MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • Aval Upma: அவல் உப்புமா சாப்பிட்டுருக்கீங்களா? வேர்க்கடலை சேர்த்து செஞ்சு பாருங்க..செம டேஸ்ட்!

Aval Upma: அவல் உப்புமா சாப்பிட்டுருக்கீங்களா? வேர்க்கடலை சேர்த்து செஞ்சு பாருங்க..செம டேஸ்ட்!

Aval Upma: உப்புமா பிடிக்காதவர்களும் விரும்பி சாப்பிடும் வகையில் வேர்க்கடலை சேர்த்து அவல் உப்புமா செய்வது எப்படி? தேவையான பொருட்கள், எளிய செய்முறை மற்றும் சுவை அதிகரிக்கும் டிப்ஸ் இதோ

2 Min read
Author : Vishnupriya
Published : Sep 27 2026, 09:40 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
அவல் உப்புமா
Image Credit : Pinterest

அவல் உப்புமா

உப்புமா என்றாலே முகம் சுளிப்பவரா நீங்கள்? அப்படியென்றால் இந்த அவல் உப்புமாவை ஒரு முறை செய்து பாருங்கள்! வழக்கமான ரவை உப்புமாவுக்கு குட்பை சொல்லிவிட்டு, மென்மையான அவலுடன் மொறுமொறுப்பான வேர்க்கடலை, சுவையான வெங்காயம், காரசாரமான பச்சை மிளகாய் சேர்த்து இந்த டிபனை செய்து பாருங்கள்.

காலை நேரத்தில் அவசரமாக தயாரிக்க வேண்டிய சூழலாக இருந்தாலும் சரி, மாலை நேரத்தில் லைட்டான டிபன் சாப்பிட ஆசையாக இருந்தாலும் சரி குறைந்த நேரத்தில், வீட்டில் இருக்கும் பொருட்களிலேயே சுவையான அவல் உப்புமா தயார் செய்யலாம். குறிப்பாக உப்புமா பிடிக்காதவர்களுக்கே வித்தியாசமான சுவையை கொடுக்கும் இந்த ரெசிபியை ஒரு முறை ட்ரை பண்ணுங்க. வீட்டில் அடிக்கடி செய்யும் டிபன் பட்டியலில் இதுவும் சேர்ந்துவிடும்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
தேவையான பொருட்கள்
Image Credit : Pinterest

தேவையான பொருட்கள்

அவல் - 2 கப்

வேர்க்கடலை - 1\2 கப்

பெரிய வெங்காயம் - 1

பச்சை மிளகாய் - 2

கடுகு - 1\2 டீஸ்பூன்

உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்

கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்

சீரகம் - 1\2 டீஸ்பூன்

கறிவேப்பிலை - சிறிதளவு

மஞ்சள் தூள் - 1\4 டீஸ்பூன்

எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்

கொத்தமல்லித்தழை - சிறிதளவு

35
அவல் உப்புமா செய்வது எப்படி?
Image Credit : Pinterest

அவல் உப்புமா செய்வது எப்படி?

  • முதலில் அவலை ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீரில் விரைவாகக் கழுவி, அதிக நேரம் ஊறவைக்காமல் தண்ணீரை வடித்துவிடவும். அவல் மென்மையாகும் அளவுக்கு மட்டும் சிறிது நேரம் வைத்திருக்கவும்.
  • அடுத்ததாக ஒரு கடாயை சூடாக்கி, வேர்க்கடலையை எண்ணெய் இல்லாமல் வறுத்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும். வேர்க்கடலை நன்றாக மொறுமொறுப்பாக வறுபட்டால் அவல் உப்புமாவின் சுவை இன்னும் நன்றாக இருக்கும்.
  • அதே கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு சேர்த்து தாளிக்கவும். பின்னர் கறிவேப்பிலை, நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
45
சுவையான வேர்க்கடலை அவல் உப்புமா தயார்
Image Credit : Pinterest

சுவையான வேர்க்கடலை அவல் உப்புமா தயார்

  • வெங்காயம் சற்று பொன்னிறமாக மாறியதும் மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்க்கவும். இதனுடன் ஊறவைத்து வடித்த அவலை சேர்த்து மெதுவாக கிளறவும்.
  • அவல் நன்றாக சூடாகி, மசாலா அனைத்தும் ஒன்றாக கலந்ததும் வறுத்த வேர்க்கடலையை சேர்த்து கிளறவும். அடுப்பை அணைத்த பிறகு எலுமிச்சை சாறு மற்றும் கொத்தமல்லித்தழை சேர்த்தால் சுவையான வேர்க்கடலை அவல் உப்புமா தயார்.
55
சுவை இன்னும் அதிகமாக வேண்டுமா?
Image Credit : Pinterest

சுவை இன்னும் அதிகமாக வேண்டுமா?

வேர்க்கடலையை பொடியாக நசுக்கி சிறிதளவு அவல் உப்புமாவில் சேர்த்தாலும் நல்ல சுவை கிடைக்கும். விருப்பப்பட்டால் கேரட், பட்டாணி அல்லது சிறிதளவு தேங்காய்த் துருவல் கூட சேர்த்துக்கொள்ளலாம்.

உப்புமா பிடிக்காது என்று ஒதுக்கி வைப்பவர்கள், இந்த வேர்க்கடலை அவல் உப்புமாவை ஒரு முறை செய்து பாருங்கள். அவலின் மென்மையும், வேர்க்கடலையின் மொறுமொறுப்பும் சேர்ந்து வழக்கமான உப்புமாவிலிருந்து முற்றிலும் வித்தியாசமான டேஸ்ட்டை கொடுக்கும்!

About the Author

V
Vishnupriya
கா. விஷ்ணுபிரியா செய்தித் துறையில் 3 வருடம் அனுபவம் கொண்டவர். ETV Bharat இணையத்தளத்தில் பணியாற்றிய இவர் தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் மல்டிமீடியா ஜர்னலிஸ்டாக பணிபுரிகிறார். இவர் அரசியல், சினிமா மற்றும் லைஃப் ஸ்டைல் உள்ளிட்ட துறைகளில் தொடர்ந்து எழுதி வருகிறார்.
உணவு
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
காலையில் ஒரே ஒரு கிராம்பு! உடலில் இத்தனை மாற்றங்கள் நடக்குமா? தெரிஞ்சுக்கிட்டா தினமும் சாப்பிடுவீங்க
Recommended image2
Super El Nino: 15800 இந்தியர்களை காவு வாங்கப்போகும் வெப்பம்..! வெளியான பகீர் ரிபோர்ட்..
Recommended image3
Paste Veg or Non Veg: பேஸ்ட் சைவமா? அசைவமா? பலரும் நம்பும் 'கலர் கோடு' ரகசியம் இதுதான்!
Related Stories
Recommended image1
Nungu Payasam: அடிக்கும் வெயிலுக்கு செம கூல் ட்ரீட்! நுங்கு பாயாசம் செய்வது எப்படி?
Recommended image2
kollu Rasam: கொள்ளு ரசம் இப்படி செஞ்சு பாருங்க! மணமும் சுவையும் அசத்தும்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved