? கோயில் புளியோதரை மணமும் சுவையும் வீட்டிலேயே வர இந்த டிப்ஸ் மட்டும் போதும்!
Recommended image2
Poori : ஒரு துளி எண்ணெய் இல்லாம... குக்கரிலேயே பலூன் மாதிரி புசு புசுனு பூரி செய்யலாம்..!
Recommended image3
Coca-Cola : கொக்க கோலா குடித்து இறந்த இளைஞர்? என்ன காரணம்? இந்த பானங்களால் உடலுக்கு ஆபத்தா?
Related Stories
Recommended image1
Aval Upma: அவல் உப்புமா சாப்பிட்டுருக்கீங்களா? வேர்க்கடலை சேர்த்து செஞ்சு பாருங்க..செம டேஸ்ட்!
Recommended image2
Ulunthan choru: திருநெல்வேலி ஸ்பெஷல் உளுந்தஞ்சோறு இப்படி செய்து பாருங்க..ஒருமுறை சாப்பிட்டால் மறக்க முடியாது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved