MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • Ulunthan choru: திருநெல்வேலி ஸ்பெஷல் உளுந்தஞ்சோறு இப்படி செய்து பாருங்க..ஒருமுறை சாப்பிட்டால் மறக்க முடியாது!

Ulunthan choru: திருநெல்வேலி ஸ்பெஷல் உளுந்தஞ்சோறு இப்படி செய்து பாருங்க..ஒருமுறை சாப்பிட்டால் மறக்க முடியாது!

Ulunthan choru: திருநெல்வேலி அல்வா மட்டும் பேமஸ் இல்லைங்க. உளுந்தை லேசாக வறுத்து, அரிசி, பூண்டு, சீரகம், தேங்காய் சேர்த்து செய்யும் பாரம்பரிய உளுந்தஞ்சோறு தனி சுவை கொண்டது. வீட்டிலேயே எளிதாக செய்யும் முறையை இங்கே தெரிந்து கொள்ளலாம்.

2 Min read
Author : Vishnupriya
Published : Sep 29 2026, 12:31 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
திருநெல்வேலி அல்வாவுக்கு மட்டும் பேமஸ் இல்ல, இந்த உளுந்தஞ்சோறுக்குதான்
Image Credit : pinterest

திருநெல்வேலி அல்வாவுக்கு மட்டும் பேமஸ் இல்ல, இந்த உளுந்தஞ்சோறுக்குதான்

திருநெல்வேலி என்றாலே முதலில் நினைவுக்கு வருவது அல்வாதான். ஆனால், அல்வா மட்டும் சாப்பிட்டு திருநெல்வேலியின் சுவையை தெரிந்துகொண்டோம் என்று நினைக்காதீங்க. அங்கு தலைமுறை தலைமுறையாக சமைக்கப்பட்டு வரும் உளுந்தஞ்சோறு என்ற பாரம்பரிய உணவை ஒருமுறை சுவைத்துப் பார்த்தால், அதன் தனி ருசி உங்களை மீண்டும் மீண்டும் தேட வைக்கும்.

மென்மையாக வெந்து வரும் அரிசி, நன்றாக குழைந்து கலக்கும் கருப்பு உளுந்து, பூண்டு மற்றும் சீரகத்தின் மணம், தேங்காயின் சுவை என ஒவ்வொன்றிலும் நெல்லை மண்ணின் பாரம்பரிய சமையல் வாசனை தெரியும்.

குறிப்பாக எளிமையான பொருட்களிலேயே வயிறு நிறையவும், சுவையாகவும் செய்யக்கூடிய உணவு என்பதால் உணவுப் பிரியர்கள் ( food lovers) நிச்சயம் இதை வீட்டில் ஒருமுறை ட்ரை பண்ணி பாருங்கள்.

வழக்கமான சாதம், குழம்பு என இல்லாமல் இன்று வீட்டில் ஒரு வித்தியாசமான பாரம்பரிய உணவு செய்ய நினைக்கிறீர்களா? அப்படியானால் இந்த திருநெல்வேலி ஸ்பெஷல் உளுந்தஞ்சோறு உங்களுக்காகத்தான்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
உளுந்தஞ்சோறுக்கு தேவையான பொருட்கள்
Image Credit : pinterest

உளுந்தஞ்சோறுக்கு தேவையான பொருட்கள்

  • அரிசி - 1 கப்
  • கருப்பு உளுந்து - 1\2 கப்
  • பூண்டு - 10 முதல் 12 பல்
  • சீரகம் - 1 டீஸ்பூன்
  • வெந்தயம் - 1\4 டீஸ்பூன்
  • தேங்காய் துருவல் - 1\2 கப்
  • உப்பு - தேவையான அளவு
  • தண்ணீர் - தேவையான அளவு

தாளிக்க

  • நல்லெண்ணெய் - 1 முதல் 2 டேபிள்ஸ்பூன்
  • கடுகு - 1\2 டீஸ்பூன்
  • சீரகம் - 1\2 டீஸ்பூன்
  • கறிவேப்பிலை - சிறிதளவு

காய்ந்த மிளகாய் - 1 அல்லது 2

சுவைக்கேற்ப சேர்க்கலாம்

சின்ன வெங்காயம் – 5 முதல் 10

மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை

35
உளுந்தஞ்சோறு செய்வது எப்படி?
Image Credit : pinterest

உளுந்தஞ்சோறு செய்வது எப்படி?

கருப்பு உளுந்தை கடாயில் எண்ணெய் இல்லாமல் போட்டு மிதமான தீயில் வறுக்கவும். உளுந்து லேசாக பொன்னிறமாகி, நல்ல வாசனை வரும் வரை தொடர்ந்து கிளறிக்கொண்டே இருக்க வேண்டும்.

முக்கியம்: அதிக தீயில் வறுக்க வேண்டாம். உளுந்து கருகிவிட்டால் உளுந்தஞ்சோற்றில் கசப்பான சுவை வந்துவிடும்.

பின்னர் உளுந்தை, அரிசியுடன் சேர்த்து 2 முதல் 3 முறை நன்றாகக் கழுவி எடுத்துக்கொள்ளுங்கள். அரிசி மற்றும் உளுந்தை ஒன்றாகச் சேர்த்தும் சமைக்கலாம். அரிசி, உளுந்தை ஊறவைத்தால் வேகுவதற்கு எளிதாக இருக்கும்.

குக்கரில் கழுவிய உளுந்து, அரிசி, பூண்டு, சீரகம், வெந்தயம், தேங்காய் துருவல், உப்பு ஆகியவற்றை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி குக்கரை மூடவும். அரிசியும் உளுந்தும் நன்றாக குழையும் பதத்திற்கு வேகவிட வேண்டும்.

ஒரு சிறிய கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். இந்த தாளிப்பை வெந்த உளுந்தஞ்சோறில் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.

45
எப்படி பரிமாறலாம்?
Image Credit : pinterest

எப்படி பரிமாறலாம்?

உளுந்தஞ்சோறை சூடாக இருக்கும்போதே பரிமாறினால் சுவை இன்னும் அருமையாக இருக்கும்.

இதனுடன் குறிப்பாக,

  • நல்லெண்ணெய்
  • சின்ன வெங்காயம்
  • தேங்காய் துவையல்
  • எள்ளுத் துவையல்
  • காய்கறி குழம்பு
  • அப்பளம் போன்றவற்றை சேர்த்து சாப்பிடலாம்.

ஒரு ஸ்பூன் நல்லெண்ணெயை சூடான உளுந்தஞ்சோறின் மீது ஊற்றி, பக்கத்தில் சின்ன வெங்காயம் வைத்துக் கொண்டு சாப்பிட்டுப் பாருங்கள். பாரம்பரிய நெல்லை சுவை இன்னும் அழகாக வெளிப்படும்.

55
உளுந்தஞ்சோறின் ஸ்பெஷல் என்ன?
Image Credit : pinterest

உளுந்தஞ்சோறின் ஸ்பெஷல் என்ன?

உளுந்தஞ்சோறின் முக்கியமான சிறப்பு அதன் எளிமைதான். அதிக மசாலாக்களோ, ஏராளமான பொருட்களோ தேவையில்லை. அரிசி, உளுந்து, பூண்டு, சீரகம், தேங்காய் போன்ற அடிப்படைப் பொருட்களிலேயே சுவையான உணவை தயாரிக்க முடியும்.

மேலும், சாதம் மென்மையாகவும் குழைவாகவும் இருப்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் விரும்பி சாப்பிடக்கூடிய பாரம்பரிய உணவாக இது இருக்கிறது.

திருநெல்வேலி அல்வாவைத் தாண்டி, அந்த மண்ணின் பாரம்பரிய சமையல் சுவையை வீட்டிலேயே ருசிக்க விரும்புகிறீர்களா? அடுத்த முறை சாதம் செய்யும் போது இந்த உளுந்தஞ்சோறை ட்ரை செய்து பாருங்கள்.

About the Author

V
Vishnupriya
கா. விஷ்ணுபிரியா செய்தித் துறையில் 3 வருடம் அனுபவம் கொண்டவர். ETV Bharat இணையத்தளத்தில் பணியாற்றிய இவர் தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் மல்டிமீடியா ஜர்னலிஸ்டாக பணிபுரிகிறார். இவர் அரசியல், சினிமா மற்றும் லைஃப் ஸ்டைல் உள்ளிட்ட துறைகளில் தொடர்ந்து எழுதி வருகிறார்.
உணவு
ஆரோக்கியம்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Onion: வெங்காயத்தில் கருப்பு பூஞ்சை..சாப்பிடலாமா? தூக்கி எறியணுமா? அதிர்ச்சி தகவலை தெரிஞ்சுக்கோங்க!
Recommended image2
Wet Hair: ஈரத்தலையோடு தூங்குற பழக்கம் இருக்கா? உஷார்! முடிக்கு மட்டுமல்ல; தலைக்கும் ஆபத்து!
Recommended image3
சன்ஃபிளவர் ஆயில் உண்மையிலேயே ஹெல்தியா? தினமும் பயன்படுத்துறீங்கனா இந்த உண்மை தெரிஞ்சுக்கோங்க!
Related Stories
Recommended image1
Ganesh Chaturthi : உளுந்து கொழுக்கட்டை...சத்தான இப்படி ஒரு டிஷ் சாப்பிட்டிருக்கவே மாட்டீங்க
Recommended image2
recipes : எலும்புகளை இரும்பு போல் ஆக்கும் அசத்தலான 7 கருப்பு உளுந்து ரெசிபி
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved